உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3-ம் அதிகாரம்:—
செங்குட்டுவன்
போர்ச் செயல்கள்

நெடுஞ்சேரலாதன் விண்ணுலகஞ் சென்றபோது செங்குட்டுவனுக்கு உத்தேசம் 20 - வயது கொள்ளலாம். ஆயின், 55 - ஆண்டு செங்குட்டுவன் வீற்றிருந்ததாகப் பதிற்றுப்பத்துக் கூறுதலால், குறைந்தது 35-வருஷகாலம் இவன் ஆட்சிசெய்தவனாதல் வேண்டும். இந் நீடித்த ஆட்சியில் நிகழ்ந்த இவன் செய்திகள் முழுதுந் தெரியக்கூடவில்லை. ஆயினும், சிலப்பதிகாரமும் பதிற்றுப்பத்தும், இவனால் நிகழ்த்தப்பட்ட அருஞ்செயல்கள் சிலவற்றைக் குறித்திருக்கின்றன. அவற்றிற்கண்ட செங்குட்டுவன் வீரச்செயல்களிலே சிறப்புடையவை அடியில் வருவனவாம்.

1. தன் தாயின் பொருட்டுச் சமைத்த படிமத்தைக் கங்கை நீராட்டச் சென்றபோது, ஆங்கெதிர்த்த ஆரியவாச ருடன் நடத்திய போர்.

2. கொங்கர் செங்களத்து நடத்திய போர்

3. கடல்வழியே சென்று நடத்திய போர்

4. பழையன் மாறனுடன் நடத்திய போர்

5. ஒன்பது சோழருடன் நடத்திய போர்

என்பன. இப்போர்களிற் சில, இன்ன காரணம் பற்றி நிகழ்ந் தன என்ற விவரத்தைச் செங்குட்டுவன் சகோதரரே விளக்கின-