72
சேரன் - செங்குட்டுவன்
குப்பின் மாடலன் வாயினின்றும் கேட்டறிந்து வியப்புற்றிருந்த காலையில், விரிந்தஞாலத்தைப் பேரிருள் விழுங்கும்படி வந்த மாலைக்காலத்தே, செந்தீப் பரந்தது போன்ற மேலைத் திசை விளக்கமெய்த வெண்பிறை தோன்றியது. அங்ஙன மெழுந்த பிறையைப் பெருந்தகையான செங்குட்டுவன் நோக் கினான். அப்போது பக்கத்திருந்த நிமித்திகன் (பெருங்கணி ) சமயமறிந்து அரசனைவாழ்த்தி, ‘வேந்தர் வேந்தே! வஞ்சியி னின்றும் தேவரீர் புறப்பட்டு இன்றோடு முப்பத்திரண்டு மா தங்களாகின்றன’ என்றான். எனலும், செங்குட்டுவன் அக்கங்கைப்பாடியில், மரமுளைகளால் ஒழுங்காக நிரைக்கப்பட்டுப் படங்குகளையே மதிலாகவுடைய தேர்வீதியுள்ளே, சிறிதும் பெரிதுமாய்க் குன்றுகளைக் கண்டாற்போல் விளங்கும் கூட காரங்களமைந்த முடுக்கின் ஒருபக்கமாகச் சென்று, வேலைப்பாடு மிக்கதும் சித்திரவிதானமமைந்ததுமான அத்தாணி மண்டபத்தை அடைந்து, ஆங்குள்ள பொற்சிங்காதனத்தே வீற்றிருந்து வாயில் காவலரால் மாடலமறையோனை ஆங்கழைக்கச் செய்தனன். அவன் வந்ததும், செங்குட்டுவன் அவ்வந்தணனை நோக்கி ‘என் மைத்துனனாகிய சோழனுடன் பகைத்த இளங்கோவேந்தர் போரில் இறந்தபின்னர், அச் சோணாட்டரசனது கொற்றமும் செங்கோலும் கேடின்றியுள்ளனவோ’ என்று உசாவ, மாடலனும், அரசனை வாழ்த்தி ‘வேந்தே! தேவரும் வியப்பத் தூங்கெயில் மூன்றையும் [1] எறிந்தவனது வேல் வெற்றியும், குறுநடையுடைய புறாவின் பெருந்துயரமும் அதனைத் துரத்திவந்த பருந்தினிடும்பையும்
- ↑ இவன் ஆகாசத்திற் சரித்துவந்த அசுரர்களது மூன்றெயில்களையும் அழித்தவனென்று தமிழ் நூல்களிற் புகழப்படுவன்.