உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

சேரன் செங்குட்டுவன்


அம்மான்சேயையும்பற்றி யாமீண்டெழுதியவற்றிற் சில புற நானூறு முதலியவற்றைக்கொண்டு ஊகித்தனவாம் ; ஆத லின், அறிஞர் அவற்றை ஏற்றபெற்றி ஆராய்ந்து கொள்ளக் கடவர். இவற்றால், செங்குட்டுவன் காலத்துச் சோழரை அடியில் வருமாறு குறிக்கலாம்.

(உறையூர்)

(புகார்)

மணக் கிள்ளி

கரிகாற்பெருவளத்தான்.

(காரியாற்றுத் துஞ்சிய) நெடுங்கிள்ளி

கிள்ளிவளவன்.


(இராசசூயம் வேட்ட) பெருநற் கிள்ளி, (சேட்சென்னி) நலங்கிள்ளி.


[பாண்டியர்.)

இனிச் செங்குட்டுவனகாலத்து விளங்கிய பாணடியா ஆரியப்படைந்த நெடுஞ்செழியனும், அவன் தம்பியோ மக னோவாகிய வெற்றிவேற்செழியனுமாவர். செங்குட்டுவன் சிறிய தந்தையும் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் தம்பியும் மாகிய பல்யானைச் செல்கெழுகுட்டுவனும், ஆரியப்படைந்த நெடுஞ்செழியனும் சமகாலத்தவராகத் தெரிகின்றது.[1] * பிற் கூறிய செழியனே கோவலனை அநியாயமாகக் கொல்வித்து அவ்வநீதியை உணர்ந்து தன்மனைவியுடன் உயிர் விட்டவன். வடவாரியர் படை கடந்து, தென்றமிழ்நா டொருங்குகா ணப், புரைதீர்கற்பிற் றேவிதன்னுடன், அரசு கட்டிலிற்

அஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்" என்று இவனைச் சிறப்


  1. * இது, சிலப்பதிகாரம் கட்டுரை காதையில் வரும் பராசரனென் னும் பார்ப்பான் வரலாற்றால் அறியப்படும்.