உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சம காலத்தரசர்.

103


குச் சேனாபதியாகவிருந்து உதவிபுரிந்து வந்தான்; ஆனால், இவனும் அதிர்ஷ்டவீனத்தால் இடையில் இறந்துவிட்டான். விடவே, ஆண்டில் இளையனாய்ப் பட்டமெய்திய பெருநற் கிள்ளிக்கு விரோதமாக அவன் ஞாதியரசரெல்லாம் கிளம்பிப் பெருங்கலகம் விளைப்பாராயினர். இக்காலத்தே, அவ்விளஞ் சோழன் தனக்குப் பெருந்துணைவனாகவிருந்த மலையமானது முள்ளூர்மலையில் ஓடி ஒளிக்கும்படி நேர்ந்தது. இவனை இவ்வாபத்துக் காலத்திற் காத்து வந்தவன், முற்கூறிய மலைய மான்மகன் திருக்கண்ணன் என்பான்.[1] * இங்ஙனம் தன் அம் மான் மகனுக்கு நேர்ந்த ஆபத்தைக் கேட்டதும், செங்குட்டு வன் விரைந்து சென்று, அவனுக்குப் பகைவராய்த் தோன் றிய சோழரொன்பதின்மரை உறையூரையடுத்த நேரிவாயி லில் அழித்துத் தன் மைத்துனச்சோழனைப் பட்டத்தில் நிறுவினான்.[2] இச்செய்தி முன்னரும் விளக்கப்பட்டது. இங்ஙனம் செங்குட்டுவன் செய்தது, அவன் இரண்டாமுறை வடநாடு சென்று வந்ததற்கு இரண்டொரு வருஷங்கட்கு முந்தியதாகும்; அஃதாவது - அவனது 45-ம் வயதை ஒட் டியதாதல்வேண்டும். இவ்வாறு, செங்குட்டுவனால் உதவி புரியப்பெற்றவனே, பிற்காலத்திற் பெருவீரனாய், 'இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி' எனச் சிறப்பிக்கப்பெற்றவன் எனத் தெரிகின்றது.[3] இவனே, செங்குட்டுவன், கண்ண கிக்குக் கோயிலெடுத்துச் சிறப்பித்த செய்தி கேட்டுத் தானும் உறையூரிற் கோயிலொன்று கட்டி, அப்பத்தினிக்குத் திருவி

ழாவெடுத்துச் சிறப்பித்தனன். [4]* செங்குட்டுவனம்மானையும்


  1. * புறநானூறு. 174-ம் பாட்டில் இச்செய்தி குறிப்பிடப்படுதல் காண்க.
  2. சிலப். 27: 118-23.
  3. t புறம். 16.
  4. 5 சிலப். உரை பெறு கட்டுரை.