உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

சேரன் - செங்குட்டுவன்


காணப்படுதல் அறியத்தக்கது. இம்மாறன், 'சித்திரமாடத் துத் துஞ்சிய' என்னும் அடையுடன் பிற்காலத்தில் வழங்கப் பட்டான். நக்கீரர் முதலியோரால் பாடப்பட்டவனாக அந் நூலிற்கண்ட 'இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனின் இவன் வேறானவன். நற்றிணை முதலிய தொகை நூல்களிலே இச்சாத்தனாரால் பாடப்பட்டனவாகக் காணப்படும் செய்யுள் கள் சிலவுண்டு. இப் புலவர்பெருமானது வாக்கினினிமையும் பெருமையும் பிற சிறப்புக்களும், மஹாமஹோபாத்யாய - ஐய ரவர்கள் வெளியிட்ட மணிமேகலை மூலம் அறிஞரெல்லாம் அறிந்து மகிழ்ந்தவையாதலால், இங்கு விரித்திலேம்.


10-ம் அதி:-

செங்குட்டுவன்

நாடும் - வஞ்சி மாநகரமும்.


1. நாடு.

சேரதேசம் என்பது, கருவூர்ப்பிரதேச முட்படக் கோயம்புத்தூர் சேலம் நீலகிரி 'ஜில்லா'க்களும், மைசூர் நாட் டின் தென்பகுதியும் மேற்குத்தொடர்ச்சிமலை நெடுகவுள்ள கடற்கரைப் பக்கங்களுமாம். இந்நாடு, ஒவ்வொரு காலத்து விரிந்துங் குறைந்து இருந்தமையால், இதனெல்லையை வரை யறுத்துக் கூறுதல் அரிது. செங்குட்டுவன், அவன் காலத்தே சிறந்து விளங்கிய பெருவீரனாதலின், அவன் நாடு, பண்டை யினும் விரிவுடையதாகவே இருந்திருத்தல் வேண்டும். இவன் வென்றடிப்படுத்திய நாடுகளில், கொடுகூர் என்பதும் ஒன்