194
சேரன் - செங்குட்டுவன்
இனி, செங்குட்டுவன் சென்றிருந்த பேரியாற்றங்கரைக்
குச் சமீபித்ததும், கண்ணகி விண்ணாடு சென்றதுமான
செங்குன்று*[1] என்னும் மலையே, அச்சேரன் பத்தினிதேவிக்
குக் கோயிலெடுத்துச் சிறப்பித்த இடமாகும். கண்ணகியின்
உற்றார் அவள் கோயிலை அடைந்ததையும், அவரை நோக்கி
அப்பத்தினிக்கடவுள் கூறிய வார்த்தையையும் இளங்கோ
வடிகள் எழுதுமிடத்து :-
"வையையொரு வழிக்கொண்டு,
மாமலைமீ மிசையேறிக் கோமகடன் கோயில்புக்கு"
(சிலப். 29 உரைப்பாட்டுமடை )
"வென்வேலான் குன்றில் விளையாட்டி யானகலேன்
என்னோடுந் தோழிமீ ரெல்லாரும் வம்மெல்லாம்
(ஷை. ஷை.)
என முறையே கூறுதலால், பத்தினிக்கோயில் கருவூர்க்கு
வெகு தூரத்தில் மலைமேலமைந்திருந்தமை புலப்படும். அன்
றியும், பத்தினிப் பிரதிஷ்டைக்குரிய முற்காரியங்களைச்
செங்குட்டுவன் வஞ்சியிலிருந்தே செய்துவந்தவனென்ப,
சிறப்புடைக் கம்மியர் தம்மொடுஞ் சென்று
பால் பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து
கடவுண் மங்கலஞ் செய்கென ஏவினன்
(சிலப். 28-223, 225, 233)
- ↑ * கண்ணகி சுவர்க்கம் புக்க மலை, செங்கோடு என்பது, அரும் பதவுரையாசிரியர் கருத்து (சிலப். அரும்பத . பக். 74); அடியார்க்கு கல்லார், அவரெழுதிய செங்கோடென்பது இப்போது சேலம் ஜில்லா வைச்சேர்ந்த திருச்செங்கோடாகக் கருதி, அவ்வூர் கண்ணகி விண் ணாடு சென்ற இடமாகாதென்றும், செங்குட்டுவன் சென்றிருந்த பேரியாற்றங்கரையை அடுத்த செங்குன்றே அவ்விடமாதல் வேண் ம்ெ என்றும் எழுதினர் (சிலப். பதிகம். 3 உரை).