உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

சேரன் செங்குட்டுவன்


படுத்திய செய்தியை இளங்கோவடிகள் அழகுபெறக் கூறுதல் அறிந்து மகிழத்தக்கது.[1] * இக்காலத்து நம்மையாளும் அரசாங்கத்தாரும் போரிற் பெருந்திறல் காட்டும் வீரசிகா மணிகட்குப் பட்டமும் பதக்கமும் (Victoria Cross) அளித் துப்பாராட்டி வரும் முறையானது, பழைய தமிழ்வேந்தராற் கைக்கொள்ளப்பட்டதொன்றே என்பதையறிய நம்மவரில் யார்தாம் மகிழார்? இவ்வளவோ? போரிற் பகைவரை வென்று கவர்ந்த பொருள்கள் எத்துணை அருமையும் பெரு மையும் உடையவையாயினும், அவற்றைத் தம் வீரர்களுக் கும், போர்க்களம் பாடும் புலவர்க்கும், மற்ற இரவலர்க்கும் வேண்டிய வேண்டியாங்கு அளித்து மகிழ்வதும் பண்டை அரசர்கொண்ட ஒழுக்கமாகவும் தெரிகின்றது. செங்குட்டுவன் தந்தை இங்ஙனமே நன்னகர் மாந்தை முற்றத் தொன்னார் - பணிதிறை தந்த பாடுசால் நன்கலங்களை வேண்டியவர்க்கு அளித்தானென்று மாமூலனாரும்,[2] 1 அச்சேரலாதன் மக னான செங்குட்டுவன் "பெரிய வாயினு மமரகத்துப் பெற்ற - தரியவென்னாது ஓம்பாது வீசினானென்று பரணரும்[3] கூறி யிருத்தல் குறிப்பிடத்தக்கது.


போரில் தம் பெருந்திறமையைக் காட்டி இறந்த வீரர்க்கு வீரக்கல் என்ற நடுகல் நாட்டி அவரைக் கெளர விக்கு முறை தொல்காப்பிய முதலிய முன்னூல்களில் விளங் கக் கூறப்பட்டுள்ளது.[4] ஆனால், தம் கணவருடன் உயிர் நீத்த பத்தினிகளுக்கு அவ்வாறு கல்லமைத்துக் கெளரவிக் கும் வழக்கை அந்நூல்களிற் காணுதல் அரிதாம். ஆயினும்,

.


  1. * சிலப். 27. 23-44.
  2. t அகநானூறு. 127.
  3. 1 பதிற்றுப்பத்து. 44
  4. ஈ தொல். பொருளதி. 60.