அரசியல்
147
இச்சேனைப்பெருக்கை வரையறுக்கவியலாமல், "தண்டத் தலைவருந் தலைத்தார்ச் சேனையும், வெண்டலைப் புணரியின் விளிம்பு சூழ் போத, மலைமுதுகு நெளிய நிலைநா டதர்பட, உலக மன்னவன்" சென்றான் என்றார்.[1] * யாத்திரையிற்சேனை கட்குத் தளர்ச்சியுண்டாகாது உள்ளக்கிளர்ச்சியடையுமாறு நாடகமகளிரும், நகைவேழம்பரும், குயிலுவரும் தங்கள் ஆடல் பாடலழகுகளாலும், விநோதப் பேச்சாலும், வாத் திய இசைகளாலும் மகிழ்ச்சி விளைத்தற்கு உடன் செல்வது பண்டைமரபென்பது இதனால் விளக்கமாகும்.
செங்குட்டுவன்காலத்து நடந்த யுத்தமுறைமையானது தொல்காப்பியமுதலிய முன்னூல்களிற் கண்ட புறத்துறை கட்கும், பழைய தமிழ்வழக்குகட்கும் ஒத்ததாகவே புலப்படு கின்றது. எனவே, செங்குட்டுவன் காலம் வரை அத்தொல் காப்பியமரபுகள் சிதைந்தனவல்லவென்பது பெறப்படும். அம் . முறைகளையெல்லாம் இங்கு விவரிப்பதாயிற் பெருகும்; இளங் கோவடிகளது வஞ்சிக்காண்டத்தைக்கொண்டு அறிக.
போரில் அரசன் வெற்றியடைந்த பின்னர், விழுப்புண் பட்டு இறவாதிருந்த வீரர்களையும், வீரசுவர்க்கம் பெற்ற சூரர்களுடைய மைந்தர்களையும் தன் ஆஸ்தானத்தில் அழைத்து அவர்களையெல்லாம் பெரிதும் அபிமானித்து ஊக் குதல் பழைய மரபாயிருந்தது. நம் வேந்தர் பெருந்தகை , கங்கைக்கரையில் அமைக்கப்பட்ட பாடியிற் பேரோலக்கமாக வீற்றிருந்து, மேற்குறித்த வீரர்க்கெல்லாம் பொன்னாலாகிய
வாகைப்பூக்களைச் சூட்டிப் புகழ்ந்து அவர்களை உற்சாகப்
- ↑ * சிலப். 26. 80 - 83.