பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

சேரன்-செங்குட்டுவன்

மறையோர் வளர்க்கும் நித்தியாக்கினிகளை நமஸ்கரித்தும் செல்வது வழக்கமாகும்.[1]

இங்ஙனமாக அரசன் யாத்திரை செல்லுங் காட்சி மிக்க ஆடம்பரமும் அழகும் வாய்ந்ததாம்: வழிநெடுகவும், நாடகக்கணிகையரும், சூதர் மாகதர் வேதாளிகரும், யானை குதிரை காலாள்வீரர்களும் தம்மரசனை மனமார வாழ்த்திப் பெரியதும் ஆனந்திப்பர். இவ்வாறு செல்லுகின்ற அரசனுடன், நால்வகைச் சேனைகள் மட்டுமன்றி, நாடகமகளிரும், நகைவிளைத்து மகிழச்செய்யும் வேழம்பர் என்போரும், வாத்தியம் வாசிப்போரும் உடன் செல்வது முண்டு. செங்குட்டுவனது வடயாத்திரையிற்சென்ற அளவற்ற காலாட்படையுடன் அடியிற் குறித்த சேனைகளும் பரிவாரங்களுஞ் சென்றன என்று இளங்கோவடிகள் கூறுவர்.[2]

நாடகமகளிர் 52 யானை 500
குயிலுவர் (வாத்தியகாரர்) 208 குதிரை 10000
நகைவேழம்பர் 100 பண்டங்களேற்றிய வண்டிகள் 20000
தேர் 100 சட்டையிட்ட அதிகாரிகள் 1000

இன்னின்ன சரக்குடையது என்றெழுதப்பட்ட பண்டங்களேற்றிய சகடங்கள் இருபதினாயிரமும், அவற்றைக் கண்காணிக்கும் அதிகாரிகள் தொகை ஆயிரமுமாயின், நம் வேந்தனுடன் சென்ற காலாட்படையினளவு கணக்கிறந்தது என்பது சொல்லவும் வேண்டுமோ? இளங்கோவடிகளும்,

  1. இந்நூல். பக். 59.
  2. சிலப். 26. 128—140.