குணாதிசயங்கள்.
157
வன் பெருவீரனாய் அக்காரியத்தையே செய்திருத்தலும் கூடியதன்றோ? செங்குட்டுவனது பிரஸ்தாபத்தைப்பற்றிய தென்னாட்டுச் சாஸனம் ஒன்றுமே இதுவரை காணப்பட வில்லை; அதுபற்றி அத்தகைய வேந்தனொருவனே இருந்தாள் னல்லன் என்று கூறிவிடலாகுமோ? கடைச்சங்க நூல்களின் கண்ட அரசரைப்பற்றிய சாஸனக்குறிப்புக்களே இல்லை என்றிருந்த காலத்து, முதுகுடுமிப் பெருவழுதி, தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், கரிகாலன், கோச்செங்கணான் போன்றவரைப்பற்றிய சாஸனக்குறிப்புக் கள் சிறிது சிறிதாகச் சமீபத்திற்றான் காணப்பட்டுவருகின் றன. அதுபோலவே, செங்குட்டுவனது அருமை பெருமை களும் நாளடைவில் வெளிப்படுதல் கூடியதே. ஆதலால், சாஸன சாக்ஷிக ளில்லாமைபற்றி இலக்கியச் செய்திகளையெல் லாம் புறக்கணித்துவிடுதல் கூடாதென்பதே எங்கருத்து. செங்குட்டுவன் வடநாட்டிற் படையெடுத்துச் சென்றதற்குக் காரணம் தமிழ் வேந்தர்கள் தம் முத்திரைகளை இமயத்திற் பதித்தவர்' என்ற பெருமையை வடவரசர் சிலர் இகழ்ந்து கூறியதனால், அப்பெருமை தங்கட்குண்டென்பதை மெய்ப் பித்தற்காகவே என்பது இளங்கோவடிகள் வாக்கால் நெடுக உணர்ந்தோம். அங்ஙனம் தமிழராற்றலை வடவர்க்கு மெய்ப் பித்த நம் சோர்பெருமானது அருஞ்செயலைச் சர்ஸன ஆதார மின்மை பற்றிச் சிலர் எளிதாக்கிவிடுவராயின், அஃது அவ் வடவேந்தர் செயலினும் அதிசயிக்கத்தக்கதேயன்றோ !
செங்குட்டுவன், வீரமிகுதியோடு மதிநுட்பமிக்கவனாக வும் இருந்தான். அறிஞர் பலருடன் அளவளாவி அறிய வேண்டுவனவற்றை நன்கறிந்தவன் இவனென்பது, 'புரை