பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

சேரன் - செங்குட்டுவன்

யோர் தம்மொடு பொருந்த வுணர்ந்த அரச ரேறே"[1] எனவும், “புலவரையிறந்தோய்'”[2] எனவும் தத்துவஞானியாகிய மாடலமறையோனே நம் சேரனை அழைத்தலால் அறியலாம். மதுரையிற் கோவலனைக் கொல்வித்து, அத்தவற்றையறிந்ததும் பாண்டியன் தன்னுயிர் நீத்த செய்தியைச் சாத்தனார் வாயாற் செங்குட்டுவன் முதன்முதற்கேட்டபோது அவ்வரசனது செய்திக்கு மிகவும் வருந்தி,

“எம்மோ ரன்ன வேந்தர்க் கிற்றெனச்
செம்மையி னிகந்தசொற் செவிப்புலம் படாமுன்
உயிர்பதிப் பெயர்ந்தமை யுறுக வீங்கென
வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது;
மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்
பிழையுவி ரெய்திற் பெரும்பே ரச்சம்
குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்

துன்ப மல்லது தொழுதக வில்லை” (சிலப். 25. 95-104.)

என்று கூறிபோந்த வார்த்தைகள், உண்மையில் எவ்வளவு பொருள் பொதிந்துள்ளன? இளங்கோவடிகள் பேரியாற்றங் கரையில் தம் தமயனுடனிருந்து அவன் வாய்ப்படக் கேட்டெழுதிய அழகிய வசனங்களன்றோ இவை? புலவர் பெருமக்களிடம் இவன் வைத்திருந்த மதிப்பும் அன்பும் முற்கூறிய “இருபெரும்புலவர்” என்ற அதிகாரத்தால் விளங்கற்பாலன.

நம் சேரவேந்தனது செங்கோற்பெருமையும் மதிக்கத்தக்கதே. தன்னாட்டுக் குடிகளைப் பெரிதும் அபிமானித்து


  1. சிலப். 28. 128-4
  2. ௸. ௸. 174.