பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குணாதிசயங்கள்.

159


ஆட்சிபுரிவதிற் பெருநோக்குடையவன் இவனென்பது, ஒரு சமயத்து இவன்செய்த சபதத்தில் " வறிது மீளுமென் வாய்வா ளாகிற் - குடிநடுக் குறூஉங் கோலே னாகுக [1]* என்று கூறியிருப்பதொன்றானே தெளிவாகும். குடிகளும் அங்ஙனமே இவன்பாற் பேரன்பு பூண்டிருந்த செய்தி முன்னரே குறிப்பிட்டோம். இவ்வேந்தனது சகோதர அபிமா னத்தையும் ஈண்டுக் குறித்தல் தகும். தன் சகோதரரான இளங்கோவடிகள் முற்றத்துறந்த முனிவரராயிருப்பினும், அவசியமான காலத்தன்றி அவ்வடிகளை இவ்வரசன் விட்டு நீங்க கியவனல்லன். அவ்வாறே, ராஜருஷி'யாகிய அடிகளும் தம் தமையனிடம் பிறவிக்குற்ற அன்பைப் பெற்றிருந்தவ ரேயாவர். ஆனால், அதுபற்றி, மூவேந்தர்க்கும் பொதுவாக ஒரு காப்பியஞ்செய்யத் தொடங்கிய தாம், நடுநிலை பிறழ, தம் தமையனை அதிகமாகப் புனைந்து கூறினவராகத் தோற் றவில்லை. அடியார்க்கு நல்லாரும் இவ்வடிகளது பொது நோக்கை அடிக்கடி புகழ்தலுங் காணலாம்.[2] ஆனால், வஞ் சிக்காண்ட முழுதும், செங்குட்டுவன் புகழையே அவ்வடி கள் கூறியதென்னெனின், கண்ணகி பொருட்டு அரியபெரிய செயல்களைப் புரிந்து சிறப்பித்த பெருமை செங்குட்டுவனதே யாதலின், எடுத்துக்கொண்ட காப்பிய நிலைக்கேற்ப அவனைப் பாராட்டுதலும் இன்றியமையாததாயிற்றென அறிக. இவ்வளவு பெருமையுடன், நம் சோர்பெருமான் சிறிது முன்கோபமுடையவனாகவும் தோற்றுகிறான். ஆயினும், பெரிய

யோர் கூறும் நன்மொழிகளை ஏற்றுக்கொள்வதில் இவன்


  1. * சிலப், 26. 15, 18. ஷை 25, 5 அரும்பதவுரை. பக். 66.
  2. + ஷ . 18-ம் காதை. 'முந்நீரிலுன்புக்கும். உரை.