உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலவாராய்ச்சி.

175


வமிசத்தரசர் பிரபலங்குன்றியதுமான கி.பி. 4-ம் நூற்றாண் டின் தொடக்கத்தில், மெளரிய முதல்வனான சந்திரகுப்தனது பெயர் பூண்டு, அவன் தலைநகரான பாடலீபுரத்தில் பிரசித்த வேந்தனொருவன் தோன்றினனென்று சொல்லப்படுகின்றது. இவனையடுத்து மஹாவீரர்களாக சமுத்திரகுப்தனும், அவன் மகன் சந்திரகுப்த-விக்ரமாதித்தனும் விளங்கினர். இவர் களைக் குப்த வமிசத்தவர் என்று பொதுவாகவே சாஸ் னம் குறிக்கின்றதாயினும், இன்னமரபினரென்பதைத் தெளிவாக அறியவிடமில்லை. மேற்குறித்த புதிய சந்திரகுப்த னைத் தலைமையாகக்கொண்டு பாடலியையாண்ட குப்தமரபி னரையே மாமூலனார் மோரியரென்று குறித்தனர் போலும். இதற்கேற்ப, அப்புலவர், இவர்களை வம்ப மோரியர்" என் கின்றார். இதற்குப் 'புதிய மோரியர்' என்பது பொருளாத லால், பழைய மோரியரை விலக்கற்கே இவ்வடை கொடுக்கப் பட்டதாகலாம். எங்ஙனமாயினும், பிற்பட்ட சந்திரகுப்தன் மகன் சமுத்திரகுப்தன் என்பான், பரதகண்டமுழுதுந் திக் விஜயஞ் செய்து தன் வீரப்புகழை எங்கும் பரப்பிய சக்கர வர்த்தியாதலோடு,[1] * அவன் சேரவேந்தனான மாந்தரனை வென் றவனென்றுஞ் சிறப்பிக்கப்படுகின்றான். (இதனை முன்னரே விளக்கினேம்). ஆதலால், இச்சக்கரவர்த்தியின் தென் னாட்டு வருகையையே - 'வடுகர் முன்னுற மோரியர் - தென் றிசை மாதிர முன்னிய வரவிற்கு" என்னும் மாமூலனார் வாக்குக் குறித்ததாகல் வேண்டும். இக் குப்தசக்கரவர்த்

திகட்கு வடுகர்சேனை கூறப்பட்டிருப்பதும் பொருந்தும்;


  1. இவன், சேரநாட்டை யடுத்திருந்த கடம்பவேந்தனான காகுஸ் தன் மகளை மணம்புரிந்தவனென்றுந் தெரிகிறது. (Mysore and Coorg. p. 23).