பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

சேரன் - செங்குட்டுவன்


பாராட்டப்பட்டிருத்தலும் அறியத்தக்கது.[1]* இனி, இம் மோரியர் என்பவர் யாவர்? என்பதே கேள்வியாம்.

மகதவேந்தராய்ப் பாடலீபுரத்திருந்தாண்ட மெளரிய சக்கரவர்த்திகளுள் ஆதி முதல்வனானவன், கி.மு. 321-ல் பட்டமெய்திய சந்திரகுப்தன் என்பான். இவன் காலத்து உற்பத்தியாகிய மெளரிய வமிசம், சுங்க வமிசத்தவனாய் கி.மு. 184-ல் பட்டமெய்திய புஷ்யமித்திரனால் முடிவடைந்ததென்பது புராணங்களாலும் சரித்திரவாராய்ச்சியாலுந் தெளியப் பட்டது. இதற்குப்பின், மெளரியர் பிரஸ்தாபம் வடதேச வரலாறுகளிற் காண்டல் அருமையாம். ஆனால், தக்ஷிணத் திற் கொங்கண முதலிய சில பிரதேசங்களில், மெளரியவமி சத்தவர்சிலர் கி.பி. 6, 7-ஆம் நூற்றாண்டுகளில் இருந்தனர் எனப்படுகின்றது.[2] இவர்களைப்பற்றிய பெருமையாவது பிற வரலாறுகளாவது சரித்திர நூல்களால் விளங்கக்கூடிய நிலையில் இல்லை. இவ்விருவகை மெளரியருள்ளே, முன்ன வர் மிகவும் முற்பட்டவராகவும், பின்னவர் மிகவும் பிற்கா லத்தவராதலோடு பிரபலமற்றவராகவும் காணப்படுதலால், அவ் விருவகையினருள் ஒருவரைப்பற்றியும் மாமூலனார் முதலியோர் கூறினரென்று கருதக்கூடவில்லை. ஆயினும்,

மெளரியர் பிரஸ்தாபத்துக்கு இடமே கிடையாததும், ஆந்திர


  1. *மோரியரது தென்னாட்டுப் படையெழுச்சியில், அவரது சேனை யுடன் தேர் செல்லுதற்குத் தடையாயிருந்த மலையொன்றைக் குடை ந்து வழிசெய்துகொண்டு அவர் தெற்கே வந்தனரென்பது, மேற் கூறிய , மாமூலர், பரணர், ஆத்திரையனார் வாக்குக்களால் அறியலாம். ஆயின், அங்ஙனம் வழியுண்டாக்கப்பட்ட மலை இன்னதென்பது இப் போது விளங்கவில்லை. இப்புலவர் பாடல்களால், புறநானூற்றுரைகா ரர் கொண்ட 'ஓரியர்' என்ற பாடம் பொருத்தமாகாமை காண்க.
  2. t V. A. Smith's Early History of India. p. 183.