காலவாராய்ச்சி.
173
தெம்ழனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியா மையிற் பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி யுருளிய குறைத்த... அறைவாய்."
(ஷை 251.)
எனக் காண்க. இவ்வடிகளிலே, மோரியர் திக்விஜயஞ் செய்து கொண்டு தென்னாடு நோக்கிப் படையெடுத்து வந்த காலத்தே, அவர்க்குப் பணியாமல் எதிர்த்து நின்ற மோகூர் அரசனுடன் அவர்கள் பொதியமலைப்பக்கத்தில் போர்புரிந் தனர் என்ற அரிய செய்தி கூறப்படுதல் காணலாம். இதனுட்கண்ட மோகூர் அரசனாவான், பாண்டியன் சேனாபதி யான பழையன் மாறன் என்பவன்; இவனே மோகூர் என வழங்கப்பட்டவன் என்பதும், செங்குட்டுவனால் இவன் அழிக்கப்பட்ட செய்தியும் முன்னரே குறித்தோம்.[1]* இதனால், மெளரியவரசரது தென்னாட்டு விஜயம், செங்குட்டு வனாற் போரில் வெல்லப்பட்ட பழையன்மாறன் காலத்து நிகழ்ந்ததென்பது தெளிவாகின்றது. இப்பெருவேந்தர் வருகையே நம் சோனைப்பாடிய பரணரால் -
விண்பொரு நெடுவரை யியறேர் மோரியர்
பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த... வரை) எனவும்,
(அகம். 69.)
கள்ளில் ஆத்திரையனார் என்ற புலவரால்-
விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக விடைகழி" எனவும்,
(புறம்.175)
- ↑ இந்நூல். பக்-32, 33.