பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

சேரன் - செங்குட்டுவன்


பாடியிருத்தலால், நம் சேரன் அம்மாந்தானுக்குச் சிறிது பிற்பட்டவனென்பது பெறப்படும் ;[1] * அஃதாவது, 5-ம் நூற்றாண்டின் முற்பாகமென்க. இது நிற்க. சமுத்திரகுப்தனது சாஸனத்துக் கண்ட மாந்தராஜா என்னும் பெயர் தமிழ் நூல்களிற் பயிலுதலறியாமையால், அவனை வேற்று நாட் டரசனாகச் சரித்திர நூலோர் சிலர் கருதுவாராயினர்.

இனி, சமுத்திரகுப்தன் சங்ககாலத்தவனான மாந்தரஞ் சோலை வென்றவன் என்றதற்கேற்ப, மற்றோர் அரிய செய்தி யும் சங்க நூல்களில் குறிப்பிடப்படுதல் கவனிக்கத்தக்கது. முற்கூறியபடி பாடலியழிவைப்பற்றிப் பாடிய மாமூலனாரே, தம் காலத்தில், வடவாரிய வேந்தனொருவன் தென்னாடு நோக் கிப் படையெடுத்துப்போந்த பெருத்த திக்விஜய விஷயம் ஒன்றையும் இருமுறை குறிப்பிடுகின்றார். அவர் கூறுவன :-

"முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்
தென்றிசை மாதிர முன்னிய வாவிற்கு
விண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத்
தொண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த ... வரை)

(அகம். 281).


வெல்கொடித்-
துனைகா லன்ன புனைதேர்க் கோசர்
தொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில்
இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத்


  1. "மாந்தரஞ் சேரல்ற என்ற பெயரைச் சேரனொருவனுக்கு இளங்கோவடிகள் கூறியிருப்பதாலும், அவன், செங்குட்டுவனுக்கு முற்பட்டவனாதல் புலப்படுகின்றது. (சிலப். 23. 84).