பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலவாராய்ச்சி.

171


கடைச்சங்கம் 5-ம் நூற்றாண்டுக்கும் முந்தியதென்பதைக் குறிப்பது மட்டில் நிச்சயமெனலாம்.

சேரன் செங்குட்டுவன்காலம் 4, 5-ம் நூற்றாண்டுகளே எனக்குறிப்பிடும் மேற்கூறிய பிரமாணங்களை, மற்றோர் அரிய செய்தியும் ஆதரியா நின்றது. வடநாட்டில் மகதநாடாண்ட ஆந்திரசக்கரவர்த்திகளது வீழ்ச்சிக்குப்பின் பிரபலம் பெற்று விளங்கிய குப்த வமிச் சக்கரவர்த்திகளுள்ளே , சமுத்திரகுப்தன் என்பான் திக்விஜயஞ்செய்து, இப்பரதகண்ட முழுமையும் தன் வெற்றிப்புகழைப் பரப்பியவனென்பது, சாஸனமூலம் அறியப்படுகின்றது. இம்மன்னர் பெருமான் கி.பி. 326.ல் பட்டமெய்தியவன். இவனது தென்னாட்டுப் படையெழுச்சியில் ஜயிக்கப்பட்ட வேந்தருள்ளே கேரள தேசத்து மாந்தராஜா ஒருவனென்று கூறப்படுகின்றது.*[1] இம்மாந்தராஜா என்பவன் சங்க நூல்களிற் கூறப்படும் மாந் தான் என்பவனாகவே தோற்றுகின்றான். ஆனால், இப்பெயர் கொண்டவரிருவர் இருந்தனரென்பதும், அவருள் ஒருவன் செங்குட்டுவனுக்குச் சிறிது முன்னும், மற்றொருவன் அவ னுக்குச் சிறிது பின்னும் இருந்தவரென்பதும் முன்னமே குறிப்பிட்டோம்.[2] இவருள் முன்னவனே , சமுத்திர குப்தனால் வெல்லப்பட்டவனாகக் கருதினும், அச்சோன் 4-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தவனாதல் வேண்டும், அம் மாந்தாஞ்சேரலைப் பாடிய பாணரே செங்குட்டுவனையும்

-


  1. * Gupta Inscriptions. p. 12. 13; Dr. Fleets Dynasties of the Kanarese Districts. p. 280; Indian Antiquary, Vol. XIV, p. 181.
  2. * இந்நூல்-பக். 18.