170
சேரன் செங்குட்டுவன்
பெருமையை நிலைநாட்டுவதற்கு முன்னதான காலமொன்றில் தான், செங்குட்டுவன் போன்ற சங்ககாலத்தவரான அரசர் திகழ்ந்திருத்தல் வேண்டும் என்பது, ஒருபோதும் தவறான வகமாகாது. அக்காலமாவது 4, 5-ம் நூற்றாண்டே என்க. பல்லவர் இக்காலத்தே தமிழ்நாட்டிற் பிரவேசித்திருத்தல் கூடுமேனும், 6 அல்லது 7-ம் நூற்றாண்டிற்போலப் பிரபலம் பெற்றவரல்லர் என்பது, சரித்திரமூலம் அறியப்பட்டது.
முற்குறித்த நூற்றாண்டுகளே சங்ககாலமாகக் கொள் ளல் பொருந்துமென்பதற்கு மற்றொரு சிறுசான்றுமுண்டு; திகம்பரதரிசனமென்னும் சைந்நூலில், விக்கிரமாப்தம் 526 (கி. பி. 470) -ல் வச்சிரநந்தி என்பவரால் தென்மதுரை யில் ஒரு திராவிடசங்கம் கூட்டப்பட்டதாகச் சொல்லப்படு கின்றது.[1] * சிலர் கருத்துப்படி, இத்திராவிட சங்கத்தையே கடைச்சங்கமென்று கொள்வதற்குத் தகுந்த ஆதாரமில்லை. ஆனால், எக்காரணத்தாலோ கடைச்சங்கம் குலைந்ததை உத் தேசித்து, அதனையடுத்துத் தமிழ் வளர்ச்சி சமயவளர்ச்சி செய்வதற்கு ஒருசங்கம் ஸ்தாபிக்கச் சைநர் இம்முயற்சி செய் திருக்கலாம். இச்சைதிராவிட சங்கத்தினின்றே நாலடியார் முதலிய தமிழ் நூல்கள் எழுந்தனபோலும். இச்சங்கத்தின் நோக்கம், குலைந்த கடைச்சங்கத்தைப் புனருத்தாரணஞ் செய் வதேயாயின், அக்கடைச்சங்கம் இச்சைநசங்கத்துக்குச் சிறிது முற்பட்டதாதல் வேண்டும். அஃதாவது 5-ம் நூற் றாண்டின் முற்பகுதி அல்லது 4-ம் நூற்றாண்டு ஆகும்; எங்
ஙனமாயினும், இத்திராவிட சங்கத்தின் எழுச்சியானது,
- ↑ * Bombay Royal Asiatic Society's Journal. Vol. XVII. No. XLIV. pp. 74