75 ஆணிபல் கெரண்டறைந்து, அவமதித்து, சிலுவைமரத் தூலரின்மேல் உமையேற்றித் துன்பிழைத்த கொடுமையையும் , நீரிலத்தில் உமக்கிழைத்த நிட்டூரச் செயல்களையும் காணுங்கால், உள்ளமெலாம் . கரைந்தும்மை நேசித்தேன்! அவமானம் பலபட்டும், அருவியெனக் குருதியெயும் தவமேனி சதைப்பாடும், 'தாரரியில் கொடுந்துன்டைச் - சுமந்திரன் தனைவிடுத்த துயர்க்கோலம் தனைக்காணும் சமயத்தே உன்நெகிழ்ந்து தளர்ந்தும்மை நேசித்தேன்! சொல்லுமொரு பரலோகச் சுகவாழ்வும் பெருவாழ்வும் இல்லையெனப் போனாலும் 'என் றுமுமை நேசிப்பேன்! அல்லற் பலபடுத்தும்
- அருநரகம் என்றென்று :
இல்லையெனத் தெரிந்தாலும் " என்று முழுக் கஞ்சிடுவேன்! உம்மையே நேசிக்கும் உறுதிக்காய் உம்மிடத்தே கைம்மாறு தனைநோக்கிக் காத்திருப்போ னல்லேன்யான்! ஏனென்றால், என் வாழ்வில் எதிர்பார்க்கும் எதனையுமே தானடைவேன் எனு மறுதி எனக்கில்லை யென்றாலும் ஏசுப் பெருமகனே! எந்நாளும் நானும்மை நேசிப்பேன்; நேசித்தேன்; நேசித்துக் கொண்டிருப்பேன்!