உ0 வேளிர் வரலாறு. கங்கை யமுனைக் கரைகளை நீங்கி மேல்கடலையொட்டிய வேள்புலத்திற் குடியேறிப் பெருகியது போல, அவர் வழிவந்த பதினெண்குடி வேளிரும் அப்புலத்திற்கும் தெற்கணிருந்த பெருங்காடுகளைத் * திரு த்திக்கொண்டே. பரவலாயினர். இன்னோர் நாகரிகம்வாய்ந்த ஜாதி யராதலின், அரசுத்தொழில் படைத் திற முதலியவற்றினும், தாம் முயன்று நின்ற குடியேற்றத்துக்கு இன்றியமையாத உழுதொழில், கொற்றொழில், மண் சுடுதல், நூற்றல், கால்நடைகளை வளர்த் தல்|| மு க ளிய பலவகை விருத்திகளினுங் கைதேர்ந்திருந்தனர்.
- கொண்கானம், துளு நாடு முதலியன. கொண்கானம் முற்காலத்து
வேளிரது ஆட்சிக்குட்பட்டிருந்ததென்பது புறநானாற்றால் (சுருச) அறியப் பட்டது; இனித் துளு நாட்டிற் புகுந்து பரவிய வேளிர் துளுவ - வேளாள எனப்படுவர். இவ்வமிசத்தவராக இந் நாட்டிலுள்ளோர், தம்மைச் சந்திரகுப் தன் வழிவந்த ஆந்திர குலத்தவரெனக் கூறிக்கொள்ளுதல் அறியத்தக்கது. (அபி தானகோசம் - துலுவமிசம் பார்க்க.)
- இவர் செய்தி பின்பு விளக்கப்பட்டுள்ளது,
1 கொல்லரை, ஆந்திர மக்கள் கொல்ல - வேலம ' என்பர் ; வேலம், வேள்மார் என்பதன் திரிபாம். இதனால், வேள்குடி பதினெட்டில் இவரும் அடங்கினவர் என்பது தெரியலாம். 1 மட்கலம் வனைவோர்க்கு வேட்கோ, இருங்கோவேள் என்ற பெயர்கள் நூல்களில் வழங்குதலால், வேளிர் குலத்தில் இவரும் அடங்கியவராதல் வேண் டும். இக்குலத்தோர், முற்காலத்தில் ஆரியமொழியில் வல்லவராயிருந்தவரென் பது- நக்கீரருடன் 'ஆரியம் நன்று தமிழ்தீது' என வாதிட்ட வேட்கோக் குயக்கோடன் செய்தியால் தெரியலாம். (தொல். பொருளதி. பக். எசரு) 'நன்மதி, வேட்கோச் சிறார் ' எனப் புறநானூற்றில் (கூஉ) வருதலின், இக் குலத்துச்சிறுவர் நுண்ணறிவுடையராக. முன்னாளில் மதிக்கப்பட்டிருந்தமை விளங்கும். இக்குயவர், ஆரியா நுட்டானங்கள் தமக்கென்று உடையர். $ பழைய நிகண்டுகளில் 'சாயவேளர்கொல்லி' என இராகப்பகுப்பு ஒன்று காணப்படுதலின் நூற்றலோடு சாயமிடுதலும் இவர் தெரிந்தவரென்பது வெளியாகின்றது. | இவர்கள் ஆயரென வழங்கப்படுவர் ; இன்னோர் நிலையின்றித் தங்கள் ஆடுமாடுகளுடன் சஞ்சரிப்பவரென்பதைப் பாகவதத்திற் பலவிடங்களினுங் காணலாம். இவர்களை யாதவரின் வேறாகப் புராணங்கள் கூறுவனவேனும் ஆந்திரநாட்டார், வேளாளரைப்போலவே தமிழிடையரையும் 'வேலமா' என்ற குலப்பெயரால் அழைத்தலால், வேளிரில் இவரும் அடங்கினவர்போலும். இவ் ஆபரைக் கோவைசிய குலத்தவரென்று புராணங் குறிக்கும். பாண்டியர் ஆதியிற் றென்னாடு புகுந்து அரசியல் தாபித்த காலத்தே இவ் ஆயரும் அவருடன் வந்தவரென்ற செய்தி “ வாடாச்சீர்த் தென்னவன் - தொல்லிசைநட்ட குடி யொடு தோன்றிய - நல்லினத்தாயர் >> 'வீவில் குடிப்பி னிருங்குடியாயர்' (முல்லைக்கலி, ரு, ச.) எனக் கலித்தொகையிற் கூறப்படுதலால் அறியலாம். இவ் ஆய்க்குலத் தாரும் தென்னாட்டிற் சிற்றரசுகள் தாபித்திருந்தனர் எனவும்,