கண வேளிர் வரலாறு. nese Empire) இப்போது ஆட்சிபுரியும் மிக்காடோ - சக்கரவர்த்தி, தமது பழமை பெற்றதும் இடையூறு படாததுமாகிய பரம்பரையில் 123-வது தலைமுறையினராகச் சொல்லப்படுகின்றார். அவ்வேகாதி பத்யத்தை நாட்டிய ஆதிசக்ரவர்த்தியான ஜிம்மு - திந்நோ இற் றைக்கு 2500 ஆண்டுகட்கு முன்புவிளங்கியவர் என்பது ஜப்பானிய- சரித்திரத்தால் தெரியவருகின்றது. இனி, இவ் 2500-வருஷங்களை யும் 123-அரசர்க்கும் பகிர்ந்தால், ஜப்பானிய அரசர் ஒவ்வொருவர்க் கும் 21-ஆண்டே தலைமுறையளவா தல் பெறப்படும். இம்முறையே, ஆயுள்விர்த்தி பெற்ற ஐரோப்பிய நாடுகளில், ரஷ்ய சக்ரவர்த்தி கட்கு 19-ம், இங்கிலாந்து அரசர்க்கும், ஜர்மானிய சக்ரவர்த்திகட் கும் 23-ம், பிராஞ்சு அரசர்க்கு 24-ம் ' சராசரி ' யாட்சிக்காலமாகச் சொல்லப்படுகின்றன. * இவற்றுள்ளே அதிக ஏற்றக்குறைவின்றி ஜப்பானியத்தலைமுறைக்கு அமைந்த 21-ஆண்டளவை நாம் மேற் குறித்த 49-தலைமுறை வேளிர்க்குங் கொண்டு கணிப்போமாயின், கபிலர் பாடிய இருங்கோவேளுக்கு 1000 ஆண்டுகட்கு முற்பட் டதே அவன்வழியின் ஆதிமுன்னோர் தென்னாடு புகுந்த காலமென் பது பெறப்படும் ; படவே, கடைச்சங்கத்தவராகிய கபிலர் பாடிய அவ்வேளின் காலம் 1800-வருஷங்கட்கு முற்பட்டதென்பது இப் போதுள்ள கொள்கையாதலின், வேளிருடைய ஆதிமுன்னோர் தமிழ் நாடு புகுந்தது கி. மு. 10-ம் நூற்றாண்டுக்கும் முந்தியது" என்று நாம் ஒருவாறு கூறத் தடையில்லை என உணர்க. இனி, மேற்கூறிய வேள்புலமக்களும் அவரது தலைவரும், முற் காலத்தே தென்னாட்டிற் குடியேறி வாழ்ந்த வரலாற்றை அடியில் வருமாறு சுருக்கிக்கூறலாம். கண்ணபிரானைத் தலைமையாகக்கொண்ட எண்ணிறந்த யாதவர்கள் பகைவர்க்கஞ்சித் தம் ஆதிபூமியாகிய
- The Chronology of Ancient India. p. 65
+ இக் காலவரையறை, R. C. தத்தர், V. கோபாலையர் முதலியோர் பல ஏ துக்களால் கி. மு. 13 அல்லது 12-ம் நூற்றாண்டில் நடந்ததாகக் கூறியிருக்கும் மஹாபாரத காலத்துக்குச் சிறிது பிற்பட்டு நெருங்கியுள்ள து; இவ்வாறு நெருங் குதல், கண்ணபிரானது வியோகத்தின் பின் வந்தவர் வேள்புலத்தலைவர் என்ற வரலாற்றுடன் ஒத்திருத்தல் சிந்திக்கத்தக்கது. இங்ஙன மன்றி, நம் இதிகாசங் கள் கூறுமாறு', பாரதகாலம் 5000 ஆண்டுகட்கு முன்பென்பதே முடிவாயின், அக்காலத்துக்கு 21-நூற்றாண்டுக்குப்பின் வேளிர் தென்னாடு புகுந்தவராதல் வேண்டும்.