பக்கம்:வேளிர் வரலாறு.djvu/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவு வேளிர் வரலாறு. இனி, வேளிரின் ஆதிமுதல்வர் எக்காலத்தே தென்னாட்டிற் குடியேறியவர் என்பது ஆராயத்தக்கது. ஆசிரியர் - நச்சினார்க் கினியர் எழுதிய செய்திப்படி, இன்னோர் கண்ணபிரானுக்குப் பிற் காலத்தில் வெளியேறியவராகத் தெரிதலால், பொதுவாக, பாரதகாலத் திற்குப் பின் இவர் கள் இங்கு வந்தவராக அறியப்படினும், இன்ன காலத்திற் றென்னாடு புகுந்தவராதல் வேண்டும் என்று சிறப்பாக அறிந்துகொள்வதற்கு ஒரு குறிப்பும் முன்னூலிற் காணப்படுகின் றது : அஃதாவது- மேலே குறித்தபடி, இருங்கோவேள் என்1 பானை நோக்கிக் கபிலர்-' நியே......துவரை யாண்டு - நாற்பத்தொன் பது வழிமுறை வந்த - வேளிருள்வேளே ” எனக் கூறுதலேயாம். * இவ்வாறு சங்கப்புலவர் பாடுதலால், அவர்காலத்தில் வேளிர்வம் சத்தைப்பற்றிப் பிரபலமாக வழங்கிவந்ததொரு செய்தி விளங்குவ தன்றோ? இனி, இந்நாற்பத்தொன்பது என்னும் எண் கொண்டதலை முறைகளின் ஆட்சிக்காலத்தைக்கொண்டு, வேளிரின் ஆதிமுதல்வர் இன்ன காலத்து இங்கு வந்தவராதல் வேண்டுமென ஒருவாறு நாம் ஊகிக்கலாம். முற்காலத்தே, ஆரியாவர்த்தத்தை ஆண்ட பலிபுச் சகவழி அரசர் முப்பத்து மூவர் 486-வருஷமும், மெளரிய - அரசர் பதின்மர் 137-வருஷமும் ஆட்சி புரிந்ததாக + விஷ்ணு - பாகவத புராணங்களிற் கூறப்பட்டுள்ளது. இவற்றை நோக்கின், முதலிற் குறித்த பலிபுச்சகவழியினர் தலைமுறையொன்றற்குச் 'சராசரி' 15- வருஷமும், அடுத்த மெளரியர் 14-வருஷமும் ஆட்சி செய்தவராக ஒரு கணக்கு ஏற்படும். இவ்வாறே, பழமையாகவரும் அந்நிய அர சுகளின் தலைமுறையளவை ஆராயினும், நிகழ்காலத்தில் வல்லரசுக ளில் ஒன்றாக விளங்கும் ஜப்பானிய - ஏகாதிபத்யத்தை (Japa- லுள்ளதோர் நாடு ” என எழுதப்படுதலால், தண்டகாரண்ய தேசமென்ற பழைய வழக்குத் தமிழ் நூல்களிலும் பயின்றிருத்தல் காணலாம்.

  • இற்றைக்கு 900-வருஷங்கட்கு முந்திய சாளுக்கிய சாஸனங்களிலும்,

உதயணன் முதலாக 75-தலைமுறை இவர் முன்னோர் ஆண்டுவந்ததாகக் கூறப் பட்டுள்ளது; இச்சாஸனங்களிற் கண்ட புராணவரலாற்றில் இவர்வமிசம், விஷ் ணுவினின்று தொடங்கினும், பாண்டவரது மரபாகக் கூறப்படுதலால், முற் காலத்தேயே இவர் ஆதிவரலாறு மாறுபாடடைந்ததாகத் தெரிகிறது (In. Ant. 1890. p. 425)

  • விஷ்ணு புராணம்: ச - ம் அம்சம், உச - ம் அத்தியாயம். பாகவதம், கஉ - ம்

ஸ்கந்தம், முதல் அத்யாயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/34&oldid=990597" இலிருந்து மீள்விக்கப்பட்டது