கள் வேளிர் வரலாறு. என்று அழைக்கப்படும் நாட்டுக்கும் வடக்கிலுள்ள மஹாராஷ்டிர தேசமே என முன்னர்க் குறிப்பிட்டோம். கொங்கணமென்பது, முன்பு தமிழ்நாடாகவிருந்தது என்பது, புறநானூற்றில் (கடுச) கொண்கானங்கிழான் என்னும் வேளைப்பற்றிப் பண்டைத் தமிழ்ப் புலவர் பாடியுள்ள பாடல்களால் இனிது விளங்குகிறது. இனி, இக் கொண்கானத்தை அடுத்திருந்த வேட்டிலும், திரிசொல்லாகிய தமிழ் முன்பு வழங்கிவந்தமையால், அது கொடுந்தமிழ் நிலங்களுள் ஒன்றாக எண்ணப்பட்டது போலும். பஞ்ச திராவிட நாடுகளில் * மகாராஷ்டிரமும் கூர்ச்சரமும் அடங்குதல் இக் கொள்கையையே வற்புறுத்துவதுங் காண்க. இனி, வேளிரது நாடு என்னும் பொரு ளுடைய வேணாடு என்ற தொடர் சொல்லை (வேண் - காடு எனப் பிரித்து) தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்” என்புழி, வேண் என்பகே பகமாக வழங்கினர் பிற்கால க்கார்.+ பிள்ளையவர்கள் கூற்றின்படி, திருவாங்கூர் ராஜ்யத்தில் வேணாடு என்பதொன்று உண்டாயினும், அதுவேளிரின் ஆதிபூமியாகாமையின், மகாராஷ்டிரமாகியவேள் புலமே கொடுந்தமிழ்நிலமாகக் கொள்ளத்தக்கது. இனி, சேனாவரையரும் ந.ச்சி னார்க்கினியரும் "செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிருலேத்தும் ” (சொல்-ச00) என்னுந் தொல்காப்பிய - சூத்திரவுரையில், “ பன்னிரு நிலமாவன:-... பொங் கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டி, குட்டம், குடநாடு, பன்றிநாடு, கற்கா நாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவாவடதலை - எனச் செந்தமிழ் நாட்டுத் தென்கீழ்பால் முதலாக வடகீழ்பா லிறுதியாக எண்ணிக்கொள்க” என்பர். இவர்களெழுத்தின்படி, வேணாடு என்பதற்குப் பிரதியாக ஒளிநாடு காணப் படுவதுடன், அவ்வொளிநாடு செந்தமிழ்நாட்டுக்குக் கீழ்பால் உள்ளதாக வும் முடிகின்றது. "செந்தமிழ்நிலமாவது-வையையாற்றின் வடக்கும், மருதயாற் றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்குமாம் " என்பது அவர் கொள்கையாம். இனி, நச்சினார்க்கினியர், " பல் லொளியர் பணிபொடுங்க ” என்ற பட்டினப்பாலையடியின் உரையில், “ ஒளியராவார், மற்றை மண்டலத் திற்கு அரசராதற்குரிய வேளாளர் ” என எழுதல் ஆராயத் தக்கது.
- பஞ்சதிராவிட நாடுகளாவன:- தமிழ், ஆந்திரம், கருநடம், மஹா
ராஷ்டிரம், கூர்ச்சரம் என்பன. இதனால் ஆதி காலத்தே, இவ்வைந்து ம அதிக வேற்றுமை இருந்ததில்லைப்போலும். t தமிழ் மக்கள், பம்பாய் மாகாணத்தை வேள்புலம் வேணாடு என அழைக்கப், பழைய ஆரியமக்கள் தண்டகாரணியதேசம் என அதனை வழங்கிவந்தனர். இச்செய்தி, மஹாராஷ்டிரப் பிராமணர் வைதிக கர்மத்தொடக்கத்துச் செய்து கொள்ளும் சங்கற்பக்கட்டுரையிலே, 'மஹாராஷ்டிரதேசே என்னாது ' தண்ட காரண்யதேசே' எனக்கூறிவருதலால் தெரியலாம். (Dr: Bandarkar's History of Dekkan. p. 138) பதிற்றுப்பத்தில் " தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையை " என்பதனுரையில் (பக் - க.அ.) " தண்டாரணியம் - ஆரியநாட்டி .! M >