உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேளிர் வரலாறு.djvu/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"கூச வேளிர் வரலாறு, இனி, திருவனந்தபுர ஸம்ஸ்தானத்துச் சாஸன பரீக்ஷகராகிய ஸ்ரீமாந்- து. அ. கோபிநாதராயரவர்கள் M. A. "திருவாங்கூர் ஆர்க்ய லாஜிகல் ஸீரீஸ். No. 11, 12.”- களில் வெளிப்ப டு த் தி யு ள் ள கோக்கருந்தடக்கன், விக்கிரமாதித்ய-வரகுணன் என்ற அரசரது சாஸனங்களால், அவ்விருவரும் தந்தையும் மகனுமாக 9-ம் நூற் றாண்டில் இருந்தவர்கள் என்பதும், வேள் ஆயின் மரபினரென்பதும், அவனாண்ட ஆய் குடியே தம் கலைநகராக உடையரென்பதும் விளங் குவதோடு, அன்னோர் யதுவமிசத்து விருஷ்ணிகுலத்தவரென்ற அரிய செய்தியும் வெளியாகின்றது. இன்னும் இவ்வாய் மரபினரின் நாடு தென் திருவாங்கூர் ராஜ்யமே எனவும், இவரது ஆய்குடி கோட் டாறு (Kotaur) என்ற பழமை பெருமைவாய்ந்த ஊரேயாதல் வேண்டுமெனவும், சாஸனங்களில் வேணாடு என வழங்குவது இவ் வாய்நாடே எனவும், 8-ம் நூற்றாண்டில் விளங்கிய ஜடிலவர்ம்மன்- பராந்தகனென்ற பாண்டியனைப்பற்றிய சாஸனங்களில் இவ் வாய் மரபினர், மலைநாட்டு ஆய்வேள் என்றும், வேண் மன்னன் என் றும் வழங்கப்பட்டுள்ளார் எனவும், என் நண்பராகிய ஸ்ரீமாந்- ராயரவர்கள் ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். மேல், வேளிர் வரலாற்றில் 'துவரையாண்ட கண்ணபிரானது வழியினரே வேளிர்” என்றெழுதிய நச்சினார்க்கினியர் கூற்றிற்குப் பொருந்த, பிற்காலத்து ஆய்வமிசத்தரசர், அக்கண்ணனது விருஷ்ணி குலத்தவராகச் சாஸனங்களிலும் கூறப்பட்டிருத்தல், 'வேளிர் யாத வரே' என்னும் என் கொள்கையைக் கரதலாமலகம்போல் விளக்கி நிற்றல் காணலாம். வேணாடு, வேண் மன்னன், ஆய் - வேள் என்ற தொடர்கள் சாஸனங்களில் பயிலுதலுடன் ஆய்குடி என்ற பழைய நகரே பிற்காலத்து ஆய்மரபினர்க்கு உரியதாயிருந்தமையும் அறி யத்தக்கன. இவற்றுள், வேணாடு என்பது, வேளிருள் ஒரு பிரிவின ராகிய ஆய்மரபினர் குடியேறி ஆண்டமைபற்றிப் பின்பு வழங்கிய பெயரே என்பதும், மகாராஷ்டிரமாகிய வேள்புலமே அவர்களது பூர்வ தேசமென்பதற்கு, பிற்பட்ட சாஸனங்களிலன்றிப் பழைய தமிழ் நூல்களில், தென் திருவாங்கூர் வேணாடு என வழங்காமையே சான்றாதலும் கண்டுகொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/50&oldid=990612" இலிருந்து மீள்விக்கப்பட்டது