உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேளிர் வரலாறு.djvu/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சவு வேளிர் வரலாறு. மிகுதியாக நன்கு வழங்கிய வள்ளியோன். இவனது பெருங்கொடைக் குக் கபிலர் மாரியினையே பல்லிடத்தும் உவமை கூறுவர்; 'மாரிவண் பாரி' (பதிற்றுப். எக) 'பாரி யொருவனுமல்லன் - மாரியுமுண்டீண் டுலகுபுரப்பதுவே' (புறம் - கoஎ) எனவருவனவற்றால் உணர்க. இவன், ஒருநாள் பொற்றேரூர்ந்து ஒருகாட்டிற் செல்லும்போது, முல்லைக்கொடியொன்று படர்தற்குக் கொழுகொம்பின்றி வெற்றிடை யிலெழுந்து காற்றால் தளர்ந்து நடுங்குவது கண்டு, அவ்வோரறிவுயிர் மாட்டும் உண்டாகிய பேரருளால், அஃது இனிது படருமாறு, தனது பொற்றேரை அதன் பக்கத்திட்டுத் தன் இணையடி சிவப்ப நடந்து போயினன் என்பர். இவ்வரிய பெரிய வள்ளன்மையே - "பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாரி” (புறம் - உ00) ஊருட னிரவலர்க் கருளித் தேருடன் முல்லைக் கீத்த செல்லா நல்லிசைப் படுமணி யானைப் பறம்பிற் கோமான் நெடுமாப் பாரி” (ஷை - உலக) சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய பறம்பிற் கோமான் பாரி” (சிறுபாணாற்றுப்படை) முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத் தொல்லை இரவாம லீந்த இறைவர்போல் நீயுங் காவாம லீகை கடன்” (வெண்பாமாலை. பாடாண் - சு) என்பனவற்றாற் பாராட்டப்படுவது. தன்னரசிருக்கையாகிய பறம், மலையொழியத் தன்னாட்டு முந்நூறு ஊர்களையும் இவன் இரவலர்க் கே அளித்தனன் என்று கபிலர் கூறுவர்: முந்நூறூர்த்தே தண் பறம்பு நன்னாடு - முந்நூறூரும் பரிசிலர் பெற்றனர்” (புறம் - கக0) என்பதனால் உணர்க: இவனது வரையாவண்மை "கொடுக்கிலாதானைப் பாரியே யென்று கூறினுங்கொடுப்பாரிலை” (தேவாரம்) என்பதனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/64&oldid=990628" இலிருந்து மீள்விக்கப்பட்டது