பக்கம்:வேளிர் வரலாறு.djvu/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள் - பாரி. சக சைவசமயாசாரியராகிய சுந்தரமூர்த்தி நாயனாராலும் எடுத்தாளப் பட்டது என்பதொன்றே இவனது வள்ளற்றலைமையைத் தெள்ளிதிற் புலப்படுத்தும் இங்ஙனம் மாரிபோன்ற வரையாவீகையால், இவன் யாரினும் சிறக்கவிளைத்த பெரும்புகழ்க்கு அழுக்காறு கொண்டு, தமிழ் மூவேந்தரும் ஒருங்குகூடிப் படையெடுத்துப்போய், இவனது பறம் பாகிய மலையரணை நெடுங்காலம் முற்றுகைசெய்ய, அதனால் அவ்வரண் அடைமதிற்பட்டது. * அப்போது வேள்பாரிக்கு உயிர்த்துணைவராய் அக்காலத்தும் அங்கிருந்த கபிலர் என்னும் புலவர் பெருமான் கிளி களை வளர்த்து விடுத்து, அரணுக்கு அப்புறத்தே விளை நிலங்களில் உள்ள நெற்கதிர்களை நாளுங் கொணரச்செய்து, ஆங்கிருந்த குடிப்படை களை அருத்திப், போரால் தளராவண்ணம் பாதுகாத்துவந்தனர். இவ்வரிய கதை- உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று செழுஞ்செந் நெல்லின் விளைகதிர் கொண்டு நெடுந்தா ளாம்பன் மலரொடு கூட்டி யாண்டுபல கழிய வேண்டுவயிற் பிழையாது ஆளிடூஉக் கடந்து வாளம் ருழக்கி ஏந்து கோட் டியானை வேந்த ரோட்டிய கடும்பரிப் புரவிக் கைவண் பாரி தீம்பெரும் பைஞ்சுனைப் பூத்த தேங்கமழ் புதுமலர் நாறுமிவள் நுதலே” எனவரும் அகப்பாட்டாலும் (எ) இதனுட் 'கபிலன் சூழ' என் றது - அரசர் மூவரும் வளைத்திருப்ப அகப் பட்டிருந்து, உணவில் லாமைக் கிளிகளை வளர்த்துக் கதிர்கொண்டு வரவிட்ட கதை" என வரும் அதனுரையாலும் அறியப்படும். இதுவே- உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பி னிரைபறைக் குரீஇயினங் காலைப் போகி முடங்குபுறச் செந்நெல் தரீஇயர் ஓராங்கு

  • அடைக்கப்பட்ட மதிலினுள்ளே தங்குதல்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/65&oldid=990627" இலிருந்து மீள்விக்கப்பட்டது