உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேளிர் வரலாறு.djvu/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Go வேளிர் வரலாறு, இரைதேர் கொட்பின வாகிப் பொழுதுபடப் படர்கொண் மாலைப் படர்தந் தாங்கு” (அகம்-ஙOK) என்பதனால் ஒளவையாராலும் எடுத்துக் கூறப்பட்டதாம். பின் கபிலர், பறம்பைமுற்றிய மூவேந்தரையும் நோக்கி, நீவிர் முத்திறத் தீரும் ஒருங்குகூடித் தானையானை குதிரை முதலிய படைகொண்டு எத்துணைக்காலம் முற்றிப் பொருதீராயினும், இப்பாரியுடைய பறம்பு உம்மாற் கொள்ளுதல் அரிது; இவனது முந்நூறூரையும் இவன்பாற் பாடிப்பெற்ற பரிசிலர் போல நீவிரும் பாடினராய்வரின், கொள்ளுதல் எளிது” என்று, இவனது புரவலர்க்கருமையும் இரவ லர்க்கு எளிமையுமாகிய பெருநிலையைத் தம் இனியபாடலான் அறி விக்க, (புறம்-கக0) அதனால் அவ்வேந்தர் இவனை எதிர்த்து வெல் லுதல் அரிதென்பதோர்ந்து இவனோடு பொருதற்கஞ்சி ஓடினர் என்பர். மேலே, ஏந்துகோட்டி யானை வேந்த ரோட்டிய - கடும் பரிப் புரவிக் கைவண் பாரி” என்றதனால், இவன் அம்மூவேந்தரை யும் வென்றோட்டியமை நன்கு புலப்படும். இதன்பின் மூவேந்த ரும் ஒருங்குகூடி வேறொரு சூழ்ச்சி செய்து பாரியை வஞ்சித்துக் கொன்றனர். இதனை ககஉ-ம் புறப்பாட்டுரையில் ஒருவனை மூவேந் தரும் முற்றியிருந்து வஞ்சித்துக் கொன்றமையின்" எனவருதலால் அறிக. பாரியும் பரிசிலர் இரப்பின் - வாரேன் என்னான் அவர்வரை யன்னே " (புறம்-க04) எனக் கபிலர் பாரியினியல்பு கூறுதலால், அவ் வேந்தர் மூவரும் இவனியல்புக்குத் தகப் பரிசிலர் வேடம் பூண்டோ , பிறரைப் பரிசிலராக விடுத்தோ இவனை இரந்து தம்மகப்படுத்திக் கொன்றனரா தல்வேண்டும். இக்கருத்து- புரிசைப் புறத்தினிற் சேரனும் சோழனும்* போர்புரிய இரியச் சயங்கொண்ட போதினில் யாமினி யீங்கிவனைப் பரிசுக்கு நல்ல கவிபாடி னால்வரும் பாக்யமென்றே வரிசைத் தமிழ்புனை பாரியும் பாண்டியன் மண்டலமே என்னும் பாண்டிமண்டல சதகச் செய்யுளினும் (கச) பயில்வது கண்டுகொள்க. | * இந்நூ லுடையார், பாண்டிமண்டலச் சிறப்பையே கூறிப்போந்தவராத லின், பாண்டியனும் அப்போரில் இரிந்தோடினன் எனக்கூற உடன்பட்டிலர் போலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/66&oldid=990626" இலிருந்து மீள்விக்கப்பட்டது