பக்கம்:வேளிர் வரலாறு.djvu/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள் - பாரி. இங்ஙனம், புரவலர்க்கு இன்னானாய், இரவலர்க்கு இனியனாய் விள ங்கிய நல்லிசை வள்ளலான வேள் -பாரி, மூவேந்தர் சூழ்ச்சியால் இற ந்தபின்னர், அவனுக்கு இன்னுயிர்த்தோழராகிய புலவர் பெருமா னான கபிலர், அவ்வள்ளலை நீத்துத் தமித்துயிர்வாழ்தற்கு மனமில ராயினும், அவனுடைய அறிவுடை மகளிரைக் காப்பதற்கு வேறொரு வரும் இலராதல்பற்றி உயிர்கொண்டு நின்று, அம்மகளிர்க்குத் தக்க அறிவும் பெருமையுமுடைய கணவரைத் தேடநினைந்து, அவர்களு டன், அவர்கட்குந் தமக்கும் பேரன்புமிக்க பறம்பினை விடமுடி யாமலே விடுத்து, அப்பாரியை நினையுந்தோறும் பறம்பினைத் திரும்பி நோக்குந்தோறும் உள்ளம் நெக்குநெக்குருகிக் கண்ணீர்வார நின்று, ஆற்றொணாத் துயராற் பொங்கியெழுந்த அன்புடைப் பாடல்களால் பாரியையும் பறம்புமலையையும் புகழ்ந்துகொண்டே சென்று ஓரூரிற் றங்கினர். அங்கு அன்றிரவு நிலாத்தோன்றியபோது அவருடன் ருந்த பாரியின் அருமை மகளிர், தாம் இதற்கு முந்திய நிலாக்காலத் தில் தமது அரசுநிலையிட்ட திருவுடைநகர்க்கண்ணே இனிது மகி, ழ்ந்து விளையாடியதும், அடுத்த நிலாக்காலத்துத் தாம் தந்தை யிழந்து, தண்பறம்பிழந்து, தமியராய்த் துச்சிலொதுங்கித் துயர் கூரநின்றதும் தம்முள்ளத்தே தோன்ற அப்போது, மனமுருகி அற்றைத் திங்க ளவ்வெண் ணிலவின் - எந்தையு முடையேம், எங்குன்றும் பிறர்கொளார்; இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின் வென்றெறி முரசின் வேந்தரெங் குன்றுங் கொண்டார்; யாம் எந்தையு மிலமே. (புறம்- ககஉ.) என்னும் பாடலைப் பாடினர். இப்பாடலால், இச்செய்யுள் செய்தற்கு ஒரு மாதத்துக்குமுன், பாரி தன்னரசிருக்கையாகிய பறம்பின்கண் தன் மகளிர் முதலியோருடன் இருந்து வாழ்ந்துவந்தவனென்பது புலப்படும். இப்பாடல் சங்கத்தாராற் றொகுக்கப்பட்ட புறநானூற்றில் ஒன்றாகக் காணப்பட்டவாற்றால், இம்மகளிர் நல்லிசைப்புலவராதல்

  • பாரி இறந்தபின், அவன் மனைவியையும் கபிலர் அழைத்துச்சென்றதாக

இன்மையால், அவள் தன் கணவனுடன் உயிர் நீத்தனள் போலும். 1 துச்சில் - பிறர் இருப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/67&oldid=990625" இலிருந்து மீள்விக்கப்பட்டது