உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேளிர் வரலாறு.djvu/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுகூ வேள் - பாரி. புரிசைப் புறத்தினிற் சேர னுஞ் சோழனும் போர்புரிய இரியச் சயங்கொண்ட போழ்தினில் யாமினி யீங்கிவனைப் பரிசுக்கு நல்ல கவிபாடி னால்வரும் பாக்ய மென்றே வரிசைத் தமிழ்புனை பாரியும் பாண்டியன் மண்டலமே” என்று கூறப்பட்டிருத்தலால், பாரி பறம்புநாடு பாண்டி மண்டலத் தைச் சார்ந்ததென்பது அறியப்படும். மதுரையிலுள்ள பழைய சிறைக்கூடத்து வடபுறச்சுவரிலுள்ள கல்லெழுத்திலும்* இப்பறம்பு நாட்டைப்பற்றிக் கூறப்பட்டிருக்கின்றது. இனி, பாண்டிநாட்டுத் திருப்புத்தூர்ச் சிவன்கோயில் தென்மதிலிற் பொறிக்கப்பட்டுள்ள பாண்டியன் - குலசேகரன் சாஸனங்களில், "புறமலைநாட்டுப் பொன் னமராவதியூருடையான் திருக்கொடுங்குன்றூருடையான்” என வரு தலால், புறமலைநாடு என்பதொன்று பாண்டி நாட்டின் கண் இருந்த செய்தியோடு, பொன்னமராவதி, கொடுங்குன்று என்னும் ஊர்கள்! அதனுள் அடங்கியிருந்தமையும் தெரியலாம். இப்புறமலை நாடு, பாரியின் 'பறமலைநாடு' எனப்படுவதின் மரூஉப் போலும். இதற் கேற்ப, அப்பக்கத்துக் கொட்டாம்பட்டி மலைப்பகுதியைச் சேர்ந்த கூற்றம் ‘பிரமநாடு' என இன்றும் வழங்குகின்றது : இதுவும் ஒருகால் பறம்புநாடு என்பதின் திரிபு போலும். இவ்வூகங்களுக்கு ஏற்ப நோக்குமிடத்து, பாரியின் பறம்பு அல்லது பறமலை, கொட்டாம்பட்டி திருப்புத்தூர்ப் பக்கங்களில் உள்ளதொரு மலையாகவே கொள்ளத்தக்கதாம் ; ஆயின், இப்போது 'பிரான்மலை' என வழங்குவதையே பாரிமலையாகக் கோடல் பெரிதும் பொருத்த மாமென்க. ஒருதலையாகக் கூறுமிடத்து, இப்பிரான்மலையே பறமலை யாகச் சொல்லத் தடையுமில்லையாம், என்னெனில், பாண்டி நாட்டுத் தேவாரம்பெற்ற தலங்களுள் கொடுங்குன்றமென வழங்கும் இம்மலை யிற் றிருக்கோயில் கொண்ட சிவபிரானுக்குப் பாரீசுவரமுடையார்

  • இக்கற்கள் வேறோர் இடத்தினின்று பெயர்த்துக் கட்டப்பட்டவை யாத

லால், அதன் சாஸனங்கள் பிறழ்ந்து அங்கங்கே காணப்படுகின்றன.

  • இவை, இன்னும் யாவருங் கண்டு வாசிக்கும் நிலையில் உள்ளன.
  • இவ்வூர்கள், திருப்புத்தூர்ப்பக்கத்து உள்ளவை. கொடுங்குன்றம் - பிரான்

மலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/79&oldid=990635" இலிருந்து மீள்விக்கப்பட்டது