பக்கம்:வேளிர் வரலாறு.djvu/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளிர் வரலாறு. என்றொரு திருநாமம் பழைய சாஸனமொன்றில் உள்ளதென்று தெரிய கிறது.* இதனால், அத்திருப்பதிக்குப் 'பாரீசுவரம்' என்ற பெயரும் முன்னாளில் வழங்கிவந்தமை விளங்கும். பாரீசுவரர்க்குரிய தலம்- பாரீசுவரம்; பாரீசுவரர் என்பதற்குப் பாரி என்பானுக்கு அநுக்ரகம் புரிந்த ஈசுவரர்; அல்லது பாரி பூசித்த ஈசுவரர் என்பன பொருளா கும்; இராமேசுவரம், நாகேசுவரம், பட்டீசுவரம் என்பவற்றுக்கும் இராமன், ஐந்தலைநாகம், பட்டி என்பாள்- இவர்கட்கு அருள்செய்த அல்லது இவர்கள் பூசித்த தலமென்பதே பொருளாமாறு காண்க. ஆகவே, பாரியின் பறமலை இன்னதென்பது இப்போது வெள்ளிடை மலையாயிற்றாம். இப்பறம்புமலை ' பிரான்மலை ' என இக்காலத்து வழங்குவதாயினும், அதன் பழைய பெயர் கொடுங்குன்றம் என்ப தாகவே தெரிகின்றது. இதனால், 'பாரிமலை' அல்லது 'பறமலை' என் பதையே, (சிவபிரான்மலை எனப் பொருள் கொண்ட) பிரான்மலை எனப் பிற்காலத்தார் வழங்கினரோ எனவும் கொள்ளக்கிடக்கின்றது. இது, வளைந்தகுன்றமாதலின் கொடுங்குன்றமென்னும் பெயர்பெற்ற றது. பழைய சங்க நூல்களிற் கூறப்பட்டவாறே, இம்மலை வளமும் பெருமையும் வாய்ந்திருத்தலோடு, சிதைவுற்ற பழைய அரணும் இனிய நீர்ச்சுனைகளும் தேன் மிகுதியுங்கொண்டு, பாண்டி நாட்டின் கீழ்ப்பக்கத்துக்குரிய பெருமலையாக விளங்குகின்றது. இப்பறமலை யின் தொடர்ச்சியாகவுள்ள மற்றொருபகுதி " துவராபதி நாடு” என இக்காலத்தும் வழங்கிவருதல் பழையவேளிர் இப்பக்கத்தே ஆட்சி புரிந்தவர் என்பதைக் குறிப்பிக்கின்றது. இதற்கேற்ப, பிரான்மலை யிலும் அதனையடுத்த சில இடங்களிலும் வேளாள வகுப்பினரில் வேளார்” என்னுங் குடிப்பெயர்பெற்ற சிறு கூட்டத்தார் இன்றும் வசித்துவருதல் கவனிக்கற்பாலது. இவற்றால், பாரியது நாடும் மலை யும் நன்கு விளங்குமாறு கண்டுகொள்க,

  • இச்செய்தியை எனக்கு அன்புடனறிவித்தவர், திருவனந்தபுரம் சிலா

சாஸன அத்யக்ஷரும் என்னண்பருமான ஸ்ரீ மாந்-து. அ கோபிநாதராயர் அவர்கள் MA., இவர்கள் அச்சாஸனமுள்ள இடத்தையுங் குறித்தனுப்புவதாகத் தெரிவித்துள்ளார்கள்.

  • இவராபதி, வேளிருடைய ஆதிநகர் என்பது இவ்வியாசத் தொடக்கத்தே

விளக்கப்பட்டது. துவரங்குறிச்சி என்னும் ஊரும் இப்பக்கத்துண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/80&oldid=990636" இலிருந்து மீள்விக்கப்பட்டது