உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேளிர் வரலாறு.djvu/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்னன் வேண்மான். நன்னன் வேண்மான் என்பவன், சங்கநாளிலே தமிழகத்திற் பெருவள்ளலாக விளங்கிய ஒரு சிற்றரசன். இவன் வேளிர் குலத் தைச் சேர்ந்தவனென்பது, இவனுக்கு வழங்கும் 'வேண்மான்' (அகம்- கஎ.) 'வேள்' (மலைபடுகடாம் கச.) என்னும் அடைகளால் விளங்குகின்றது. வேண்மான்-வேளிர் தலைவன்.* சங்க கால்களிலே, நன்னன் என்னும் பெயருடையாரிருவர் காணப்படுகின்றனர். இவரி லொருவன் பத்துப்பாட்டில் ஒன்றாகிய மலைபடுகடாம் கொண்டவன், அப் பாட்டியற்றிய இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்க் கௌ சிகனார் தாம் பாடிய வேண்மானை நன்னன் சேய் நன்னன் என்று (மலைபடு - அடி - ச.) கூறுதலால், மற்றவனாகிய நன்னன் இவ்வேண் மானுடைய தந்தையென்று தெரிகின்றது. இவ்விருவருள் மகனாகிய நன்னனே புலவர் புகழ்ச்சிக்கு இலக்காக விளங்கியவன். இவனை 'நன்னன் ஆய்' எனவும் வழங்குவர் (அகம்-நருகா). பத்துப்பாட்டில் இந்நன்னற்குப் 'பல்குன்றக்கோட்டத்துச் செங்கண்மாத்துவேள்' (பத்துப்பாட்டு - பக் - கூஎe) என்னும் அடை கொடுக்கப்பட் டிருத்தலால், இவன் நாடு + பல்குன்றக்கோட்டமென்னும் பெயர் கொண்ட தென்பதும், இவன் தலைநகர் செங்கண்மா என்பதும் வெளி யாகின்றன. இவன் மலைநாடு ஏழிற்குன்றம் (அகம்-கருஉ, ஙருகா) எனவும் வழங்கும். அஃது ஏழு மலைப்பகுதிகளைக் கொண்டிருந்தமை யால் அப்பெயர் பெற்றதாகத் தெரிகின்றது. பல்குன்றக்கோட்டம்

  • தொண்டைமான், கோமான் என்பவற்றிற்போல, 'மான்' விகுதி தலை

மைச் சிறப்புணர்த்துவது. வேண்மான் என்பதன் பெண்பால் வேண்மாள் என்பது; இளங்கோவேண்மாள், வேண்மாள் அந்துவஞ்செள்ளை எனச் சிலப்பதி காரத்தும் பதிற்றுப்பத்தினும் முறையே பயின்றுள்ளமை காண்க. . + இக்கோட்டம் பிற்காலத்துச் சாஸனங்களிலும், கூறப்படுகிறது. மண் டைக்குலநாட்டு முருகமங்கலப்பற்று” இக்கோட்டத்தைச் சார்ந்ததாம். (South Indian Inscriptions. Vol. I. p. 102-5.)

  • இப் பெயரே இன்றும் வழங்குவது ; பிற்காலத்தே ஆங்கிலேயர்க்கும்

ஐதர் ஆலிக்கும் போர் நிகழ்ந்த களமாகிய செங்கண்மா இதுவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/81&oldid=990637" இலிருந்து மீள்விக்கப்பட்டது