அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அன்னி பெசண்ட் நாவன்மைக்குப்

விக்கிமூலம் இலிருந்து

5. அன்னிபெசண்ட் 'நா'வன்மைக்குப்
பெர்னாட்ஷா-பிராட்லா பாராட்டு


தாயை இழந்த அன்னி நடைப்பிணம் போலவே நடமாடினார் மகன் ஆர்தர் பற்றிய மனக்கவலை ஓர்புறம்: தாய் பிரிவு மறுபுறம்: கணவனது தொல்லைகள் இன்னொரு புறம் மகள் எமிலியை எப்படி வளர்ப்பது என்ற வாட்டம் வேறோர் புறம் மத எதிர்ப்புகள் அடுத் தோர் புறம் எதிர்கால வாழ்வுக் கவலைகள் எதிர்புறம்: இவ்வாறு கவலை என்ற கடலிலே மிதக்கும் மரத் தெப்பம் போல அலைந்தது அவனது மனம்!


எந்த ஆதரவும் இல்லாமல் தவித்துக்கொண்டு இருக்கும் அன்னியைத் தேற்றி ஆதரவளிக்க இரண்டு பேர்கள் மட்டுமே இருத்தார்கள்! வேறு யாருமல்ல அவர்கள்! அன்னி எழுதிய கட்டுரைகளைப் பத்திரிகையிலே வெளியிட்டுப் புகழ் தேடித் தந்தாரே தாமஸ் ஸ்காட், அவரும். அவரது மனைவியும் தான் அந்த இருவர்!


தாமஸ் ஸ்காட், அன்னியின் மன வேதனையிலே இருந்து மீட்டிட, தனது நூலகத்திற்கு அழைத்தார்! அன்னி, தனது மகளுடன் சென்று புத்தகங்களைப் படித்துத் தனது அறிவை மென்மேலும் வளர்த்துக் கொண்டு, தாய் வருத்தத்தை நீக்கிக் கொண்டார்.

கட்டுரைகள், கதைகள் எழுதுவார்! அவற்றை ஸ்காட்டிடம் கொடுப்பார்! அவர் பத்திரிகையிலே தொடர்த்து வெளியிடுவார் பணம் வரும் அதைக் கொண்டு அன்னி தனது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார்:


மகள் எமிலியை அன்புடன் வளர்ப்பார்! தாயார் எமிலி மகள் அன்னியை எவ்வாறு அருமையுடன் வளர்த்தாரோ, அதைப் போலவே தனது மகள் எமிலியையும் தாயார் நினைப்புடன் வளர்ந்து வந்தார் கூட்டுக் குஞ்சு ஒன்றைத் தாய்ப்பறவை எப்படி வளர்க்குமோ அப்படியே மகளையும் வளர்த்தார் அன்னி!


இத்தகைய இடுக்கண்கள் சூழ்ந்த நேரத்தில்தான். சார்லஸ் பிராட்லா என்ற ஒரு நாவலர் நட்பு அன்னிக்குக் கிடைத்தது. சார்லஸ் பிராட்லா யார்? .


சார்பின் பிராட்லா ஒரு சிறந்த கிறிஸ்துவமத எதிர்ப்புச் சிந்தனையாளர்: பேரறிஞர்; சிறந்த நாவன்மை படைத்த அற்புதமான சொற்பொழிவாளர்: சீர்திருத்தச் செம்மல்; மூடப் பழக்க வழக்கங்களை எதிர்த்துப் பேசக்கூடிய வலமை வாய்ந்தவர்; ஏழைகளின் ஏந்தல்: உழைப்பாளிகளின் தோழர்!


அசர்லஸ் பிராட்லா பேசுகிறார் என்றால், கல்விமான்கள் படையே திரண்டு வந்து கேட்பார்கள்; இங்கிலாந்து நாட்டு இங்கர்சால் என்று அவரை இயம்பலாம். அத்தகைய ஒருவர் பேச்சை அன்னி இதற்கு முன்பு செவிமடுத்தது இல்லை; அவரது நட்பு அன்னிக்கு எதிர்பாரா விதமாகக் கிடைத்தது:


மூதாதையரும்-இயேசுவின் பிறப்பும் என்ற தலைப்பிலே ஓர் அரிய சொற்பொழிவை பிராட்ல ஆற்றினார். அந்தப் பேச்சைக் கேட்கும் வரய்ப்பு அன்னிக்கு ஏற்பட்டது: அன்னியை அவரது அறிவாற்றல் ஈர்த்துவிட்டது.

சார்லஸ் பிராட்லாவுடன் இணைந்து சமுதாயச் சீர்திருத்தப் பணிகளை ஆற்றும் எண்ணம் அன்று முதல் அன்னிக்கு வந்தது. ஏழை எளியவர்கள் பிராட்லாவிடம் திரளாகக் கூடி வந்து பழகும் பழக்கத்தையும் அன்னி நேரில் பார்த்ததால், நம்மாலான பணிகளையும் இந்த ஏழை மக்கட்குச் செய்யலாமே என்ற லட்சிமும் அவருக்கு ஏற்பட்டது:


ஆனால், பிராட்லா அன்னியைத் தன் கூடச் சேரக் கூடாது என்று மறுத்தார். காரணம் நான் ஓர் ஆண், என்னை மதம் சார்பாக எதிர்ப்டோர் ஏராளம் பேர்! அதனால் அவர்கள் தொல்லைகளை ஏற்றுப் போராடி வருகிறேன் நீ ஒரு பெண் உன்னால் சமாளிக்க முடியாது. வம்புகளை விலை கொடுத்து வாங்காதீர் என்று கருணையால் அவர் மறுத்தார்-எச்சரிக்கையும் செய்தார்!


கேட்கவில்லை அன்னி பிடிவாதமாக, தங்களுடன் சேர்ந்துதான். நானும் மத எதிர்ப்பிலே ஈடுபடுவேன்: எனக்கும் அதே எண்ணம் உண்டு தடுக்கவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் அன்னி!


"தேசிய சீர்திருத்தவாதி" என்ற பத்திரிகையை அப்போது பிராட்லா தடத்தி வந்தார் அன்னி அந்த ஏட்டிலே தனது கருத்துக்கனை அச்சமின்றித் தாராளமாக எழுதி வந்தார்! அதனால் ஓரளவு ஊதியமும் வந்து கொண்டிருந்தது மகளையும், குடும்பத்தையும் நடத்தினார்.


பிராட்லா பத்திரிகையில் மதச் சீர்திருத்தம், தொழிலாளர் துறை மாற்றங்கள், மூட நம்பிக்கைகள் எதிர்ப்பு போன்ற கருத்துக்களைத் தொடர்ந்து எழுதி வந்ததால் பழைமை வாதிகளது பகை நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது!

பிராட்லா பேசும் கூட்டங்களுக்கு எல்லாம் அன்னி உடன் செல்வார்; அவருக்கும் பேச்சாற்றல் இயற்கையாகவே இருந்ததால் பிராட்லாவின் மாணவியானார்: அவருக்கும் மேடைப் பேச்சு விருப்பம் ஏற்பட்டது. அதற்கேற்ப ஒரு வாய்ப்பும் வந்தது!


"பெண்கள் ஆரசியல் நிலை" என்ற தலைப்பில் உரை யாற்றிடக் கட்டுறவு நிறுவனம்சார்பாக அழைப்புவந்ததை அன்னி ஏற்றுக் கொண்டார். அச்சம் தவழும் உள்ளத்துடன் பேசச் சென்றார்:


அன்னி ஆற்றிய உரையைக் கண்டு பலர் வியந்தார்கள்; பாராட்டினார்கள்! பிராட்லாவும் கேட்டார்: அற்புதம் என்று புகழ்ந்தார்: அன்று முதல் அவருடன் அன்னியும் சேர்ந்தார்! மேடைகளிலே தென்றலும்-புயலும் சேர்ந்து வீச ஆரம்பித்தன;


அன்னிக்கு எதிர்ப்புகள் மலைபோல உயர்ந்து நின்றன. போற்றுதல்களும் குவிந்தன! தூற்றுதல்களும் பெருகின! சீர்திருத்தம் பேசுவோர்க்கு உலகில் வேறு என்ன கிடைத்திருக்கின்றன; கல்லடிகளும், சொல்லடிகளும், எரிநெகுப்புகளும், நாடு கடத்தல்களும், புதை குழிகளும், சித்திர வதைகளும் தானே! அதே திலையினை அன்னியும் பெற்றார்.


இந்தவித எதிர்ப்புகளால் மனந்தளரவில்லை அன்னி! மாறாக மனவுரமே பெற்றார்! மாலைகள் வந்து குவிந்த போது மன ஆணவம் பெற்றாரில்லை; மாறாக, மேலும் உற்சாக ஊக்கமடைந்தார்:


குறிப்பாகக் கூறுவதானால், இங்கிலாந்து நாடு அன்னிக்கு பெரும்புகழைத் திரட்டி வழங்கியது எனலாம். அதேபோல, ஏளனங்களால், இகழ்மொழிகளால், வசை மழைகளால் பகையும் நெருப்பு போல எரிந்தது; புகை மூட்டங்கள் படர்ந்தன!

அன்னியின் உறவுமுறைகள் அவரை ஒதுக்கி வைத்தன! பேச்சும், போக்குவரத்தும் ஏதும் அவர்களிடம் இல்லாமற் போயின. பெண்ணல்ல இவள், மதத்தைப் புழுதி வாறித் தூற்றும் பிசாசு, சாத்தான், பேய் என்றே அவர்கள் அனைவரும் நினைத்து விட்டார்கள்.


ஆனால், அன்னியின் அப்பாவுடன் பிறந்த அத்தை மேரியின் பிரான்சன் மோரிஸ் என்பவர் மட்டும் அவர் வீட்டிற்கே வந்து பாராட்டி எமிலி சிறுமியைப் பாதுகாத்து வர அன்னியுடன் தங்கிவிட்டார்.


மேபல் எமிலி, கல்வி கற்க எல்லா ஏற்படுகளையும் அன்னி செய்தார்; பள்ளியில் சேர்த்தார் தனது தாய் தன்னைக் கல்வி கற்க என்னென்ன ஏற்பாடுகளைச் செய்தாரோ, அதுபோலவே மகள் எமிவிக்கும் எல்லாம் செய்தார்.


எதிர்ப்புக்கள் காட்டாற்று வெள்ளம் போல் பெருகி மோதியும் கூட, அன்னி அஞ்சா நெஞ்சுடன் தனது பணிகளைச் செய்து வருவதைக் கண்ட அவரது எதிரிகள் ஒன்று கூடி பிராங்க் பெசண்டிடம் சென்று கலகமூட்டினார்கள்!


பிராங்க் அன்னி மீது நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கைத் தொடுத்தார் அதில், "அன்னி மதக்கொள்கைகனில் தம்பிக்கை இல்லாதவர். அவரிடம் என் மகள் இருந்தால் தாய்ப் பழக்கமே மகளுக்கும் வந்து விடும். அதனால் என் மகள் எதிர்கால மத நம்பிக்கை கெட்டுகிடும். எனது மகளை என்னிடமே அனுப்ப வேண்டும்’ என்று கூறியிருந்தார்.


வழக்கும் விசாரணைக்கு வந்தது! அன்னி தனக்காக அவரே வழக்குமன்றத்தில் வாதாடினார்! இருந்தும் தீர்ப்பு அன்னிக்குப் பாதகமாகி. மகளைத் தந்தையிடமே ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பானது மகள் பிரிக்கப்பட்ட அன்னி மனம்-தீப்பட்ட புழுபோல மாறியது:

அன்னிக்கு வழங்கப்பட்டு வந்த ஜீவனாம்சத் தொகையும் பிராங்க்கால் நிறுத்தப்பட்டுவிட்டது. மகள் பிரிவு ஏக்கம் வேறு இந்த நில்லயில் கீல்வாத நோகம் வந்தது அவருக்கு:


அவ்வப்போது பிரித்த இரண்டு குழந்தைகளையும் அன்னி சென்று பார்த்துவிட்டு ஒருவித மனத் திருப்தியோடு திருப்புவார். அதற்கும் பிராங்க் தடை ஏற்படுத்தி விட்டார். அத்தத் தடையை அன்னி வழக்கு மன்றத்திலே தகர்த்தார்.


இருத்தும் கூட, பிராங்க் பீடிவாதமாக, தனது பின்னைகளைப் பார்க்க வரக்கூடாது என்று சொந்த பலத்தைக் காட்டி அன்னிக்கு வேதனைகளை உருவாக்கினார்.


அதனால் அந்தத்தாய், பெற்ற பிள்ளைகனைப் போய் பார்ப்பதை அறவே நிறுத்திக் கொண்டு, என்றாவது ஒரு நாள் பிள்ளைகள் தாயைத் தேடி வரத்தான் செய்வர் என்ற நம்பிக்கையிலே இருந்தபோது, அவர்கள். கருத்து தெரித்தவுடன் தாய் பக்கமே வந்து சேர்ந்தார்கள்.


இலண்டன் பல்கலைக்கழகம் பெண் கல்வி பற்றி ஒரு திட்டம் அறிவித்தது. அது பெண்கள் படித்து ப்ட்டம் பெறுவதற்கான் கல்வித் திட்டம். அன்னி அந்தத் திட்டப்படி மெட்ரிகுலேஷன் படிப்பில் சேர்த்து முதல் தரமாகத் தேர்வு பெற்றார்.


பிறகு, தொடர்ந்து பி.எஸ்.சி. பட்டம் பெற அதே திட்டப்படி சேர்ந்த படித்தார். அவரால் அப்பட்டத்தைப் பெற முடியவில்லை. காரணம், மத எதிர்ப்பு செய்து வரும் அன்னிக்கு எதிரானக் கருத்துடையவர்கள் பல்கலைக் கழகத்திலே அதிகமாக இருந்தார்கன். அதனால் பட்டம் பெறமுடியாமற் போய்விட்டது.


வழக்கம் போல மேடைப் பேச்சாற்றுவதையும் பத்திரிகையில் எழுதுவதையும் மட்டும் அவர் நிறுத்தாமல் தொடர்ந்து செய்து வந்தார், பிராட்லாவுடன் சேர்ந்து பழையபடி சொற்பொழிவாற்றி வந்தார்.


அன்னியை அறியாதார் இங்கிலாந்து நாட்டிலே எவரும் இல்லை. அந்த அளவுக்குப் பிராட்லாவுடன் பணியாற்றி வந்தார். தலைசிறந்த பேச்சாளர்களிலே அன்னியும் ஒருவர்-என்ற பெயரைப் பெற்றிருந்தார்.


எவ்வளவுதான் சிறந்த பேச்சாளராக இருந்தாலும், பிராட்லர் அரசியல் பிற்போக்குவாதி என்ற பெயரைப் பெற்றுவிட்டார் காரணம், வளர்ந்துவரும் பொதுவுடைமை தத்துவங்கட்கு அவர் பரம விரோதி:


பொதுவுடைமைக் கொள்கைகளை வாய்ப்புக் கிடைக்கும்போது எல்லாம், அதை வன்மையாகத் தாக்கிப் பேசுவார். மார்க்சீயத் தொண்டர்களும் பிராட்லா கொள்கைகளைத் தாக்கிப் பேசுவார்கள். இருந்தாலும், பிராட்லா "நா" வன்மையிடம் அவர்கள் பேச்சு எடுபடவில்லை: தோல்வியே கண்டது.


வளர்ந்து வரும் எந்த கொள்கைக்கும் மக்களிடையே ஒரு புது மவுசு உண்டல்லவா? அதைப் பிராட்லா உணரவில்லை.


பொதுவுடைமை எதிர்ப்புப் பிரச்சாரத்தைப் பிராட்லா வன்மையாகச் செய்து வருவதைக் கண்ட அவருடைய நண்பர்கள் பலர் அவரை விட்டுப் பிரிந்து போனார்கள். அவர்களிலே அன்னியும் ஒருவராக விளங்கினார்-ஏன்?


மார்க்ஸ் தத்துவங்கள் இங்கிலாந்து நாட்டிலே தோன்றி வளர்ந்தன: அங்கேதான் அந்த தத்துவங்களின் காரியாலயமும் இருந்தது.


எல்லாவற்றுக்கும் மேலாக, கார்ல்மார்க்ஸ்படமுடியாத துன்பங்களை அனுபவித்து லண்டன் மாநகரிலேயே மறைந்தவர்!

மக்களிடையே இந்த பாசமும்-நேசமும் அப்போது வளர்ந்து கொண்டிருக்கும் நேரம் அது! அதனால் பிராட்லா எதிர்ப்பு, அவரது நண்பர்களுக்கு ஏற்றதாக இல்லாமல் இருத்தது. அன்னிக்கும் அதே நோக்கமே!


மார்க்ஸ் எப்படி வேதனைகளை ஏற்றுக்கொண்டு தனது கொள்கைளைப் பரப்பி வந்தாரோ: ஆதே போலவே, லண்டன் வாழ் மார்க்சீயர்களும், பணம் என்ற ஆசையில்லாமல், பட்டினியோடும்-பசியோடும் அந்தத் தத்துவங்களை மக்களிடையே பிரச்சாரம் செய்து வந்தார்கள்.


இந்த இலட்சிய வெறி, பக்தி தொண்டு, உழைப்பு, தீவிரம் இவை அன்னியின் மனதிலே ஆழப்பதிந்து அவர்கள் மீது ஒரு மதிப்பும், மரியாதையும். அன்பும் உருவானது. அதனாலும், அன்னி பிராட்லாலை விட்டுப் பிரிந்தார் எனலாம்;


மார்க்சியர்களது பேச்சுக்களை அன்னி தொடர்ந்து கேட்டனர்; அந்த தத்துவங்களைப் படித்தார்! அதனால் அவருக்குப் பிராட்லா எதிர்ப்புமீது பற்றறுந்தது!


உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரான ஜார்ஜ் பெர்னாட்ஷா அப்போது ஒரு பொதுவுடைமை வாதியாக இருந்தார். அன்னிக்கும் அந்த நகைச்சுவை எழுத்தாளர் மீது ஒரு தனி மரியாதை உண்டு அவரது தொடர்பு அன்னிக்கு வாய்த்தது.


பெர்னாட்ஷா, அல்லும்-பகலும் பொதுவுடைமைக், கொள்கைக்கும், தொழிலாளர் நலனுக்காகவும் அயராது உழைத்து வருவதை, அன்னி கேட்டும்-பார்த்தும் மகிழ்ந்தார்!


பெர்னாட்ஷா தொடர்பு அன்னிக்கு ஏற்பட்டது முதல், தொழிலாளர் நலனுக்காக அன்னி பேச ஆரம்பித் தார். அவர்கள் வாழும் பகுதிகளுக்கு அடிக்கடி சென்று அவர்களது வாழ்க்கை நிலைகளை அறிந்து வருந்தினார்:


முதலாளிகள், பாட்டாளிகள் உழைப்பின் மீது மஞ்சம் விரித்துக் கொண்டு கோலாகலமாக, ஆடம்பரமாக, சீமான்களாக, கோமான்களாக வாழ்ந்து வரும் நிலைகளைப் பார்த்தார்: தொழிலாளர் மீது பரிதாபப்பட்டார். அப்போது அவருக்கு சமத்துவம் பற்றிய நினைப்பு வந்தது: எல்லாவற்றிலும் சமத்துவம் தேவை என்பதை உணர்ந்தார்!


இந்த லட்சியங்கள் அன்னியைக் கவர்ந்தன. அதனால் மேடைதோறும் தொழிலாளர் வர்க்கத்தை ஆதரித்தும், முதலாளிகளைக் கண்டித்தும், பொதுவுடைமை பூக்க வேண்டிய உணர்வுகளைப் பற்றியும் விரிவாகப் பேசலானார்.


அன்னி,சொற்திறம், நாவன்மை, செஞ்சொல் ஆற்றல், உணர்வுகள் அனைத்தையும் தொழிலாளர்கள் வாழ்க்கைக்காகக் காணிக்கை ஆக்கினார்.


பொதுவுடைமை அன்னியாலும் வளர்த்தது; அன்னியைப் பொதுவுடைமையும் வளர்த்தது! மக்களிடையே அன்னி மார்க்சீயத்தைப் பற்றிப் பேச ஆரம்பிப்பதற்குப் பிறகு, இங்கிலாந்து நாடே மார்க்சீயமாண்பை உணர்ந்தது!


தொழிலாளர்களும் அன்னியின் அரும் ஆற்றலைக் கண்டு அவருக்குப் பொறுப்புக்களை வழங்கினார்கள். எற்றவற்றுக் கேற்றவாறு பல திட்டங்களை அன்னி தீட்டினார்! அதற்காகப் பாடுபட்டார்.


தொழிலாளர் பல நன்மைகளைப் பெற்றார்கள்,

1. அவர்கள் வேலை நேரம் குறைக்கப்பட்டது.
2. தொழிலாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகைகள் நிறுத்தப்ப்ட்டன.
3. தொழிற்சாலைகளில் சுகாதார வசதிகள் ஏற்பட்டன.
4. தேவை ஏற்பட்ட போது போராட்டங்கள் நடத்தப்பட்டன.
5. தொழிலாளர் குழந்தைகட்குரிய நலன்கள் கிடைத்தன.
6. அவர்களது கல்விகட்குரிய வசதிகள் வாய்த்தன.
7. சத்துணவு, உடைகள் ஆகியவைகட்கு மக்களிடம் திதி வசூலாயின.


இவ்வளவு நன்மைகளைப் போராடியே பெற்றார் அன்னி. எப்படியும் தொழிலாளர் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்று உழைத்தார்.


அன்னியின் கோரிக்கைகளுக்கு இங்கிலாந்து நாட்டு மக்கள், பணக்காரர்கள், அரசு அதிகாரிகள் அனைவரிடமும் செல்வாக்கு ஏற்பட்டது. அதற்கு அவரின் சொல் வாக்கே காரணம் என்றால் மிகையன்று:


தொழிலாளர் வாழ்கின்ற பகுதிகளுக்கெல்லாம் சென்றும் அன்னி, அந்த மக்கள் சுகாதரத்தோடு எப்படி வாழ வேண்டும் என்பதற்கான அறிவுரைகளைக் கூறிவருவார்.


தொழிலாளர் நலன்கள் மீது இவ்வளவு ஆக்கறையும் பொறுப்பமுள்ள அன்னி, அதற்காக அவர் உழைத்து வரும் அரும்பாடுகளைக் கண்ட தொழிலாளர்கள், அந்த வீரப்பெண்மணியைத் தெய்வம் போலவே மதித்துப் போற்றி வந்தார்கள்.


அன்னியின் தொழிலாளர்த் தொண்டு, அவரது பேச்சாற்றல், பெரும்புகழை அவருக்கு உருவாக்கியதைக்கண்ட பெர்னாட்ஷாவைப் போன்றவர்களும் பெர்னாட்ஷாவும் மனமார மதித்துப் பாராட்டி மகிழ்த்தார்கள்.


இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்றத்திற்குச் சென்ற அன்னி, தொழிலாளர் நலன்களைக் கண்ட இங்கிலாந்து அரசு தொழிலாளர்களுக்குரிய நன்மைகளை விரிவாகச் செய்து வந்தது.


தொழிலாளர்களுக்கு அடுத்தபடியாக, வேலை இல்லாத மக்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். அவர்கள் பிரச்சினைகளைப் பத்திரிகையிலும் எழுதலானார்.


"ஒன்று மட்டும் உண்மை. வேலையற்றோர் மீது சமுதாயமும்-அரசும் அக்கறை காட்ட வேண்டும். இல்லா விட்டால் அவர்கள்தான் சமுதாயத்திற்கு ஆபத்தானவர்கள் வருங்காலச் சமுதாயம் புரட்சிக்கு வித்திடும்" என்பதைத் தெளிவாகப் பத்திரிகையில் எழுதினார். பாராளுமன்றத்திலும் பேசினார்.


அன்னி இவ்வாறு பேசியதற்கு ஏற்றவாறு, வேலை இல்லாதவர்கள் லண்டனிலே உள்ள டிரபால்கர் என்ல சதுக்கத்தில் கூடி, தங்களது நிலைகளை அரசுக்கு எடுத்துக் கூறிட கூட்டம் போட்டார்கள்.


கருணை காட்டவில்லை அரசு; கடுமையாக நடந்து கொண்டது; சதுக்கத்தில் திரண்டிருந்த அந்த சோக வாழ்வினரால் போக்குவரத்து இடையூறு என்ற காரணத்தைக் கூறி அரசு கூட்டத்தைக் கலைத்தது.


இந்தப் பிரச்சினை அன்னிக்குத் தெரிந்து, உடனே கூட்டத்திற்கு ஓடிவந்து, "கூட்டம் கூடுவதும்-குறைகளை எடுத்துச் சொல்வதும் அடிப்படை உரிமைகள்! அந்த உரிமைகளைப் பறிப்பது. அநியாயம் வேலையும் இல்லை உண்ண உணவும் இல்லை; உடுக்க துணிமணிகளும் இல்லை. இந்த நிலையில் கூட்டம் கூடித் தங்கள் நிலையை அரசுக்கு உணர்த்துவது தவறா?' என்று அன்னி அதே கூட்டத்தில் குரல் எழுப்பினார்.


அந்த உரிமைகளை நிலைநாட்ட ஒரு போராட்டத்தை நடத்த முன்வந்தார், இவருடைய முடிவுக்குப் பொது மக்கள் போதரவு தந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.


ஒவ்வொரு ஞாயிறுதோறும் லண்டனிலே உள்ள் "டிரால்கர்" சதுக்கத்தில் வேலையற்றோர்கள் கூடவேண்டும். பேசும் பேச்சுக்களிலே ஆவர்கள் தங்களது குறைகளை எடுத்துக் கூற வேண்டும் என்றார் அன்னி.


அதற்கேற்ப நூறு வேலையற்றவர்கள் அன்னி தலைமையிலே ஒன்று சேர்ந்தார்கள். அரசு தடை விதித்தது. அன்னி அதைக்கண்டு தளரவில்லை; உரிமையை நிலைநாட்டும் அந்த வேலையற்றோர் போர் தொடர்ந்து நடந்தது.


வேலையற்றோர் நடத்தும் கூட்டத்திற்கு அரசு தடை விதித்ததால், பொதுமக்களது அனுதாபம் அவர்களுக்கு ஏற்பட்டது, பத்திரிகைகளும் அரசு போக்கைக் கண்டித்தன.


அன்னி இந்தப் போராட்டத்தைப் பற்றி இணைப்பு என்ற ஏட்டில் எழுதும்போது, "நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸ் நகரம் எந்தப் புரட்சியை நோக்கிச் சென்றதோ, அந்தப் புரட்சியை நோக்கி நாமும் சென்று கொண்டிருக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.


இந்தப் போராட்ட நிலை எதிர்காலத்தில் எப்படி மாறுமோ என்று எண்ணிய அரசு, நடவடிக்கையால் வேலை வாய்ப்புகள் பெருகின: வேலையற்றோருக்கு வேலைகள் கிடைத்தன!


அன்னி பெசண்ட், முன்னெடுத்த இந்த வேலையற்றோர் நலத் திட்டத்தின் வெற்றியைக் கண்டு மகிழ்ந்தார்! தொடர்ந்து தொழிலாளர் வளவாழ்வின் நலன்களுக்காக தொண்டாற்றினார்.