உள்ளடக்கத்துக்குச் செல்

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/நோயைப் பரப்பியவர்

விக்கிமூலம் இலிருந்து


(37) நோயைப் ரப்பியவர்



அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் அப்டன் ஸிங்க்ளேர் சிறு வயதில் கக்குவான் இருமலால் சிரமப்பட்டார்.

அதனால் மற்ற சிறுவர்கள் அவரை அணுகாமல் அவர்களுடைய பெற்றோர்கள் தடுத்துவிட்டார்கள்.

தனியே இருக்க விரும்பாத ஸிங்க்ளேர், கோபம் கொண்டு அடுத்த வீட்டு, எதிர் வீட்டுப் பையன்களையெல்லாம் கட்டிப் பிடித்து, அவர்களுடைய முகங்களுக்கு எதிரே பலமாக இருமி, இருமி எல்லோருக்கும் இருமல் உண்டாகும்படி செய்து விட்டாராம்.

தன்னுடைய இளமைப் பருவத்து சின்னப் புத்தியைப் பற்றி அவர் வருந்திக் கூறகிறார்.

தற்காலத்தில் 'முதலாளித் தனம்' என்ற நோய், உலகில் இவ்வாறுதான் பரவுவதாக அவர் உதாரணம் கூறுவது உண்டு.