அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/குழந்தைகளின் குழப்பம்

விக்கிமூலம் இலிருந்து


(63) குழந்தைகளின் குழப்பம்



நியூயார்க் நகரில் சின்னஞ்சிறு குழந்தைகள் படிக்கும் ஒரு நர்சரிப் பள்ளிக்கூடம். பள்ளி நேரம் முடிந்தபின்னர், மாலை வேளையில், சில பஸ்கள் வந்து நிற்கும்.

குழந்தைகளோ எந்தப் பஸ்ஸில் ஏறுவது என்று புரியாமல் தவித்தனர்.

அதை அறிந்த பள்ளி நிர்வாகத்தினர், ஒரு பஸ்ஸுக்கு முயல், மற்றொன்றுக்குக் கோழிக் குஞ்சு இன்னொன்றுக்குக் கரடி, இவ்வாறு பல சித்திரங்களை வரைந்து பஸ்ஸில் பொருத்தி விட்டனர். அதன்பின்னர் குழந்தைகள் குழப்பம் இல்லாமல் பஸ்ஸில் ஏறிச் சென்றனர்.