அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/வருமானம் ஏன் குறைகிறது?

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


(64) ருமானம் ன் குறைகிறது?ஜெர்மனியின் பெரும்பகுதிக்கு பிரஷ்யா என்பது அக்காலத்தில் பெயராக இருந்தது. அதற்கு அரசராக இருந்தவர் மகா பிரெடரிக் என்பவர்.

அரசர் பிரெடரிக், ஒரு சமயம் தம்முடைய அமைச்சர்களையும், பிரபுக்களையும், தளபதிகளையும் அழைத்து விருந்து அளித்தார். :

விருந்து முடிந்தபின், அரசர், பல வகையான வரிகளை விதித்து வசூலிக்கிறோம். அவ்வாறு இருந்தும் வருமானம் ஏன் குறைந்து கொண்டே போகிறது? அதன் காரணம் என்ன?” என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார்.

அனுபவம் மிக்க தளபதி எழுந்து "மேன்மை பொருந்திய மன்னர்பிரானே, அது எப்படி என்பதை இதோ உங்களுக்குக் காட்டுகிறேன்” என்று கூறி விட்டு, பெரிய பனிக்கட்டி ஒன்றை தம் கையில் எடுத்துச் சிறிது திருப்பிப் பார்த்தார்; பிறகு

அடுத்தவரிடம் கொடுத்தார். "அப்படியே ஒருவர் பின் ஒருவராக மாறி கடைசியில் மன்னரிடம் போய்ச் சேரட்டும்” என்றார்.

அந்தப் பனிக்கட்டி, மன்னரிடம் போய்ச் சேர்ந்த போது அது ஒரு பட்டாணிக் கடலை அளவாகச் சிறிதாகியது.

வருமானம் ஏன் குறைந்து கொண்டு போகிறது என்ற காரணத்தை மன்னர் உணர்ந்தார்.