அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/போர் முனையில் பிரார்த்தனையா?

விக்கிமூலம் இலிருந்து


(70) போர் முனையில் பிரார்த்தனையா?



கடுமையான குண்டு வீச்சக்கு இலக்காகியது ஒரு நகரம்.

கர்னல் ஒருவர் பெரிய புதருக்குள் போய் ஒளிந்து கொண்டு உரத்த குரலில் கடவுளைப் பிரார்த்தனை செய்யலானார்.

ஆனால், அவருக்கு முன்னே, அங்கே ஒரு சார்ஜெண்ட் நுழைந்து கர்னலுக்கு சமமாய் சத்தம் போட்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

குண்டு வீச்சு நின்றது. கர்னல், சார்ஜெண்டைப் பார்த்து, “என்ன சார்ஜெண்ட்! ஏதோ பிரார்த்தனை செய்து கொண்டிருந்தீர் போல் இருக்கிறதே!" என்று கேட்டார்.

"கர்னல் அவர்களே, புதருக்குள் நாஸ்திகரே கிடையாது” என்றார் சார்ஜெண்ட்.