அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/பேசாமல் கருத்து வேற்றுமையா?
Appearance
(76) பேசாமல் கருத்து வேற்றுமையா?
ருஷ்யாவின் பிரபல நடிகர் போரிஸ் மார்ஷலாவ் என்பவர் ஒரு சமயம், அமெரிக்கா சென்றிருந்தபோது மக்கள் பிரதிநிதி சபையான காங்கிரஸைக் காணச் சென்றார்.
அதைப் பார்த்த பிறகு அவர் கூறியதாவது.
"இந்தக் காங்கிரஸ் சபை மிகவும் அதிசயமாயிருக்கிறது. அதிலே ஒருவர் பேச எழுந்திருக்கிறார். ஆனால், அவர் ஒன்றும் பேசுவதில்லை. எவரும் செவிசாய்த்துக் கேட்பதும் இல்லை. பிறகு, அத்தனை பேரும் கருத்து வேற்றுமை கொண்டு விடுகிறார்கள்” என்றார்.