உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராண மதங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

புராண-மதங்கள்

பட்டினியைப் போலவே காலரா, அம்மை, விஷ ஜுரம், எலும்புருக்கி முதலிய நோய்களும் மக்களின் தேகமனோ பலத்தைக் குறைத்துக்கொண்டிருக்கின்றன. ஆகவே ஆரோக்கியம் திடகாத்திரம் மிகுந்த பேரறிஞர்கள் கடும் போட்டி போட்டுக் கொண்டு நிற்கும் தொழில் உலகில் உண்ண உணவின்றி பிணியாளராய் அறிவிழந்து மதங்களைப் பாதுகாத்து நிற்கும் ஒரு ஜன சமூகம் அத் தொழிற் துறையில் வெற்றி பெறுமென எதிர்பார்க்க முடியுமா?

நாம், கடவுள்களை நிந்திக்கும் கயவர்கள், மதத்தைக் குறைகூறுகிறோம், கண்டிக்கிறோம், என்று உண்மையிலேயே உள்ளம் வருந்தும் அன்பர்கள் சில பேர் இருக்கிறார்கள் - வேறு பலர் உளர் - ஏதாவது சாக்குக் காட்டி நம்மைத் தூற்றுவதையே நோக்கமாகக் கொண்டவர்கள் அவர்களைக் குறித்தல்ல நாம் குறிப்பிடுவது, உண்மையாகவே மனம் வருந்துகிறார்களே அவர்களுக்குக் கூறுகிறோம் - நமது கடவுள்களைப் பற்றியும் மதத்தின் பேராலே கட்டப்பட்டுள்ள கற்பனைக் கதைகள், படித்துவிட்டு சற்றே சிந்திக்கும் எவருக்கும், அருவருப்பைத்தானே கிளறுவதாக இருக்கிறது - அறிவுக்குப் பொருந்தாத ஆபாசங்களை அல்லவா ஆண்டவனின் பெயருடன் இணைத்து இங்கே, மதத் தூள்களாக்கி விட்டனர், மக்களின் பொது அறிவு வளர்ந்து ஆராயும் திறன் வளரும்போது எப்படி அந்தக் கதைகளைப் பக்த யுடன் படிக்கவோ, நம்பவோ முடியும்! - இந் நிலையில், உலகமோ வேகமாக முன்னேறுகிறது நாம் இந்த நாளிலேயும், அந்தப் பழைய, நம்ப முடியாத, ஆபாசமான கதைகளை நம்பத்தான் வேண்டும்; அதுதான் மதவாதி என்பதற்கு இலட்சணம் என்று கூறினால் யாரால் எடுத்துக்கொள்ள முடியும்? சில எடுத்துக் காட்டுங்கள் - இவை, நம் பெரியவர்கள் உச்சிமேல் வைத்துப் போற்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/19&oldid=1697309" இலிருந்து மீள்விக்கப்பட்டது