________________
வினையியல். போனது பொச்சி பாச்சு உலகவழக்கு ஆனது போனது * எனபவை பிற்காலத்தில் வந்த சிதைவென அறியவேண்டும். 73. தனிக்குறலின் முன்னின்றக், ச், ட், ற், இவ்வெழுத்துக்களை யூர்ந்த உகரமீற்றி லுள்ளவைகளும் நிகழ்காலத்தில் கின்று இடைநிலையின் ககரம் இரட்டிக்கப் பெறா தவைகளுமாகிய பகுதிகளுக்குமுன் இடைநிலைத் தகரம் வந்தால் பகுதியீற்று உகரங்கெட இடை நிலைத் தகரம் பின்னின்ற மெய்யாய்த் திரியும். நக்கான் = நகு + த் + ஆன் நக் + க் + ஆன் அட்டான் = அடு + த் + ஆன் அட்+ட்+ ஆன் நகு அடு என்பவற்றில் ககர டகரங்கள் சாக்கரங் களாய் ஒலிக்கும். இறந்தகாறத்தில் மேற்கண்ட ' விதியின்படி இரட்டிக்கும்பொழுது வலிய வச்சா ரணையைப் பெறும். பெற்றான் = பெறு + த் + ஆன் பெற் +ற்+ ஆன் புகு தொடு உறு மிகு படு தகு கெடு தொகு சுடு செறு பெறு விடு இவற்றில் புத, மிகு, தகு, உகு என்பவற்றிற்கு இறக் தகாலத்தில் தகரந்திரியாமல் தகரத்தின் முன் நக ரங் தோன்றும். புகு, புகுந்தான் புக்கான் மிகு, மிகுந்தான் மிக்கான் தகு, தகுந்தான் தக்கான் உகு, உகுந்தான் உக்கான் * போனது என னகரவுயிர் மெய்ப்பின்வருவதோவெனின் அது சான்றோர் செய்யுளில் வராமையின் அது சிதைவு எனப்படும் சேனா தொல். வி. 214.