வீரசோழியம்

விக்கிமூலம் இலிருந்து

வீரசோழியம்
(புரவலன் வீரசோழன் பெயரால் பாடப்பட்ட இலக்கண நூல்)

பொன்பற்றிக் காவலர்
புத்தமித்திரனார் இயற்றியது

திருநெல்வேலித் தென்னிந்திய
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை 1
வெளியீடு 1970

பாயிரம்[தொகு]

கட்டளைக் கலித்துறை

1

மிக்கவன் போதியின் மேதக்(கு) இருந்தவன் மெய்தவத்தால்
தொக்கவன் யார்க்கும் தொடர வொண்ணாதவன் தூயன் எனத்
தக்கவன் பாதம் தலைமேல் புனைந்து தமிழ் உரைக்கப்
புக்கவன் பைம்பொழில் பொன்பற்றி மன் புத்தமித்திரனே

2

ஆயும் குணத்து அவலோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டு
ஏயும் புவனிக்கு இயம்பிய தண்டமிழ் ஈங்கு உரைக்க
நீயும் உளையோ எனில் கருடன் சென்ற நீள் விசும்பில்
ஈயும் பறக்கும் இதற்கு என்கொலோ சொல்லுவது ஏந்திழையே

3

நாமே எழுத்துச் சொல் பொருள் யாப்பு அலங்காரம் எனும்
பா மேவு பஞ்ச அதிகாரமாம் பரப்பைச் சுருருக்கித்
தே மேவிய தொங்கல் தேர் வீரசோழன் திருப் பெயரால்
பூ மேல் உரைப்பன் வடநூல் மரபு புகன்றுகொண்டே

முதலாவது - எழுத்து அதிகாரம்[தொகு]

சந்திப் படலம்[தொகு]

1[தொகு]

அறிந்த எழுத்து அ முன் பன்னிரண்டு ஆவிகள் ஆன, க முன்
பிறந்த பதினட்டு மெய், நடு ஆய்தம், பெயர்த்து இடையா
முறிந்தன அம் மூவாறும், ஙஞணநமன என்று
செறிந்தன மெல்லினம் செப்பாத வல்லினம், தேமொழியே.

2[தொகு]

இறுதிமெய் நீக்கிய ஈராறில் ஐந்து குறில் நெடில் ஏழ்
பெறு வரியான் நெடு நீர்மை அளபு பிணைந்த வர்க்கம்
மறு அறு வல்லொற்று மெல்லொற்றும் ஆம் வன்மை மேல் உகரம்
உறுவது நையும் தொடர்மொழிப் பின்னும் நெடில் பின்னுமே

3[தொகு]

அகரம் வகரத்தினோடு இயைந்து ஔ ஆம் யகரத்தினோடு
அகரம் இயைந்து ஐ அது ஆகும் ஆ ஏ ஓ வினா அந்தம் ஆம்
எகர ஒகர மெய்யில் புள்ளி மேவும் அ இ உ சுட்டாம்
இகரம் குறுகி வரும் குற்றுகரம் பின் ய வரினே

4[தொகு]

ஏயாஎச் சொன்முன் வினாஎடுத் தல்படுத் தல் நலிதல்
ஓயா துரப்பல் எனநால் வகையிற் பிறக்குமெய்கள்
சாயா மயக்கந்தம் முன்னர்ப் பிறவொடு தாமும்வந்து
வீயாத ஈரொற்று மூவொற் றுடனிலை வேண்டுவரே

5[தொகு]

குற்றெழுத் தொன்(று) ஒன் றரையாகு மையௌ இரண்டுநெடில்
ஒற்றெழுத் தாய்தம்இ உஅரை மூன்றள (பு) ஓங்குயிர்மெய்
மற்றெழுத் தன்றுயிர் மாத்திரை யேபெறும் மன்னுகின்ற
ஒற்றெழுத் தின்பின் னுயிர்வரின் ஏறும் ஒளியிழையே

6[தொகு]

உந்தி முதலெழுங் காற்றுப் பிறந்துர முஞ்சிரமும்
பந்த மலிகண் டமுமூக்கும் உற்றண்ணம் பல்லுடனே
முந்து மிதழ்நா மொழியுறுப் பாகு முயற்சியினால்
வந்து நிகழு மெழுத்தென்று சொல்லுவர் வாணுதலே

7[தொகு]

ஆவி யனைத்தும் கசத நபமவ் வரியும்வவ்வில்
ஏவிய எட்டும்யவ் வாறும்ஞந் நான்கும் எல் லாவுலகும்
மேவிய வெண்குடைச் செம்பியன் வீரரா சேந்திரன்றன்
நாவியல் செந்தமிட் சொல்லின் மொழிமுதல் நன்னுதலே

8[தொகு]

ஈறும் மகர ணகரங்க டாமும் இடையினத்தில்
ஏறும் வகரம் ஒழிந்தைந்தும் ஈரைந் தெழிலுயிரும்
வீறுமலிவேங் கடங்கும லிக்கிடை விகாரம்வந் தெய்திடும் மேவிற்றென்று
கூறுந் தமிழினுக் கீற்றெழுத் தாமென்பர் கோல்வளையே

9[தொகு]

நின்றசொலு லீறும் வருஞ்சொன் முதலும் நிரவித்தம்முள்
ஒன்றிடும் போதும் ஒரோமொழிக் கண்ணு முலகிற்கொப்பி
னன்றிய மும்மை விகாரம்வந் தெய்திடும் நன்கியல்பிற்
குன்றுத லின்றி வருதலு முண்டென்று கூறுவரே

10[தொகு]

ஆன்றா முலோபத்தொ டாகம மாதேச மாரியத்துள்
மூன்றா மொழியோ டெழுத்து விகாரம் முதனடுவீ
றேன்றாம் வகையொன்ப தாகலு முண்(டு)அவையெவ் விடத்துந்
தோன்றா வுலகத் தவர்க்கொத்த போதன்றித் தூமொழியே

11[தொகு]

சொன்ன மொழிப்பொருணீக் குநகாரம் அச் சொன்முன் மெய்யேல்
அந்நிலை யாக வுடல்கெடும் ஆவிமுன் னாகிலது
தன்னிலை மாற்றிடும் ஏஓ இரண்டும் தனிமொழிமுன்
மன்னிய ஐஔவு மாகும் வடமொழி வாசகத்தே

12[தொகு]

ஆவும் அகரக் கிரகத்துக் கையும்ஔ வும்உகரக்
கேவும் இருவினுக் காரும் விருத்தி எழிலுகரக்
கோவும் இகரத்திற் கேயுங் குணமென் றரைப்ப வந்து
தாவும் இவைதத்தி தத்தினுந் தாதுப் பெயரினுமே

13[தொகு]

மூன்றொடு நான்கொன்ப தாமுயிர்ப் பின்னுயிர் முந்தின்டு
ஆன்ற மகாரம்வந் தாகம மாகும் அல் லாவுயிருக்
கேன்ற வகாரம் எட் டேற்கும் இரண்டும் இறுதிகெட்டுத்
தோன்று நிலையும் ஒரோவிடத் தாமென்பர் தூமொழியே

14[தொகு]

ஆறா முடலின்பின் தவ்வரின் ஆங்கதைந் தாமுடலாம்
ஊறார்ந்த நவ்வரின் முன்பின தாம் குறிற் பின்புமெய்கள்
ஏறா வுயிர்பின் வரவிரண் டாகும் யவ் வோடுரழ
ஈறா வரில்வன்மை பின்பில்வர்க் கத்தொற் றிடைப்படுமே

15[தொகு]

நான்கொடு மூன்றொன்ப தாமுயி ரின்பின்பு நவ்வருமேல்
ஏன்ற ஞகாரம தாகும் பதினைந்தொ(டு)எண்ணிரண்டாய்த்
தோன்றுடற் பின்னர்த் தகாரம் வரினிரண் டுந்தொடர்பால்
ஆன்றவைந் தாமுடல் ஆம் முன்பி லொற்றுக் கழிவுமுண்டே

16[தொகு]

எண்ணிரண் டாமொற்று வன்மைவந் தாற்பின் பியைந்தவைந்தா
நண்ணிய வொற்றாம் நகரம் வரின்முன்மெய் ணவ்வதுவாம்
தண்ணிய மவ்வந் திடினு மஃதே தனிநெடிற்பின்
பண்ணிய வொற்றுப்பின்றான்வரப் போமொரு காற்பயின்றே

17[தொகு]

பன்முன்ற தாமுடல் நப்பின் வருமெனி னீற்றெழுத்தாம்
பன்னேழதாம் வன்மை பின்வரின் ஆயிடைத் தவ்வுமஃதாம்
பின்னா மிகீரா மதுபன்னொன் றாமுடல் பின்வருமேல்
சொன்னா ரியலின்பின் றோன்று நகார ஞகாரமென்றே

18[தொகு]

ஐம்மூன்ற தாமுடல் வன்மைபின் வந்திடில் ஆறொடைந்தாம்
மெய்ம்மாண்பதாம் நவ் வரின் முன்னழிந்து பின்மிக்கணவ்வாம்
மம்மேல் வரினிரு மூன்றா முடல் மற் றியல்புசந்தி
தம்மா சகலங் கிடப்பின்க ளாமென்ப தாழ்குழலே

19[தொகு]

வன்மைவந் தாற்பின்பு பத்தா முடல்வன்மை யின்வருக்கத்
தன்மையொற் றாகும் ஞநமக்கள் பின்வரிற் சாற்றும்பபோம்
முன்வயிற் கால்வவ் வரின் பதின் மூன்றா முடலழியும்
பின்வயின் தவ்வுங் கடைவன்மைப் பெறுறுமே

20[தொகு]

ஈற்றின்பின் நவ்வரி னீற்றெழுத் தாம் எழில் தவ்வரில் தவ்
வேற்றுப் பதினேழ தாமுட லாம் எய்தும் ஆவியின் பின்
ஆற்றுந் திறல்வல் லினம்வந் திடிலவற் றின்வருக்கம்
போற்று மிவையென்ற வல்லொற்று மெல்லொற்றும் புக்கிடுமே

21[தொகு]

ஆவிபின் றோன்றக் கேடுங்குற் றுகரம் அவற்றின் மெல்லொற்
றேவிய வாறெழில் வல்லொற்று மாம் இனி வன்மையொற்று
மேவி யதன்முன் விளைதலும் வேண்டுவர் ஆவிவந்தாற்
பாவிய முற்றுக ரத்தின் சிதைவும் பகர்ந்தனரே

22[தொகு]

ஈறாம் லகார மதவந் தெதிர்ந்திடில் ஈற்றெழுத்தேல்
ஆறாங் கடைவன்மை யாம்வன்மை தோன்றில் ஐந் தாமுடலாம்
ஆறா முடல்வல் லினம்வரின் ஆவிமு னாவியொடுங்
கூறா ழகார மழிந்து டகாரங் குறுகிடுமே

23[தொகு]

ஒன்றுக் கொருவோர் இருவீர் இரண்டுக்கு மூன்றுமும்மூ
அன்றுற்ற நாலுக்கு நான்கைந்தை யாறறு ஏழெழுவாம்
தொன்றுற்ற எட்டுக்கெண் ணொன்பதொன் பானொடு தொண்டொள்ளும் பான்
பன்றுற்ற நூறு பதுபஃது பத்து நூ றாயிரமே

24[தொகு]

ஆவிக் குறிற்பின் ஞநமவத் தோன்றிலவ் வொற்றிடையாம்
மேவிய பன்னொன்று தோன்றில்வவ் வாம் மெய்யில் ஐந்திருமுன்
றாவது முண்(டு)ஒற் றொரோவழித் தோன்றிடும் ஆவுமவ்வாய்த்
தாவிய வைந்தா முயிர்பின் பெறுவன தாமுமுண்டே

25[தொகு]

நின்றசொல் லீற்றுமெய்ம் முன்னா முதலுயிர் நீண்டுமெய்யும்
பொன்று முயிரொ டுயிர்மைவந் தால் வந்த ஆவியும்போய்க்
குன்று மொரோவழி கூறிய ஆவி யொரோவழிப்போம்
அன்றி லனள ணமனக்க ளொன்றுக்கொன் றாவனவே

26[தொகு]

கூறிய சுட்டின்பின் னாய்தமுங் கூடும் சுட் டீற்றுகரம்
மாறி யுயிரிரண் டாவது மாம் வந்த சுட்டொருகால்
வீறுடை நெட்டெழுத் தாகும் அளபும் விரிந்துநிற்கும்
நூறுடை வெள்ளிதட் டாகரைக் கோயி னுடங்கிடையே

27[தொகு]

துப்பார் பெயர்வேற் றுமையி னகத்துந் தொகையின்கண்ணுஞ்
செப்பார் மொழிமுதற் பின்சாரி யைவரிற் றேர்ந்தவற்றுள்
ஒப்பார் மொழியீ றுயிரொடும் போமொரு காலுடல்போம்
தப்பா வுயிர்மெய் கெடுமொரு காலென்பர் தாழ்குழலே

28[தொகு]

எண்ணிரண் டாமொற்றுப் பன்மூன்று மெய்நின் றிவற்றின் பின்னே
அண்ணிய தவ்வரின் தட்டற வாம் அவை யாய்தமுமாம்
பண்ணிய சந்தி பகரா தனவும் பகர்ந்தவற்றாற்
கண்ணி யுரைக்க மதியால் வனசக் கனங்குழையே

2 சொல்லதிகாரம்[தொகு]

1 வேற்றுமைப் படலம்[தொகு]

29[தொகு]

எட்டாம் எழுவாய் முதற்பெயர் வேற்றுமை ஆறுளவாம்
கட்டார் கருத்தா முதற்கா ரகம் அவை கட்டுரைப்பின்
ஒட்டார் கருத்தா கருமங் கரணமொண் கோளியொடும்
சிட்டா ரவதியொ டாதாரம் என்றறி தேமொழியே

30[தொகு]

ஒருவ னொருத்தியொன் றாஞ்சிறப் போடுபல் லோர்பலவைக்
கருது முறையிற் கலப்பன வேற்றுமை காண்முதல்சு
மருவும்அர் ஆர்அர்கள் ஆர்கள்கள் மார்முதல் வேற்றுமையின்
உருவம் விளிவேற் றுமையொழித் தெங்கு முறப்பெறுமே

31[தொகு]

ஒருவ னொருத்தி பலரொன் றொடுபல வஞ்சிறப்பின்
உருபுகண் மூன்று முடன்வைத்துப் பின்னெட்டு வேற்றுமையும்
மருவ நிறுவி யுறழ்தர வாங்கா ரகபதங்கள்
உருவு மலியு மறுபத்து நான்குள ஒண்டொடியே

32[தொகு]

ஆதியி லா ண்பெ ணலியென்று நாட்டி யதினருகே
ஓதிய வேற்றுமை யேழையுஞ் சேர்வித் தொருங்க தன்பின்
வாதிய லொன்றொ டிரண்டு பலவென வைத்துறழத்
கீகிய லாத வறுபத்து மூன்றுறந் தேர்ந்தறியே

33[தொகு]

கூறிய சொற்பின் பொருண்மாத் திரத்திற் குலவெழுவாய்
வீறுடை வேற்றுமை யெய்து மொருவ னொருத்தியொன்றின்
ஏறிய சுப்பல விற்சுவ்வுங் கள்ளுமெங் கும்மழியும்
ஊறிய சுச்சிறப் புப்பல ரிற்கள் ளொழிந்தனவே

34[தொகு]

ஐயென் பதுகரு மத்திரண் டாவ ததுவொருகாற்
பைய வழிதரும் மூன்றோடொ டாலாம் பகர்கருத்தா
வைய நிகழ்கர ணத்தின் வரும் குப் பொருட்டென்பல
மெய்திகழ் வேற்றுமை நான்காவ தாமிக்க கோளியிலே

35[தொகு]

ஆனாளா ரார்க ளதுவின வாறிற் குடைப்பின் குவ்வேல்
நூனா டியபத மாநூவ லாதார மேழினிற்கே
தானா முழைவயின் பக்க லுழியில்கண் சார்பிறவும்
வானா மலிநின்ற வற்றில் வரூஉமைந் தவதியிலே

36[தொகு]

ஆயாளி யேயவ்வொ டாவானோ லோயீ ரளபெடைகாள்
மாயா விளியி னுருபுகள் மற்றிவை முன்னிலைக்கண்
ணேயாகும் முன்சொன்ன வேழ்வேற் றுமையுமெல் லாவிடத்தும்
ஓயா தியல்கை யுணர்பெரி யோர்த முரைப்படியே

37[தொகு]

உன்னுமென் னுந்தன்னும் யாவுமவ் வும்மிவ்வு முவ்வுமெவ்வு
மென்னு மிவற்றின்முன் னீநான்றான் சுவ்வரில் யாமுதல
வன்னும்வள் ளுந்துவ்வும் வையிஞ் சிறப்பினீர் நாமொடுதாம்
பின்னிலைந் தும்வர் பலரிற்கள் ளோடுவர் கள்ளென்பவே

2. உபகாரகப் படலம்[தொகு]

38[தொகு]

மேதகு நற்றொழில் செய்வான் கருத்தா வியன்கருவி
தீதில் கரணம் செயப்பட்ட தாகுந் திறற்கருமம்
யாதனி னீங்கு மவதிய தாம்இட மாதாரமாம்
கோதறு கோளிமன் கொள்பவ னாகுங் கொடியிடையே

39[தொகு]

வரைநின் றிழிந்தங்கொர் வேதியன் வாவியின் கண்மலிந்த
விரைநின்ற பூவைக் கரத்தாற் பறித்து விமலனுக்குத்
துரைநின்ற தீவினை நீங்கவிட் டானென்று சொல்லுதலும்
உரைநின்ற காரக மாறும் பிறக்கும் ஒளியிழையே

40[தொகு]

காரணந் தான்தெரி தான்தெரி யாக்கரு மந்தலைமை
ஆரணங் கேயைந் துளகருத் தாஅச லஞ்சலமாம்
பூரண மாகும் அவதிபுறமக மாங்கரணம்
சீரணங் கார்வங் கிடப்பிரப் பாங்கோளி தேமொழியே

41[தொகு]

பற்றொடு வீடே யிருபுறந் தான்தெரி தான்தெரியா
நற்கருத் தாத்தீ பகமாங் கருமம் நான் காதாரமேற்
பொற்பமர் சேர்வு கலப்புப் புலனொ டயலென்பதாம்
கற்பு மலியு மிருபத்து மூவகைக் காரகமே

42[தொகு]

ஆதிய தான்தெரி யாக்கருத் தா அதல் லாக்கருத்தா
ஆதிய தாறொடு மூன்றும் பெறுமென்பர் ஆதியையே
ஓதினர் தான்தெரி யாக்கரு மத்திற்(கு) ஒழிகருமம்
மேதகு மூன்றிரண் டாறுநான் காமென்பர் மெல்லியலே

43[தொகு]

மூன்றைந்தொ டாறு கரணம் பெறும் முரட் கோளியதே
மூன்றிரு மூன்றொடு நான்காந் தருமுறை யால் அவதி
தோன்றுமைந் தாம் மற்றை யாதார மேழின்க ணேயென்பவாம்
வான்றிக டெய்வ வடநூற் புலவர்தம் வ்வாய்மொழியே

உபகாரப்படலம் முற்றும்.

தொகைப் படலம்[தொகு]

44[தொகு]

நாமங்க ளிற்பொருந் தும்பொருள் நற்றொகை அத்தொகைக்கண்
தாமங் கழியுமுன் சாற்றிய வேற்றுமை வேற்றுமையைச்
சேமங்கொள் சார்பாக வெய்திய சொல்லுஞ் சிலவிடத்துப்
போமங் கதன்பொருள் தன்னையெல் லார்க்கும் பொருட்படுத்தே

45[தொகு]

தற்புரு டன்பல நெற்கன்ம தாயந் தாங்கியசீர்
நற்றுவி குத்தொகை நாவார் துவந்துவம் நல்லதெய்வச்
சொற்பயன் மாந்தர்க ளவ்விய பாவமி தென்றுதொன்மை
கற்பக ம்பபகர்ந் தார்தொகை யாறும் கனங்குழையே.

46[தொகு]

எழுவாய் முதலெழு வேற்றுமை யோடு மெழுந்தடையில்
வழுவாத நஞ்சொடெட் டாந்தற் புருடன் வளர்துவிகு
தழுவார்ந்த எண்மொழி முன்னாய் வருந்தத் திதப்பொருண்மேல்
குழுவா ரொருமையொப் புப்பன்மை யொப்புக் குறியிரண்டே.

47[தொகு]

இருமொழி பன்மொழி பின்மொழி யெண்ணோ டிருமொழியெண்
மருவும் விதியர் ரிலக்கண மற்றைச் சகமுன்மொழி
பரவும் திகந்தரா ளத்தொகை யென்னப் பலநெற்றொகை
விரியுமொ ரேழவை வேற்று மொழிப்பொருண் மெல்லியலே

48[தொகு]

முன்மொழிப் பண்பு மிருமொழிப் பண்பு மொழிந்தமைந்த
பின்மொழி யொப்பொடு முன்மொழி யொப்பும் பிணக்கொன்றிலா
முன்மொழி நற்கருத் தும்முன் மொழிநற் றுணிவுமென
நன்மொழி யார்கன்ம தாரய மாறென்ன நாட்டினரே

49[தொகு]

முன்மொழி யவ்வியஞ் சேர்தொகை பேர்முன் மொழித்தொகையே
சொன்மொழி யவ்விய பாவம் மருவும் துவந்துவமும்
வன்மொழி யாமித ரேதரம் வாய்ந்த சமாகாரமாம்
நன்மொழி யானுரைத் தார்கள் சமாசம் நறுநுதலே.

50[தொகு]

வேற்றுமை யும்மை வினைபண் புவமையொ டன்மொழியென்(று)
ஆற்றுந் தொகைசெந் தமிழணர்க ளாறென்பர் ஆய்ந்தபண்பில்
தோற்று மளவு வடிவு நிறஞ்சுவை சொல்பிறவும்
ஏற்று மிருபல் லளவு நிறையெண் பெயரும்மையே.

51[தொகு]

அன்மொழி நற்றொகை யிற்றொகும் போதுமல் லாவிடத்தும்
நன்மொழிப் பின்பு நடுவுங் கெடுநன் கொரோவிடத்து
முன்மொழி யீறு கெடும் பன்மை யாகும் முரட்பொருள் கோள்
பின்மொழி முற்சொற் பிறிதோர் மொழியொ டிருமொழியே.

தொகைப்படலம் முற்றும் .

தத்திதப்படலம்[தொகு]

52[தொகு]

அன்னிய னீன னிகனேயன் வான்வதி யம்மிகரம்
வன்னு அகரத்தொ டானாளன் மானக னாதிமற்றுந்
துன்னிய சீர்த்தத் திதத்தின் பிரத்தியஞ் சுவ்வென்பது
மன்னு மரபு பிழையாம லெங்கும் வரப்பெறுமே.

53[தொகு]

உண்ணு மிதனா லுரைக்கு மிதனை யுடையனிது
பண்ணு மிதனைப் பயிலு மிதிற்பயன் கொள்ளுமித்தால்
எண்ணு மிதனை யிதனுக்கு நாயக னீங்கிருக்கும்
நண்ணு மிதனை யிதையொக்கு மிங்குள னன்னயத்தே.

54[தொகு]

மகனிவ னுக்கிய ளுக்கிந்த வர்க்கத் தினனிவனைத்

தகவிய தேவ னெனும்யாவ னென்றுநற் றத்திதங்கள்
நிகழும் பிற பொரு ளின்கண்ணு நிற்கும் நினைந்தவற்றைப்
புகன்மலி தெய்வப் புலவர்க்கும் பொச்ச மடக்கரிதே.

55[தொகு]

மையம் புதுவுகம் வல்லள வாதி குணக்குறிப்பில்
வையம் வலிநெடு வாதிபின் னாம்மன்கன் னானன்வன்னாள்
ஐய மவனமவள் மிம்முத லாகுந் திரப்பியத்திற்
பைய மதிக்க வுலகத் தவர்க்குப் பயன்படவே.

56[தொகு]

அச்சியொ டாட்டி யனியாத் தியத்தி தியாளொடள்ளி
இச்சி யாதியும் பெண்மைத் தெளிவாம் எழில்வடநூல்
மெச்சிய வாகாராந் தத்தினு மூர்ப்பின்னு மிக்க ஐயாம்
நச்சிய ஈகாரந் தானே குறுகும் நறுநுதலே.

57[தொகு]

முந்திய வர்க்கங்க ளைந்தினு முன்னொன்றின் மூன்றடங்கும்
பந்தியில் தெய்வ மொழிமுதல் யவ்வேல் பகருமிய்யாம்
வந்திடும் லவ்விற் குகரமு மாகும் வரில்ரகரம்
அந்த இரண்டொ டகரமு மாமென்பர் ஆயிழையே.

58[தொகு]

முதலொற் றிரட்டிக்கு முப்பத்தொன் றெய்திடின் முன்பினிஃ
திதமிக்க வைந்தாமெய் யாகுந் தனியே யிதனயற்குப்
பதமிக்க சவ்வரு மெண்ணான்கு தவ்வாமுப் பானுறுமுன்
றதனுக்கு லோபமும் யவ்வொடு கவ்வு மறைவர்களே.

59[தொகு]

கூட்டெழுத் தின்பின் யரலக்கள் தோன்றிடிற் கூட்டிடையே
ஓட்டெழுத் தாகப் பெறுமொ ரிகாரம் வவ் வுக்கொருவ்வாம்
மீட்டெழுத் துத்தமி ழல்லன போம்வேறு தேயச்சொல்லின்
மாட்டெழுத் தும்மித னாலறி மற்றை விகாரத்தினே.

தத்திதப்படலம் முற்றும்

தாதுப் படலம்[தொகு]

60[தொகு]

மன்னிய சீர்வட நூலிற் சரபச வென்றுவந்து
துன்னிய தாதுக் களின்போலி போலத் தொகுதமிழ்க்கும்
பன்னிய தாதுக் களைப்படைத் துக்கொள்க முன்னிலையின்
உன்னிய வேவ லொருமைச்சொல் போன்றுல கிற்கொக்கவே.

61[தொகு]

நடவடு செய்பண்ணு நண்ணுபோ சிந்தி நவிலுண்ணிரு
கிடவிடு கூறு பெறுமறு கொள்ளழை வாழ்கிளைவெல்
கடநடு தங்கு கசிபொசி பூசு மிகுபுகுசெல்
இடுமுடி யேந்துகொல் இவ்வண்ண மற்று மியற்றிக்கொள்ளே.

62[தொகு]

வானுமை யம்புகை வல்லிவு நல்லல்லன் பானலைகுத்
தான்விதி வைசி முதல்சுப் பிரத்தியந் தாதுவின்பின்
ஆன வினைக்குறிபு புக்கா லகத்தி லணையுமென்ப
ஊனமில் சொல்லொன்று முன்புநின் றாகலு முண்டென்பரே.

63[தொகு]

தம்மந்தி கன்வம் மனமணந் தன்னக நக்கொடியுச்
சம்மன் மமையகஞ் சர்திர மாவாயு வல்லில்மியான்
கம்மன் தவங்கல் முதலா யினதெய்வத் தாதுவின்கண்
விம்ம வருங்கா ரகத்தும் வினைக்குறிப் பின்கணுமே.

64[தொகு]

அய்யா இகராந்த மவ்வா வுகராந்த மாவிமுன்பு
நையாது நிற்கும் பிரத்தியம் பின்வரின் நற்குணமும்
பொய்யா விருத்தியும் ஓரோ விடத்துப் புகழ்பெயர்ச்சொல்
உந்நா தொழியில் விகாரத்தை யோர்ந்துகொ ளொண்ணுதலே.

65[தொகு]

ஆட்டாற்று தீற்றாதி தாதுக் களையடற் காரிதமென்(று)
ஓட்டா வறிக உரையின் படியொப்பில் விப்பிபின்பு
மூட்டா வறிகா ரிதக்கா ரிதம்முன்பிற் றாதுவின்கட்
காட்டா வறியவை காரிதக் காரிதக் காரிதமே.

66[தொகு]

தாதுவின் பின்பு தனய விறப்பின் நிகட்சியின்கண்
ஓதுங் கிறசுவ்வொ டாநின்ற வாம் கும்மும் மோடுமஃகான்
பேத மலியு மெதிரின்க ணாகும் பிறவும் வந்தால்
ஏதமில் சந்திராந் தம்பிழை யாம லியற்றிக்கொள்ளே.

67[தொகு]

மன்னுந் துமந்தம் பொருட்டுக்கப் பான்தற்கு வானவென்று
பன்னு மெழிற்றாது வின்பின்பி லாகும் பகரில்முன்பு
துன்னிய தாதுத் தொழிற்பொருட் டாகவென் னுந்தொடர்ச்சி
உன்னிய போதென்று தெய்வப் புலவ ருரைத்தனரே.

68[தொகு]

ஆவுமிட் டுந்துவ்வு முவ்விடொ டிய்யு மரும்புலவர்
ஏவுங் கருத்தா விருதொழிற் கொன்றிடின் முன்புநின்று
மேவும் பொருட்டாது வின்பின் வரும்மிக்க தன்பெயரே
பாவுந் துவாந்தம தாமென் றுரைப்பர் பனிமொழியே.

69[தொகு]

இல்லையுண் டாலில் லிவைமுத லாவிடைச் சொற்களுக்கோர்
எல்லையுண் டாக வியற்றவொண் ணாவிசைச் யும்பொருளும்
ஒல்லையுண் டாகநிற் கும்மிட முந்தேர்ந் திவற்றொடொக்கச்
சொல்லையுண் டாக்குக வென்பது நூலின் துணிபொருளே.

70[தொகு]

ஆனாளா ரார்களொ டந்தா விலன்மற் றிலளிலரும்
தானா மிலர்க ளிலதில தாதுத் தடைப் பொருட்கண்
மேனா முரைத்த மரபே வரும் மிக்க வாதொழிமுன்
நானா வுளமற்று நற்றடை மன்னும் பிரத்தியமே.

தாதுப்படலம் முற்றும்

கிரியா பதப் படலம்[தொகு]

71[தொகு]

ஒருவ னொருத்தி சிறப்புப் பலரொன் றொடுபலவை
மருவு படர்க்கை யொடுகால மூன்றையும் வைத்துறழத்
துருவ மலிபதி னெட்டாந் தொழிற்பதம் தொல்கருத்தா
உருவ மலியும் பொருண்மேல் நிகழு மொளியிழையே.

72[தொகு]

முன்னிலை தன்மை யிடத்தினிற் காலங்கள் மூன்றையும்வைத்
துன்னு மொருமை சிறப்பொடு பன்மையு முய்த்துறழ்ந்தால்
பன்னுந் தொழிற்சொல் பதினெட் டுளகருத் தாப்பொருண்மேன்
மன்னி நிகழ்தொகை முப்பதொ டாறும் வகுத்தறியே.

73[தொகு]

தானானுந் தாளாளுந் தாராருந் தார்களொ டார்களென்று
மேனா முரைத்த பிரத்திய மாகுந் ததுவதுவும்
தேனார் குழலி தனவு மனவுந் திகழ்படர்க்கை
ஆனா விறப்பில் தொழிற்பத மாறிற்கு மாய்ந்தறியே.

74[தொகு]

நின்றான் கிறானொடு நின்றாள் கிறாளிவை நின்றார்கிறார்
நின்றார்க ளோடிகின் றார்களு நின்றதுங் கின்றதுவும்
தென்றாத சீர்நின் றனகின் றனவுந் திகழ்படர்க்கைப்
பின்றா நிகழ்கை தொழிற்பத மாறிற்கும் பேர்த்தறியே.

75[தொகு]

வான்பானும் வாள்பாளும் வார்பாரும் வாகர்ளும் பார்களுஞ்சீர்
தான்பா வியவது வும்பது வுந்தத்தை யத்தைவென்ற
தேன்பாவுஞ் சொல்லி வனவும் பனவுந் திகழ்படர்க்கை
வான்பான் மலியு மெதிர்விற் றொழிற்பத மாறிற்குமே.

76[தொகு]

தாயாயுந் தீரீருஞ் சாற்றிய தீர்களொ டீர்களுமாஞ்
சாயாத முன்னிலை யின்னிறப் பாம் தன்மை தன்னிறப்பில்
தேயாத தேனேனுந் தேமேமுந் தோமோமு மாகும்என்ப
வேயார் பொதியத் தகத்திய னார்சொன்ன மெய்த்தமிழ்க்கே.

77[தொகு]

கிறாஅய்நின் றாய்கிறீர் நின்றீர் கிறீர்கள்நின் றீர்களுமாய்
இறாநின் றனமுன் னிலையி னிகழ்ச்சி இதன்கண் தன்மை
கிறேஎன்நின் றேன்கிறோம் நின்றேம் கிறோமுநின் றோமுமென்றாம்
தெறாநன்ற கட்பவ ளந்திகழ் வாய்நற் றிருந்திழையே

78[தொகு]

வாய்பாய்வீர் பீர்வீர்கள் பீர்க ளிவைமன்னு மின்னிலையில்
சாய்பாய் விடுமெதிர் காலம் இதனுழித் தன்மைசொல்லின்
வேய்பா வியதோளி வேன்பேன்வேம் பேமொடு வோம்போமுமாம்
சேய்பா வியசெழும் போதிப் பிரான்தன் திருந்துரைக்கே

79[தொகு]

ஓங்காத முன்னிலைப் பாலேவ லாங்கா லொருமையிற்சுப்
பாங்கார் சிறப்பிலா மேயுமின் கப்பன்மை யாமிடத்து
நீங்காத மின்களுங் கள்ளாம் இசைவினிற் கவ்வென்பதாம்
தாங்காப் பரோக்கத் தினிற்போலு மாமென்பர் தாழ்குழலே.

80[தொகு]

தன்மைத் துணிவா மொருமைவன் பன்தஞ்சம் போமொடுவோம்
பன்மைக்க ணன்றிப் படர்க்கையின் கண்ணும் மொருமையிலாம்
பன்மைக்கண் வர்பர்கள் ளோடாகு முன்னிலை தன்னொருமைத்
தன்மைச் சிவைதிபன் மைக்கி விசிப்பித்திப் பின்னரவே.

81[தொகு]

வினைக்குறிப் போடு கருமம்படர்க்கையின் மிக்கவொன்றை
அனைத்தென்ன லாம் அவ் வொடுபடுத் தாதுபின் னாமியற்கை
தனைக்கரு மம்பெறும் தாதுக்கள் மற்றும் படுவினைப்போல்
நினைக்க வரும் மற் றிவையும் பெயர்ச்சொல் நிகர்த்திடுமே.

82[தொகு]

ஈரெட்டு மூவைந்து மாமுடல் தேற்றவு மீற்றுவன்மை
தேரிட்டு மூன்றா முடலொடு தேற்றவுஞ் சிந்தைசெய்து
நேரிட் டுரைப்ப ரறிவொன் றிலாதவர் நீயவற்றைப்
பாரிட்ட மாகப் பெரியோர் தமதுரை பார்த்தறியே.

83[தொகு]

மதத்திற் பொலியும் வடசொற் கிடப்புந் தமிழ்மரபும்
உதத்திற் பொலியேழைச் சொற்களின் குற்றமு மோங்குவினைப்
பதத்திற் சிதைவு மறிந்தே முடிக்கபன் னூறாயிரம்
விதத்திற் பொலியும் புகழவ லோகிதன் மெய்த்தமிழே.

கிரியா பதப் படலம் முற்றும்

பொருட்டொகை வெண்பா 1[தொகு]

வேற்றுமை யெட்டுந் திணையிரண்டும் பாலைந்தும்
மாற்றுதற் கொத்த வழுவேழும் – ஆறொட்டும்
ஏற்றமுக் காலமிட மூன்றோ டிரண்டிடத்தால்
தோற்ற வுரைப்பதாஞ் சொல்.

பொருட்டொகை வெண்பா 2[தொகு]

திணைபால் மரபு வினாச்செப் பிடஞ்சொல்
இணையா வழுத்தொகையோ டெச்ச –மணையாக்
கவினையபார் வேற்றுமையுங் காலமயக் குங்கொண்
டவிநயனா ராராய்ந்தார் சொல்.

சொல்லதிகாரம் முற்றும்.

3. பொருளதிகாரம்[தொகு]

பொருட்படலம்[தொகு]

84[தொகு]

ஆற்று மகமே புறமே யகப்புற மன்றிவென்றி
போற்றும் புறப்புற மென்றாம் பொருள் அளப் பானளவை
ஏற்றும் பிரமேய மென்றும் வகுப்பர் இவையுமன்றிச்
சாற்றும் புலவரு மெண்ணிறந் தாரென்பர் தாழ்குழலே.

85[தொகு]

முல்லை குறிஞ்சி மருதத் தொடுமுது பாலைநெய்தல்
சொல்லிய காஞ்சி சுரநடை கைக்கிளை பாலைதும்பை
இல்லவண் முல்லை தபுதாரந் தாபத மேய்ந்தவள்ளி
அல்லது காந்தள் குறுங்கலி வெட்சி யடல்வஞ்சியே.

86[தொகு]

குற்றிசை வாகை கரந்தை பெருந்திணை கொற்றநொச்சி
பற்றிய பாசறை முல்லை யுழிஞை யெனப்பகர்ந்த
மற்றிவை யையைந்து மாம்பொருள் நான்கினும் வண்புகட்சி
பற்றிய பாடாண் பொதுவிய லாதியும் பார்த்தறியே.

87[தொகு]

முல்லை குறிஞ்சி மருதத் தொடுபாலை நெய்த லைந்துஞ்

சொல்லு மகமா மதனுக் குரைதொகு சட்டகமோ(டு)
எல்லை நிகழு மிருபதொ டேழுள ஏனையவற்(று)
ஒல்லை நிகழு முரையு மறிந்துகொள் ஒண்ணுதலே.

88[தொகு]

சட்டக மேதிணை கைகோள் நடைசுட் டிடங்கிளவி
ஒட்டிய கேள்வி மொழிவகை கோளுட் பெறுபொருளென்(று)
இட்டிகச் சொற்பொருள் எச்ச மிறைச்சி பயன்குறிப்புக்
கட்டக மெய்ப்பாடு காரணங் காலங் கருத்தியல்பே.

89[தொகு]

ஏற்றும் விளைவொ டுவம மிலக்கண மேய்ந்ததொல்லோர்

போற்றும் புடையுரை யேமொழி சேர்தன்மை யேயுமன்றி
ஆற்றும் பொருளடை வென்றா முரையல் லவற்றினுக்கு
மாற்ற முரையும் வகுக்கு முரையு மதித்தறியே.

90[தொகு]

மலையிருள் முன்பனி கூதிர்வெற் பன்கண மூங்கில்மஞ்ஞை
இலைமலி வேங்கைசெங் காந்த ளிலவ மிகல்முருகன்
சிலைமலி குன்றுவர் தேனே புணர்தல் தினைசுனையுங்
கொலைமலி யானை குறிஞ்சியென் றின்ன குறிஞ்சியிலே.

91[தொகு]

ஓதிய வேனி லொடுபின் பனியகில் வெம்பரலே
தீதியல் வேடர் கலையொள் விடலைதிண் பாலையத்தங்
கோதியல் செந்நாய் பருந்தொடு கொம்பனை யார்ப்பிரிதல்
வாதியற் கன்னி குறும்பர்வெம் பாலை மடவரலே.

92[தொகு]

காடுகார் மாலை யிடையர் முதிரைகான் யாறுமுல்லை
நீடுமால் கொன்றை நிரைமேய்த்த லோடு நெடுங்குருந்தங்
கேடில்கார் தோன்றி சிறுபான் கிழத்தி மனையிருத்தல்
பீடுசேர் புன்கு பிறவுமுல் லைத்திணை பெண்கொடியே.

93[தொகு]

பொற்றா மரையிந் திரன்பொய்கை பூந்தார் பழனஞ்செந்நெல்
வற்றா வெருமை வளர்பனி நீர்நாய் வடமகன்றில்
தெற்றா மனையூட லூரன் கடைசியர் செங்கழுநீர்
சுற்றா மருதத் திணையிலுண் டாவன தூமொழியே.

94[தொகு]

மீனே கடல்பனி கொண்கன் திமிலம் விளரிநிலாக்
கானே தரும்புன்னை கண்டலன் னஞ்சுறாக் காதலுப்பு
வானோர் வருணன் முதலை நுளைய ரிரங்கல்கைதை
தேனே தருமொழி யாய் அந்தி நெய்தல் தெளிந்தறியே.

95[தொகு]

ஏற்று முதுபாலை பாசறை முல்லை யியன்றவள்ளி
தோற்றுஞ் சுரநடை யில்லவண் முல்லைதொல் காந்தளன்றி
மாற்றுங் குறுங்கலி தாபதங் குற்றிசை கைக்கிளையோ(டு)
ஆற்றும் பெருந்திணை யாந்தபு தார மகப்புறமே.

96[தொகு]

வெட்சி கரந்தை விறல்வஞ்சி காஞ்சி யுழிஞைநொச்சி
உட்கிய தும்பையென் றேழும் புறமுயர் வாகைதன்பின்
கொட்கும் பொதுவியல் பாடாண் புறப்புறங் கொண்டிவற்றை
உட்கு மதுவிட் டுரவோ ருரைப்படி யோர்ந்தறியே.

97[தொகு]

ஒருப்பாடு நற்சொற் செலவொற் றுரைப்புப் புகல்பொருதல்
விருப்பாநிரைகொண் டவரைத் தடுத்தல் நெறிசெலுத்தல்
செருப்பாடு கைப்படை காத்தூர் புகல்திறங் கூறிடுதல்
பருப்பாடு பாலாற் களித்தல்வெட் சித்திரம் பான்மொழியே.

98[தொகு]

ஓடாப் படையாண்மை யுன்ன நிரைமீட்டல் மன்னர்வெற்றி
கோடாத் திறங்கூறல் தன்திறங் கூறுதல் கொற்றப் பொற்றார்
சூடாப் பொலிகுத லாரம ரோட்டல் துகளறுகல்
தேடாப் பொறித்தல் கரந்தைத் திறமற்றுந் தேர்ந்தறியே

99[தொகு]

அரவ மெடுத்தல் வயங்கிய லீகை விலக்கருமை
விரவு தனிச்சே வகம்வென்றி கூறலுவென் றார்விளக்கம்
நிரவும் வழிவொடு சோற்று நிலைகொற் றவர்மெலிவும்
பரவு தழிஞ்சியென் றின்னவை வஞ்சியின் பாற்படுமே.

100[தொகு]

நிலையாமை வாழ்த்து மயக்க முதுமை நிலையினொடுந்
தொலையா மகிழ்ச்சி பெருமைதீப் பாய்தல் சுரத்திடைத்தன்
தலையார் கணவன் தனையிழத் தல்தனி யேயிரங்கல்
கலையார் மனைவிபெய் சூளுற வென்றிவை காஞ்சியென்னே.

101[தொகு]

வேந்தன் சிறப்பு மதிலே றுதல்வென்றி வாட்சிறப்புக்
காந்தும் படைமிகை நாட்கோ ளொடுகாவ லேமுடிகோள்
ஏந்துந் தொகைநிலை கொற்றநீர்ப் போர்ச்செல்வ மூர்ச்செருவே
போந்த முதிர்வு குறுமையென் றாமுழி ஞைப்புணர்ப்பே.

102[தொகு]

நாற்குலப் பக்கமுக் காலங் களவழி நற்குரவை
ஆற்றல்வல் லாண்வேட்கை யார்பக்க மேன்மை யரும்பொருளே
தோற்றிய காவல் துறவு கொடைபடை யாளர்பக்கம்
மாற்றிய வொற்றுமை யோடுமற் றும்மிவை வாகையிலே.

103[தொகு]

நிலைபாழி கோளொடு வாளாட் டுடைபடை நீள்களிற்றின்
தொலையார் மலைவிவை தும்பை விகற்பங்கள் தொன்மைமிக்க
தலையாய நூலவை தன்னினுங் கண்டிங் கொழிந்தவெல்லாஞ்
சிலையாகு நன்னுதல் மாதே அறிந்துகொள் செப்பிடவே.

104[தொகு]

104[தொகு]

புகட்சி பரவல் குறிப்புக் கொடிநிலை கந்தழியே
இகட்சி மலிவள்ளி யென்றிவை யாறு நெறிமுறையில்
திகட்சி மலைதரு பாடாண் பகுதிசெப் பாதனவும்
இகட்சியுண் டாகா வகைதேர்ந் தறித லியல்புடைத்தே.

பொருட்படலம் முற்றும்

பொருளதிகாரம் முற்றும்

5 யாப்பதிகாரம்[தொகு]

யாப்புப் படலம்[தொகு]

105[தொகு]

குறிலு நெடிலு மெனுமிவை யேரசை குற்றெழுத்துப்
பெறின்முன் இவையே நிரையசை யாம் பிழைப் பில்லைபின்பொற்
றிறினும் அசையிரண் டொன்றின்முற் சீர்மூ வசையொன்றிநேர்
இறுவ திடைச்சீர் நிரையிறிற் பிற்சீர் எனவியம்பே.

106[தொகு]

கருவிளங் கூவிளந் தேமா புளிமா எனக்கலந்து
மருவிய நான்கு முதற்சீர்க ளாம் மற் றிவற்றினந்தத்
துருவமாங் காய்வரி னாமிடைச் சீர்ஒண் கனிவருமேற்
செருமவற் வேற்கண்ணி னாய் கடைச் சீரெனத் தேர்ந்தறியே.

107[தொகு]

இருசீரு முச்சீரு நாற்சீரு மைஞ்சீரு மைந்தின்மிக்கு
வருசீரு மந்தரங் கால்தீப் புனலொடு மண்பெயரால்
திரிசீ ரடியாங் குறள்சிந் தளவு நெடிற்றகைமை
தெரிசீர்க் கழிநெடி லென்று நிரனிறை செப்புவரே.

108[தொகு]

முன்னிரண் டாவியு மீறுமை யும்மோனை முன்னவற்றின்
பின்னிரண் டாவியு மேழுமெட் டும்மோனை ஆறுமைந்தும்
பன்னிரண் டாமுயிர் முன்னிரண் டும்மோனை பண்ணுந் தச்சப்
பின்னிரண் டாநஞ மவ்வும்வவ் வும்மோனை பெண்ணணங்கே.

109[தொகு]

என்றா முதலள வொத்திரண் டாமெழுத் தொன்றிவரிற்
சான்றா ரதனை யெதுகையென் றோதுவர் தன்மைகுன்றா
மூன்றாவ தொன்ற லிரண்டடி யொன்றன் முழுதுமொன்றல்
ஆன்றா வினமுயி ராசிடை யாய்வரும் ஆங்கதுவே.

110[தொகு]

பத்தியங் கத்திய மென்றிரண் டாஞ்செய்யுள் பத்தியமேல்
எத்திய பாதங்க ளால்வந் தியலு மெனமொழிந்த
கத்தியங் கட்டுரை செய்யுளின் போலிக் கலந்தவற்றோ
டொத்தியல் கின்றமை யாலொன்று தாமு முரைத்தனரே.

111[தொகு]

ஒன்று மிடைச்சீர் வருஞ்சீ ரொடு முதற் சீர்கள்தெற்றும்
என்று மளவடி யீற்றடி யல்லன ஈற்றடியும்
நன்று மலர்காசு நாள்பிறப் பென்றிற்ற சிந்தடியே
துன்றுங் கடைச்சீர் புகாவென்பர் வெள்ளையிற் றூமொழியே.

112[தொகு]

வேண்டிய ஈரடி யாற்குறள் ஆம் மிக்க மூவடியால்
தூண்டிய சிந்தியல் நான்கடி நேரிசை தொக்கதனின்
நீண்டிய பாதத்துப் பஃறொடை யாம் இத நேரிசையே
நீண்டிசை யாங்கலி நேரிசை பேதிக்கி வின்னிசையே.

113[தொகு]

ஈற்றயன் முச்சீர் வரினே ரிசையாம் இணைக்குறட்பா
ஏற்ற குறள்சிந் திடையே வரும் நிலை மண்டிலப்பாச்
சாற்றிய தன்னே ரடியா லியலும் தலைநடுவீ(று)
ஆற்றிய பாதத் தகவ லடிமறி மண்டிலமே.

114[தொகு]

தரவொடு தாழிசை சுற்றும் அராகமம் போதரங்கம்
உரவுடை நற்றனி வாரமென் றாங்கலி ஓர்ந்ததனை
வரலிசை நேரிசை யம்போ தரங்கம்பின் வண்ணகமே
விரவிய கொச்சகம் வெண்கலி யென்று விகற்பிப்பரே.

115[தொகு]

வண்ணக வொத்தா ழிசைக்கா றுறுப்பென்பர் ஐந்துறுப்பு
நண்ணுவ தம்போ தரங்கவொத் தாழிசை நான்குறுப்பாம்
எண்ணிய நேரிசை யொத்தா ழிசைதான் இறுதிசிந்தாய்த்
திண்ணிய நேரடி யால்வரும் வெண்கலி தேமொழியே.

116[தொகு]

நிலவுந் தரவுந் தரவிணை யும்நின்ற தாழிசைகள்
சிலவும் பலவுஞ் சிறந்து மயங்கியுஞ் சீர்விகற்பம்
பலவும் வரினும் பவளமுஞ் சேலும் பனிமுல்லையிங்
குலவுந் திருமுகத் தாய் கொண்ட வான்பெயர் கொச்சகமே.

117[தொகு]

சிந்துங் குறளு மடியென்பர் வஞ்சிக்குச் சீர்தனிச்சொல்
அந்தஞ் சுரிதக மாசிரி யத்தான் மருவும் வெள்ளை
முந்தி இறுதி யகவல தாகி முடியுமென்றால்
இந்து நுதன்மட வாய் மருட் பாவென் றியம்புவரே.

118[தொகு]

பாமுதல் நிற்பது கூன்வஞ்சி யீற்றினும் பாதத்துள்ளும்
ஆமிரண் டொத்து நிகழடி வெண்செந் துறையிழுகிப்
போமிசைச் செந்துறை சந்தஞ் சிதைகுறள் பூண்பலசீர்
தாமது வந்தங் குறைநவு மாங்குறட் டாழிசையே.

119[தொகு]

நான்கொடு மூன்றடி தோறுந் தனிச்சொல்லு நண்ணுமெனில்
தான்பெயர் வெள்ளை விருத்தம் முப் பாதந் தழுவிவெள்ளை
போன்றிறும் வெண்டா ழிசை மூன் றிழிவே ழடிபொருந்தி
ஆன்றவந் தங்குறை யின்வெண் டுறையெனப ராயிழையே.

120[தொகு]

மூன்றடி யொப்பன தாழிசை நான்காய்க் கடைய யற்கண்
ஏன்றடி நைந்து மிடைமடக் காயு மிடையிடையே
தோன்றடி குன்றியு மாகுந் துறை தொல் கழிநெடிலாய்
ஆன்றடி நான்கொத் திடிலை சிரிய விருத்தமன்றே.

121[தொகு]

ஈரடி யாதி யெனைத்தடி யாலும்வந் தீற்றில்நின்ற
ஓரடி நீளிற் கலித்தா ழிசை ஒலி யோர்விருத்தம்
நேரடி நான்காய் நிகழுமென் றார் நெடி லென்றுரைத்த
பேரடி நான்கு கலித்துறை யாமென்பர் பெய்வளையே.

122[தொகு]

நெடிலடி நான்கவை நேர்ந்துநின் றேபதி னாறெழுத்தாய்
முடிவன வாம்பதி னேழு நிரைவரின் முன்மொழிந்த
படிவழு வாது நடைபெறு மோசைவண் டேந்திநின்ற
கடிகமழ் கோதைக் கயநெடுங் கண்ணி கலித்துறையே.

123[தொகு]

துன்னுங் குறளடி நான்குவஞ் சித்துறை சிந்தடிநான்(கு)
உன்னும் விருத்தம் துறைமூன் றொருபொரு தாழிசையாம்
இன்னும் வரினு மடக்குக போலியென் றேற்பமுன்னூல்
பன்னு மவர்க்கு முடம்பா டெனவறி பைந்தொடியே.

124[தொகு]

மேவுங் குறள்சிந் தொடுதிரி பாதிவெண் பாத்திலதம்
மேவும் விருத்தஞ் சவலையென் றேழு மினியவற்றுள்
தாவு மிலக்கணந் தப்பிடி லாங்கவை தம்பெயரால்
பாவு நிலையுடைப் போலியு மென்றறி பத்தியமே.

125[தொகு]

எழுசீ ரடியிரண் டாற்குற ளாகும் இரண்டடியொத்
தழிசீ ரிலாதது சிந்தாம் அடிமூன்று தம்மிலொக்கில்
விழுசீ ரிலாத திரிபாதி நான்கடி மேவிவெண்பாத்
தொழுசீர் பதினைந்த தாய்நடு வேதனிச் சொல்வருமே..

126[தொகு]

நேர்முந் துறிற்பதி னாறெழுத் தாகி நிரைமுதலாஞ்
சீர்முந் துறீற்பதி னேழிய் முடிந்துசெப் பாரடிகள்
ஏர்முந்து நான்கொத் திருபது சீரா லியன்றிடுமேல்
தேர்முந்து பேரல்குன் மாதே அஃது திலதமன்றே.

127[தொகு]

அளவோ ரடிபோ லொருநான்கு பேத மிலாதுமெய்ப்ப
துளதே லஃது விருத்தமென் றேயறி உள்ளங்கொள்ளுங்
களவே நுழைந்து கயலினு நீண்டு கடுவடுவின்
பிளவே யனைய பெருமதர் யாட்டத்துப் பெய்வளையே.

128[தொகு]

இடையு முதலுங் கடையுங் குறைந்து மிடையிடையே
அடையு மடிகுறைந் தும்வரி னான்கடி யப்பெயரால்
நடைமுந் தியன்ற சவலையென் றோதுவர் நான்கின்மிக்க
தொடையுந் திறம்புவ தாய்விடிற் போலி துடியிடையே.

129[தொகு]

ஒன்றாதி யென்ப ரொருசா ரவரொரு நான்குமுன்னாம்
என்றா லினிதுசந் தத்தி னெழுத்தை யிருபதின்மேல்
நன்றாய வாறுபர் வாமென் றுரைப்பர்நற் றண்டகமேற்
பின்றாத கட்டளை நான் குமுன் னாகிப் பெருகிடுமே.

130[தொகு]

ஏறிய நெட்டெழுத் தேநெடி லொற்றே யெழில்வடநூல்
கூறிய சீர்க்குறி லொற்றே குருவாம் குறிலதுவே
வேறியல் செய்கை யிலகுவென் றாகும் வியன்குறிலும்
ஈறிய லிற்பிறி தாமொரு காலென் றியம்புவரே.

131[தொகு]

ஒப்பா ருறழ்ச்சியுங் கேடுமுத் திட்டமு மொன்றிரண்டே
னப்பா லிலகு குருச்செய் கையுமந்தச் சந்தங்களால்
துப்பார் தொகையி நிலவ ளவுமென்று சொல்லிவைத்தார்
செப்பார் தெளிவுக ளாறையுஞ் சீறடித் தேமொழியே.

132[தொகு]

ஆதி யினிற்குருப் பாதம்வைத் தாதிக் குருவதன்கீழ்
ஓதிய சீரில குத்தன்னை யாக்கி யொழிந்தவற்றை
மூதியன் மேற்படிக் கொப்பித்து முன்புறப் பாழ்கிடக்கின்
தீதிய லாக்குருக் கொண்டே மறைக்க திறப்படவே.

133[தொகு]

ஏறு மடியெனைத் தாவது கெட்டதென் றாலவ்வெண்ணைத்
தேறும் படியரை செய்தி லகுக்கொள்க சேரினொற்றை
வேறு முருவொன்று பெய்தரை செய்து வியன்குருவைத்
தீறு திகழு மளவு மியற்றுக விப்படியே.

134[தொகு]

காட்டிய வீடெனைத் தாவதென் றாலதன் கண்ணெழுத்திற்
கூட்டிய வொன்றாதி கொண்ட திரட்டித்துக் கோப்பியல
நாட்டிய சீரில குக்களின் மேனண் ணியவிலக்கம்
ஈட்டியங் கொன்றிட் டுரைக்கு மிதனையுத் திட்டமென்ன.

135[தொகு]

ஓங்கிய சந்தத் தெழுத்துக் களைவீ டிரண்டொருமூன்
றாங்கிய னான்கைந்தொ டாறே ழெனவிரண் டாலிசைத்துத்
தாங்கிய வீடொன்றொன் றீறொழித் திட்டுத் தமதயலெண்
பாங்கிற் றொகுத்து லகுக்குருப் பெய்து பகர்தொகையே.

136[தொகு]

தொகைநான் கிடமிட் டெழுத்தான் முரணித் தொடருமரை
தகையாத வண்ண நடுவன வாற்றித் தருங்கடையிற்
சிகையாக விட்டெழுத் தோடில குக்களுஞ் சீர்க்குருவும்
மிகையாகு மாத்தி ரையுமடை வேயறி மெல்லியலே.

137[தொகு]

எழுத்த ளவுமிரண் டேமுத வா\ஃக்கொண் டிரட்டிசெய்யக்
குழுத்த விறுதித் தொகையே தொகை குல வுந்தொகையை
அழுத்த விரட்டிசெய் தங்கொன்று நீக்க வதுவுறழ்வால்
விழுத்த வியன்ற நிலத்தின் விரலென்ப மெல்லியலே.

138[தொகு]

மருவு நெடில்குறில் வல்லொற்று மெல்லொற் யிடையிலொற்றென்று
உருவந் திகழ்ந்தவை யுய்க்குங் குறிகளொப் பார்நிரைநேர்
துருவ மலிபுள்ளி வட்டம் வலகென்பர் தொன்மைகுன்றாத்
திருவு மழகும் புகழுந் திகழ்தரு தேமொழியே

139[தொகு]

இப்படிக் கட்டளைத் துண்டமொன் றாக்கிய தீரிரண்டில்
ஒப்புடை யெட்டிற் பதினாறி னின்முப்பத் தோரிரண்டிற்
செப்பிட வாக்குக தண்டகம் வல்லொற்றல் லாதவொற்றுத்
துப்புட னுச்சா ரணையினல் லான்மிகத் தோன்றரிதே.

140[தொகு]

மெல்லிசை யேந்த லொழுகுருட் டெண்ணொரு வேமுடுகு
வல்லியல் பாவகப் பாட்டு நலிவகைப் போடியைபு
சொல்லிய சித்திரந் தாவு புறப்பாட் டளபெடையும்
வல்லிசை தூங்கல் நெடுஞ்சீர் குறுஞ்சீ ரிவைவண்ணமே.
யாப்பதிகாரம் முற்றும்
யாப்புப்படலம் முற்றும்

5 அலங்காரம்[தொகு]

அலங்காரப் படலம்[தொகு]

141[தொகு]

உரையுட லாக வுயிர்பொரு ளாக வுரைத்த வண்ணம்
நிரைநிற மாநடை யேசெல வாநின்ற செய்யுட்களாக்
தரைமலி மானிடர் தம்மலங் காரங்கள் தண்டி சொன்ன
கரைமலி நூலின் படியே யுரைப்பன் கனங்குழையே.

142[தொகு]

சார்ந்த வழக்கொடு தப்பா வடவெழுத் தைத்தவிர்ந்து
தேர்ந்துணர் வார்க்கு மினிமையைத் தந்துசெய் யுட்களினும்
நேர்ந்து சொலப்பட் டுயர்ந்தவ ரால்நிர லேபொருளை
ஓர்ந்து கொளப்படுஞ் சொற்குற்ற மற்ற வுறுப்பென்பரே.

143[தொகு]

தெற்றி வழக்கொடு தேர்ந்துணர் வார்க்கின்பஞ்செய்யலின்றிப்
பற்றி வடநூ லெழுத்துக்க ளோடு பயின்றுரையின்
மற்றிவை யில்லென்று வாங்கவும் பட்டுப் பொருண்மருண்டிப்
பெற்றி யுடைச்சொற் பழித்த வுறுப்பென்று பேசுவரே.

144[தொகு]

ஆக்குதல் கேட்டவர்க் கின்பத் தினையன்றி யவ்வவரே
போக்குதல் செய்த கருத்திற் பொருளாய்ப் புராதனரால்
நீக்குதல் செய்தகுற் றத்தைக் கடத்தல் நெறிமுறையே
தாக்குதல் செய்த பொருள்காண் சிறப்புயிர் தாழ்குழலே.

145[தொகு]

ஈண்டுஞ் சிலீட்ட முதாரதை காந்தி புலன்சமதை
தூண்டுஞ் சமாதி பொருட்டெளி வோகஞ் சுருமாரதை
ஈண்டுமின் பத்தொடு பத்தாவி யென்னும் விதர்ப்பன் கௌடன்
வேண்டு மிவற்றை விபரீத மாக விளங்கிழையே.

146[தொகு]

ஈண்டுஞ் சிலீட்ட முதாரத்தை காந்தி புலன்சமதை
தூண்டுஞ் சமாதி பொருட்டெளி வோகஞ் சுகுமாரதை
ஈண்டுமின் பத்தொடு பத்தாவி யென்னும் விதர்ப்பன் கௌடன்
வேண்டு மிவற்றை விபரீத மாக விளங்கிழையே.

147[தொகு]

ஒப்பார் பொருளே யுயிரா னமையி னுரைத்தவற்றைத்
துப்பா ரலங்கார மாகத் தொகுக்கச்சொல் லும்பொருளுஞ்
செப்பார் தாமுற்றி லேயலங் காரந் திகழ்வதன்றேல்
தப்பார் தருமென்று கண்டுரைத் தார்பண்டு தண்டிகளே.

148[தொகு]

செறிவார் சிலீட்டம் தொகைமிகை யாம்ஓகம் சீர்ச்சமதை
அறிவா ரடியொப்ப தாகும் சமாதி யவனிக்கொப்பப்
பிறிவார் குணமொன்ற தொன்றிற் கிடப்பன மென்மையொன்றின்
நெறிவார் குழலி சுகுமா ரதையென்று நேர்ந்துரையே.

149[தொகு]

ஆனா வழகினைக் காந்தியென் கின்ற ததுதமிழின்
நானா விதமாய் நடைபெற் றியலு நனிபுகட்சி
தானா மிடத்தினும் வார்த்தையின் கண்ணுந் தலைசிறந்து
தேனாய் விதர்ப்பருக் குங்கவு டர்க்குந் திறப்படுமே.

150[தொகு]

திரப்பியஞ் சாதி தொழில்குண மாந்தன்மை சீருவமை
பரப்பிய வொப்பாம் உருவக மாவ ததன்றிரிவு
காப்பிய சொல்லெங்கு மொன்றே யுபகார மேல்விளக்கு
நிரப்பிய மீட்சியு மற்றதன் போலி நிரைவளையே.

151[தொகு]

கூறும் பிறபொருள் வைப்புத் தடைமொழி கொள்பொருளில்
ஏறு மிரண்டிலொன் றேறும் விதிரேக மேதுவின்மை
தேறும் விபாவனை யன்றித் திகழ்சுருக் கேபெருக்கே
ஈறு மிகுநோக்க மெது நுணுக்க மிலேசு மென்னே.

152[தொகு]

அடைவு மகிழ்ச்சி கலையூக்க மாம்பரி யாயமொழி
அடைவு மலிதுணைப் பேறொடு தாத்த மவநுதியு
முடைவு நிகழுஞ் சிலேடை சிறப்பொ டுடனிலைச்சொற்
புடையின் முரணுவ லாச்சொற் புரிவில் புகழுச்சிசுட்டே.

153[தொகு]

ஆக்கு மொருங்கிய லேபரி மாற்றத்தொ டாசிவிராத்
தாக்கு மொழிப்பா விகமிவை யேழைந்துந் தண்டிசொன்ன
வாக்கு மலியலங் கார மெனவறி மற்றுமின்ன
நோக்கு மெனிற்பல வாமலங் கார நடங்கிடையே.

154[தொகு]

புகழ்ச்சி பழிப்பு விரோதங் கருத்திசை யுண்மையையம்
இகழ்ச்சி யெதிர்ப்பொரு ளற்புத நோக்கித ரேதரந்தா
னிகழ்ச்சி மிகைபண் புயர்வு நியம மநியமமுந்
திகழ்ச்சி மலிதடை தெற்றுச் சிலேடை துணிவென்பரே.

155[தொகு]

உம்மை பொருளினொ டொப்புமை கூட்ட ம்பூதத்தொடு
செம்மை திகழ்வாக் கியப்பொருள் கோவைதிண் காரணமும்
வெம்மை மயக்கம் பலவியல் விக்கிரி யத்தினொடு
மெய்ம்மையிற் சந்தா னமுமென் றுவமை விகற்பிப்பீரே.

156[தொகு]

பட்டாங் குரைத்தல் புகழ்தல் பழித்தலிற் பண்புபயன்
சிட்டார் தொழில்வடி வாதி யுவமை செறிந்துறுப்புத்
தட்டா தியலும் பொருளு முவமையுஞ் சார்பொதுவாய்
முட்டா மலேநிகழ் காரண மும்பெறு மொய்குழலே.

157[தொகு]

ஒப்பி லுவமை யிழிவுயர் வோடு முயரிழிவு
துப்பில் சமமே தலைப்பெயல் கூற்றுத் தொகை விரிவு
தப்பி லுறழ்ந்து வரலோ டொருவழி யோர்பொரு ண்மேற்
செப்புச் சினைமுத லொப்பு மறையென்று தேர்ந்தறியே.

158[தொகு]

தெற்றுத் தொகையவ் வியமேதுப் பண்பு விரியுவமை
மற்றுச் சிலேடை சகல மியைபு வரப்புணர்ந்த
முற்றுத் தொகைவிரி தன்னோ டவயவி முந்துறுப்புப்
பெற்றுப் பயிறத்து வாபனந் தன்னோ டியைபிலியே.

159[தொகு]

தாக்குஞ் சமாதான மேவிதி ரேகந் தடைமொழியும்
ஊக்கு முருவகத் தோடொன் றுருவக மேகாங்கமென்
றாக்கு முருவக மைநான்கொன் றாம்பிற வந்தனவும்
நீக்கு வனவிட்டுத் தொல்லோ ருரைப்படி நேர்ந்தறியே.

160[தொகு]

தேரும் பொதுவே சிறப்பு நிலையே சிலேடையன்றி
யேரும் முரணியை போடியை பின்மை யியைபுதம்மிற்
பேரும் விரவிய லேநற் பிறபொருள் வைப்புத்தண்டி
சீரும் பொலிவு மலியுந்தன் ணூலினிற் செப்பியதே.

161[தொகு]

ஆசி யனாதரங் காரணங் காரிய மையமேதுப்
பேசு முபாயஞ் சிலேடை முயற்சி பிறபொருள்வைப்(பு)
ஏசில் கருணைநட் போடு கரும மிகழ்ச்சிவன்சொல்
தேசி னிரக்கந் தலைமை யனுசயஞ் செற்றமென்னே.

162[தொகு]

வெப்பந் தருமம் பரவசத் தோடு வியன்குணமற்(று)
ஒப்புப் பொருளின் தடைமொழி தன்னை உரைத்துணர்ந்து
செப்ப முடையவர் காலங்கண் மூன்றிற் றிருத்திப்பின்னும்
எப்பண்பு கொண்ட விகற்பம் வரினு மியற்றுவரே.

163[தொகு]

ஒருமை யிருமை சிலேடை யுயர்பினோ டெதுவன்றிப்
பெருமை மலிசாதி யொப்பாம் விதிரேகம் பேசுதொழில்
அருமை மலிகுணஞ் சாதியென் றாகுமவ் வேதுவுமற்(று)
இருமை நிகழ்ஞா பகங்கா ரகமா மிலங்கிழையே.

164[தொகு]

பாவும் விபாவனை பல்லோ ரறியும்பரிசொழித்து
மேவு மியல்பு குறிப்பேது நீக்கி விளைவுரையாம்
வீவில் கவிதான் கருது பொருளை வெளிப்படுத்தற்
கோவிய மேசுருக் காமறை சொல்லி னுரைத்திடினே.

165[தொகு]

அருளு மதிசய மான்றோர் வியப்ப துலகிறவாப்
பொருள்குண மையந் துணிவு திரிவெனப் போற்றுவரால்
பெருகிய நோக்கது தற்குறிப் பேற்றம் பெயர்பொருளாய்
வருவதும் பேராப் பொருளது மாக வகுத்தனரே.

166[தொகு]

ஏது வுரைப்பி னிதுவிது வின்விளை வென் றுரைத்தல்
ஓதிய காரக ஞாபக முள்ளதொ டொன்றினொன்று
மாதி யபாவ மழிவுபா டென்று ம்பாவமின்மை
தீதி லொருங்குடன் றோற்றம்யுத் தாயத்தஞ் செப்புவரே.

167[தொகு]

திகழு நுணுக்கங் குறிப்பிற் றொழிலிற் றிறமுணர்த்தல்
நிகழு மிலேசமெய்ச் சத்துவம் வேறு நெறியினுய்த்தல்
இகழு மொழியிற் புகழ்தலு மேத்திய வின்னுரையிற்
புகழு நடையிற் பழித்தலும் போற்றுவர் பொற்கொடியே.

168[தொகு]

நிரனிறை யாவது சொல்லும் பொருளு நிரனிறுத்தல்
விரவு மகிழ்ச்சி யுளநிக ழார்வம் விளம்புமொழி
உரிய சுவைதா னிரதமேம் பாட்டுரை யூக்கமென்ப
பசியாய மோர்பொருள் தோன்றப் பிறிது பகர்தலென்னே.

169[தொகு]

தாங்குஞ் சமாயிதந் தான்முயல் செய்தி தனதுபயன்
ஆங்கத னாலன்றி மற்றொன்றி னால்வந்த தாகச்சொல்லல்
தீங்கி லுதாரதை செல்வமு முள்ளமுஞ் சீர்மைசெப்பல்
ஓங்கு மவனுதி யுண்மை தவிர வுரைத்திடலே.

170[தொகு]

செப்புஞ் சிலேடை யொருதிறஞ் சேர்சொற் பலபொருளை
ஒப்ப வுணர்த்தல் ஒருவினை பல்வினை யோங்குமுரண்
துப்புறழ் வாயின் சொலாய் நிய மத்தோ டநியம்முந்
தப்பில் விரோதத் துடனவி ரோதமுஞ் சாற்றினரே.

171[தொகு]

செல்லுஞ் சிறப்புத் தொழில்குண மங்கஞ் சிதைந்திடினு
நல்ல பயன்பட நாட்டல் உடனிலைச் சொன்னயந்து
சொல்லுங் குணமுத லொத்த தொகுத்தல் சொலும்பொருளும்
புல்லும் விரோதம் புணரின் முரணென்ப பொற்றொடியே.

172[தொகு]

மாறி யிகழ்மொழி வண்புக ழாய்நுவ லாச்சொல்வரும்
தேறுந் தெரிவில் புகழ்ச்சியொன் றைப்பழிக் கப்பிறிது
கூறிப் பகழுதல் சுட்டா நிகழ்பயன் கொள்பொருளில்
வேறு படநன்மை தீமை வெளிப்படல் மெல்லணங்கே.

173[தொகு]

துப்பா ரொருங்கியல் தூய விணைபண் பிரண்டுபொருட்(கு)
ஒப்பா வொருசொல்லு வைப்ப துயர்பரி மாற்றமது
செப்பார் பொருண்மா றிடல் திக ழாசியின் சீர்மைசொலின்
தப்பாத வாசீர் வசன மெனவுணர் தாழ்குழலே.

174[தொகு]

பண்பு தரும்பல் லலங்காரஞ் சேர்ந்து பயிலுவது
நண்பு தரும்விரா வாம் பா விகமது நற்கவியின்
ஒண்பொரு ளின்றொடர் காப்பிய முற்றி னுரைபெறுமால்
விண்புடை நின்றிடை யைச்சீ றியமுலை மெல்லியலே.

175[தொகு]

ஈண்டிய முற்றேக தேச வுவமை யுருவகமென்
றோண்டொரு மூன்றா வுருவக மோதுவர் காரணமுந்
தூண்டு மகார ணமுமா மிகைமொழி சொல்வர் எல்லாம்
வேண்டிய வேண்டிய வாறு விகற்பிப்ப மெல்லியலே.

176[தொகு]

யாப்பை யியம்பிடின் முத்தக மோடு குளகந்தொகை
காப்பிய மாம் முத் தகந்தன் பொருளோர் கவியின்முற்றும்
வாய்ப்பின் குளகம் பலபாட் டொருவினை மன்னுதொகை
கோப்பிற் பொருளன காப்பிய மாநூல் கொடியிடையே.

177[தொகு]

ஆதியு மீறு மிடையு மடி யொன்றி லேமடக்கும்
ஓதிய பாதங்க ணான்கினு மாம் ஒரு பாதமுற்றுந்
தீதிய லாமை மடக்கலு முண்டு தெரிந்தவற்றைக்
கோதிய லாமை விகற்பத் தினிலறி கோல்வளையே.

178[தொகு]

தந்திர வுத்தி குணமத மேயுரை தர்க்கந் தன்னில்
வந்திய லெண்கோன் முதலா யுளமாலை மாற்றுமுன்னா
வந்தியல் சித்திர மென்றின் னவுமலங் காரமென்றே
தந்திய லச்சிலர் சொன்னா ரவற்றையுஞ் சார்ந்தறியே.

179[தொகு]

ஏறிய மாலைமாற் றேசக் கரமினத் தாலெழுத்தாற்
கூறிய பாட்டு வினாவுத் தரமேக பாதமன்றித்
தேறிய காதை கரீப்புச் சுழிகுளஞ் சித்திரப்பா
வீரியல் கோமூத் திரியும் பிறவும் விரித்துரையே.

180[தொகு]

இடையே வடவெழுத் தெய்தில் விரவிய லீண்டெதுகை
நடையேது மில்லா மணிப்பிர வாளநற் றெய்வச்சொல்லின்
இடையே முடியும் பதமுடைத் தாங்கிள விக்கவியின்
தொடையே துறைநற் பிரளிகை யாறி துணிந்தறியே.

181[தொகு]

மறங்களி தாது வயிரபஞ் சம்பிர தந்தவசுக்
குறங்கணி கம்முத லாந்துறை யாகுங் குவலயத்தே
திறம்பல போக்குங் கிளவிக் கவிசெய் யுளின்பயனே
அறம்பொரு ளின்ப மொடுவீ டெனவறி ஆரணங்கே.
அலங்காரம் முற்றும்.
வீரசோழியம் முற்றும்
"https://ta.wikisource.org/w/index.php?title=வீரசோழியம்&oldid=1087441" இலிருந்து மீள்விக்கப்பட்டது