கணிப்பொறி அகராதி/D

விக்கிமூலம் இலிருந்து

D

daisy chain - A number of devices connected in series: eg. disk drive. சிற்றொடர் : தொடர் வரிசை யில் இணைக்கப்பட்டிருக்கும் பல கருவியமைப்புகள் எ-டு வட்டு இயக்கி.

daisywheel printer - A printer producing high quality hard copy on paper: e.g. program listings. சிற்றாழி அச்சியற்றி : தாளில் உயர்தர வன்படியை உண்டாக்கும் அச்சியற்றி. எ-டு நிகழ் நிரல் பட்டியல்கள்.

Dan Bricklin - டேன் பிரிக்லின்: காட்சிக் கணிப்பாணை (visicalc) 1979-இல் ஆப்பிள் கணிப்பொறிக்காகப் புனைந்தவர்.

DASA - டாசா: இது தகவல் ஈட்டும் அமைப்பு. அமெரிக்கக் கவுல்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. எல்லாவகை ஆய்வு முடிவுகளைப் பகுத்துப் பதிவு செய்து விளக்கமாகக் காட்டவல்லது. இது தொழில் துறைப் பயன்பாடுகளுக்கு அதிகம் உதவுவது. எ-டு அதிர்ச்சி, அதிர்வு, தகைவு, திரிபு, ஒலிஇயல், எறிபடை இயல்.

data - Any information which can be processed or communicated: eg. facts, statistics symbols etc. தகவல் : தரவு. முறையாக்கக் கூடிய அல்லது தெரிவிக்கக் கூடிய செய்தி. எ-டு உண்மைகள், புள்ளிவிவரங்கள், குறிகள் முதலியவை.

data bank - A collection of data stored in a computer system. தகவல் வங்கி : ஒரு கணிப்பொறித் தொகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல் திரட்டு.

data base - A collection of related data stored in a computer. It has indexed references: eg. subject headings, keywords and phrases. தகவல்தளம் : தொடர்புடைய தகவல்திரட்டு, கணிப்பொறியில் சேமித்து வைக்கப்பட்டிருப்பது. இது குறிப்பிட்ட குறிப்புதவிகளைக் கொண்டது. எ-டு பொருள் தலைப்புகள், திறவுச் சொற்கள், சொற்றொடர்கள்.

data base connection - தகவல் தள இணைப்பு: விஷீவல் பேசிக்கில் மூன்று தகவல் அணுக்க இடைமுகங்கள் உள்ளன. அவையாவன: 1) விசையுறு எக்ஸ் தகவல் பொருள்கள் (ADO) 2) தொலைத் தகவல் பொருள்கள் (RDO) 3) தகவல் அணுக்கப்பொருள்கள் (DAO).

data base management systems (DBMS), basic concepts of - தகவல் தள மேலாண்மை முறையின் (டிபிஎம்எஸ்) அடிப்படைக் கருத்துகள் : டிபிஎம்எஸ் என்பது ஒரு நிகழ்நிரல் அல்லது நிகழ்நிரல் திரட்டு. இதைப் பலரும் தகவலுக்காகப் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால், மாற்றிய மைக்கலாம். எளிய மற்றும் சிக்கலான வேண்டுகோள்களையும் அமைக்கலாம். இவற்றை எல்லாம் கொண்டு தெரிவு செய்த பதிவுருக்களின் பணியை மேற்கொள்ளலாம். பெரிய தகவல் தளங்களிலிருந்து விரைவாகத் தகவல்களை மீட்கவும் அணுகவும் இயலும். இதுவே இதன் பெருநன்மை. இதன் ஆற்றலுள்ள வன்பொருள் இயங்கும் பொழுது, பெரிய தகவல் தளத்திலிருந்து வினாடிகளில் ஒரு சிறு தகவலைக் கூடப் பெறலாம். இதிலுள்ள பணிகள் மூவகை: 1) தகவல் தளத்தில் தகவலைப் பதிதல், 2) இத்தளத்தில் பதிவுருக்களைப் பதிவு செய்தல், 3) தகவல் உட்பகுதிகளை அல்லது கணங்களைப் பெறுதல்.

data base, manipulation of - தகவல் தளத்தைக் கையாளல் : இதைப் பின்வரும் வழிகளில் கையாளலாம்.

1) தேடல், 2) பிரித்தல், 3) இணைத்தல், 4) தகவல் கணக்கீடுகள் செய்தல், 5) வடிகட்டல், 6) தகவல் தளத்தைப் பதிப்பதித்தல், 7) அறிக்கை இயற்றல் data base querying - தகவல் தள வினா : ஒவ்வொரு தகவல் தள மேலாண்மை முறையும் நிகழ்நிரல் மொழியை ஒத்த மொழி ஒன்றை அரவணைக்கிறது. இம்மொழிக்கு கட்டமைப்பு வினா மொழி, கவிமொ என்று பெயர். ஆங்கிலத்திற்கு மிக நெருக்கமான கூற்றுகளைப் பயன்படுத்தித் தகவல் தளத்துடன் தொடர்பு கொள்வதற்குகாக இது சிறப்பாக அமைக்கப்பட்டது. இம்மொழி மூலம் பின்வருவனவற்றைச் செய்யலாம்: 1) பதிவுருக்களை இடங்காணத் தகவல் தளத்தைத் தேடல், 2) பதிவுருக்களை மேம்படுத்த அட்டவணைகளுக்கிடையே இணைப்புகளை நிறுவுதல், 3) பதிவுருக்ககளின் துணைத் தொகுதிப் பட்டியலைத் தேடுதல், 4) கணக்கீடுகள் செய்தல், 5) பழைய பதிவுருக்களை நீக்கல், 6) பிற தகவல் மேலாண்மைப் பணிகளைச் செய்தல். ஓர் அட்டவணையிலுள்ள தகவலின் சிறப்புக் கருத்துகளாக வினாக்களைக் கருதலாம். இவ்வினாவிலிருந்து பெறும் முடிவை எப்பொழுதும் தனியாகச் சேமித்து வைத்து வேண்டிய பொழுது காணலாம்.

data base types - தகவல் வகைகள் : கருத்தமைப்பு அடிப்படையில் இத்தளத்தைப் பின் வருமாறு வகைப்படுத்தலாம்.

1) தட்டைக் கோப்புத் தகவல் தளம்: இதில் தனித்தகவல் அட்டவணை இருக்கும். தனியாளோ குழுவோ இதைப் பயன்படுத்தலாம். முகவரிப் பட்டியல்கள், பொருள் பட்டியல்கள் பேணப் பயன்படுவது. சிக்கலான தகவல்களை இதில் பெற இயலாது.

2) தொடர்பு நிலைத் தகவல் தளம்: இதில் ஒன்றுக்கு மற்றொன்று தொடர்புள்ள அட்டவணைகள் தொகுதியாக அமைந்திருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட அட்டவணைகளில் இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட புலங்கள் அட்டவணைகளுக்கிடையே ஒரு தொடர்பை உருவாக்கும். பொதுப்புலங்கள் திறவுகள் (கீஸ்) எனப்படும். இதுவே இன்று தொழில்துறையில் அதிகம் பயன்படுவது.

3) படிநிலைத் தகவல்தளம் : முதலில் இது முதன்மைக் கணிப்பொறிகளில் பயன்பட்டது. இதில் பதிவுருக்கள் மரம் போன்ற அமைப்பில் உருவாக்கப்படும். பதிவுரு வகைகளுக்கு இடையே உள்ள உறவு தாய்-சேய் உறவு போன்றது.இந்த உறவில் ஒரு குழந்தைவகை ஒரு தனித்தாய் வகையோடு உறவுகொள்ளும்.

4) வலையமைவுத் தகவல் தளம்: இது படிநிலைத் தகவல் தளத்தை ஒத்தது. வேறுபாடு இதுவே. ஒரு பதிவுருவகை ஏனைய பதிவுரு வகைகள் ஒன்றோடு தொடர்பு கொள்ளக் கூடியது.

5) பொருள் வழித் தகவல்தளம்: இது ஒரு புதிய அமைப்பு. அண்மைக் காலத்தில் உருவானது. முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறையை மேற்கொள்வது. இதிலுள்ள தகவல் இனங்கள், பண்புகள், நடைமுறைகள் ஆகியவை சிக்கலான இனங்களாகத் தொகுக்கப்படும். இத்தொகுப்பே பொருள்கள் எனப்படும். பார்க்கக் கூடிய அளவில் ஒரு பொருள் என்பது விளை பொருளாகவோ, நிகழ்ச்சியாகவோ, வீடாகவோ, பயன்படுபொருளாகவோ, கலைப்பொருளாகவோ இருக்கும். இப்பொருளை அதன் இயல்புகள், பண்புகள், நடைமுறைகள் ஆகியவை வரையறை செய்பவை. இதன் சிறப்பியல்புகளுக்குப் பாடம் (உரை), ஒலி, வரைகலை, ஒளி ஆகியவை உண்டு. நிறம், அளவு, பாணி, விலை ஆகியவை பண்புகளுக்கு எடுத்துக் காட்டுகள். நடை (செயல்) முறை என்பது பொருளோடு தொடர்புள்ள முறையாக்கலை அல்லது கையாள்வதைக் குறிக்கும்.

data bus - An electrical path way between the microprocessor and memory in a computer. தகவல் போக்குவாய் : நுண் முறையாக்கிக்கும் ஒரு கணிப்பொறியின் நினைவகத்திற்கும் இடையிலுள்ள மின்வழி.

data capture - method of collecting data and converting it into a form to be used by a computer. தகவல் ஈட்டல் : தகவலைத் திரட்டிக் கணிப்பொறி பயன்படுத்துமளவுக்கு ஒரு வடிவத்திற்கு மாற்றல்.

data file, kinds of - தகவல் கோப்பின் வகைகள்: இது இருவகை.

1) ஓட்டவழிக்கோப்பு: வேறு பெயர் திட்டக் கோவை. இது மேலும் இருவகைப்படும். i) பாடக்கோப்புகள்: இதிலுள்ள கோப்புகள் அடுத்தடுத்துள்ள உருக்களைக் கொண்டிருக்கும். ii) படிவமைப்பு இல்லாக் கோப்புகள்: இதற்குத் தனித்த சேமச் சார்பலன் தொகுதி உண்டு.

2) முறைவழிக் கோப்பு: வேறு பெயர் தாழ்நிலைக்கோப்பு. இது தாழ்நிலைச் சார்பலன்களைக் கொண்டது.

data-organization - தகவல் அமைப்பு : இது மடிப்பிகள் (போல்டர்ஸ்) ஒழுங்காக அமைந்தது. ஒரு நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம். அதற்கு அலுவலகம், அதன் பொருள்கள், வாடிக்கையாளர்கள், வழங்குபவர் எனப்பல உண்டு. இத்தாள்கள் எல்லாம் வேறுபட்ட மடிப்பிகளில் நிரப்பப்பட்டிருக்கும்; ஒரு நிரப்பு அறையில் சேமிக்கப் பட்டிருக்கும் மடிப்பிகள், அறைகள் ஆகியவற்றிலுள்ள குறிப்புச் சீட்டுகள் நாம் விரும்புவதை எடுக்க உதவும். இதற்கு விண்டோஸ்-98 நன்கு உதவுகிறது.

data processing - The acquisition, recording and manipulation of data by means of a computer. This process involves data collection, verification, validation and report generation. தகவல் முறையாக்கல் : தரவுச் செயலாக்கம். கணிப்பொறியினால் தகவல்களை ஈட்டல், பதிதல், கையாளல் ஆகியவற்றைச் செய்தல். இம்முறையிலுள்ள செயல்களாவன. 1) தகவல் திரட்டல், 2) சரிபார்த்தல், 3) செல்லத்தக்கதாக்கல், 4) அறிக்கை உருவாக்கல்.

data processing computerised, advantages - பா. computerised data processing, advantages of.

data processing, kinds of - தகவல் முறையாக்கல் வகைகள் : இது இருவகை 1) கை வழி முறையாக்கல்: கையால் தகவல்களைத் தொகுத்தல் எ-டு வகுப்பாசிரியர் தேர்ச்சி அறிக்கை தயாரித்தல்.

2) கணிப்பொறிவழி முறையாக்கல்: தகவல்களைக் கணிப்பொறியில் செலுத்தித் தொகுத்தல். எ-டு அரசுத் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள்.

data processing manual, disadvantages of - கைவழித் தகவல் முறையாக்கலின் தீமைகள்:

1) துல்லியம் பயனுறுதிறன் குறைவு.

2) கைவழி முறைகளுக்கு அதிக நேரமாகும்.

3) மனித முயற்சி கணிப்பீட்டுப் பிழைகளைச் செய்ய வல்லது. 612 ஐ 621 என்று எழுதுவதற்கு வாய்ப்புள்ளது.

4) தாள் பதிவேடுகளில் தகவல்களை எழுதுவதால் அவை பருமனில் அதிகமாகிப் பேணுவதற்கு இடராக இருக்கும்.

5) திருத்தம், மாற்றம் ஆகியவற்றைச் செய்தல் கடினம்.

data representation - தகவல்களைக் குறித்தல் : இதில் பின் வருவன அடங்கும்: 1) இருமிகள், எண் இருமிகள், 2) இரும எண்கள், 3) பதின் அறும எண்கள், 4) நிகர் சரிபார்ப்பு இருமி.

data retrieval - The selection and extraction of data from a data base thro a keyboard connected to a computer. தகவல் மீட்பு : தகவல் தளத்திலிருந்து தகவலைப் பிரித்தலும் தெரிவு செய்தலும், கணிப்பொறியுடன் இணைக்கப்பட்ட விசைப் பலகையால் இது நடைபெறுகிறது. data sheet view - தகவல்தாள் காட்சி : இது அட்டவணை அமைப்பை உருவாக்கவும், ஆவணப் பட்டியலைப் பார்வையிடவும் தகவல்களை பதிந்து பதிப்பிக்கவும் பயன்படுவது வேறுபெயர் அட்டவணை.

data sink - The end of a communication channel at which data is received. தகவல் அமிழ்வு : தகவல் தொடர்பு வழி முடிதல். இங்குத் தகவல் பெறப்படும்.

data type conversion - தகவல் வகை மாற்றம் : சி மொழியில் இதற்குத் திட்டமான விதிகள் உண்டு. விதிகளைப் பிற்சேர்க்கையில் அட்டவணையில் கண்டுகொள்க. a+b என்னும் கோவையை எடுத்துக்கொள். a என்பது முழுஎண் மாறி என்றால், b என்பது மிதப்பு மாறி. பின் b என்பது மிதப்பு மாறியாக மாற்றப்படும். கோவையின் பலன் மிதப்பு முறையின் படி மதிப்பிடப்படும்.

data types - தகவல் வகைகள் : இவை அனைத்தும் மாறி என்று கொள்ளப்பட வேண்டியவையே. வேறுபட்ட வகைகள் பின்வருமாறு : 1) எண் இருமி 2) பூல் 3) முழு எண் 4) நீளம் 5) தனி 6 இரட்டை 7) செலாவணி 8) பொருள் 9) நாள்,10) சரம் 1) மாறிடம்.

data warehouse - தகவல் சேமகம் : இது ஒரு கணிப்பொறி முறை. தொழில் துறை ]யாளர்களுக்கு முடிவெடுப் ]பதற்கு வேண்டிய தகவல்களை உடனுக்குடன் தருவது.

date arithmetic - நாள் கணக்கு : இதைக் கையால் எழுதும் பொழுது எல்லாத் தகவல்களையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றைக் கணிப்பொறியில் கொடுத்து அட்டவணைச் செயலி மூலம் செயற்படுத்துவது எளிது. பல தகவல்களுக்கும் படிவமைப்பு ஏற்படுத்தலாம். எ-டு 5-10-00 12-8-00 என்னும் இரு நாட்களுக்கு இடைபட்ட நாள்களை கணக்கிடுவோம். இதைச்செய்ய இந்த நாள்களை எவையேனும் இரு நுண்ணறைகளில் - B2, B3 - கொடுக்கவும். பின் = B2 - B3 என்னும் வாய்பாட்டை நுண்ணறை B4 - இல் கொடுக்கவும். விடை 10746 நாள்கள் என்று நுண்ணறை B4 - இல் தோன்றும்.

deadlock - தேக்கம் : இது ஒரு கணிப்பொறியில் பணி மேலும் நடைபெறாது இருக்கும் நிலை. வேறு பெயர்கள் சாவுத்தழுவல், இடைப்பூட்டு, முடிச்சு.

dead time - A period of time allowed between two related events to avoid overlap. வெற்று நேரம் : தொடர்புள்ள இரு நிகழ்ச்சிகளுக்கிடையே பகுதி ஒத்திருப்பதைத் தடுக்க அனுமதிக்கப்படும் நேரம்.

debug - To remove an error in a computer programme. பிழைநீக்கு : ஒரு கணிப்பொறி நிகழ்நிரலில் பிழையைக் களைதல்.

decade - A group of 10 storage locations: eg. magnetic drum. பத்தாமிடம் : பத்துச் சேமிப்பு இடங்களின் தொகுதி எ-டு காந்த உருளை.

decimal notation - Decimal numbers usually represented by binary digits. பதின்மக் குறிமானம் : வழக்கமாகப் பதின்ம எண்கள் இரும இலக்கங்களால் குறிக்கப்படுதல்.

decision - An operation carried out by a computer to choose between alternative courses of action by comparing the relative magnitude of two specified operands. முடிவு : கணிப்பொறியினால் நிறைவேற்றப்படும் செயல். இச்செயலின் ஒன்றுவிட்ட ஒன்று போக்குகள் தெரிவு செய்யப்படும். குறிப்பிட்ட இரு செயலிடங்களின் சார்பு அளவை ஒப்பிட்டுச் செய்யப்படுவது இது.

decision box - A flowchart symbol used to represent a decision. முடிவுப்பெட்டி : வழிமுறைப் படக்குறியீடு, முடிவைக் குறிக்கப்பயன்படுவது.

decision element - A circuit doing a logical operation: and, or, not, except on one or more binary digits of input information representing yes or no and which expresses the result in its output otherwise known as decision gate. முடிவுக் கூறு : முறைமைச் செயலைச் செய்யும் மின் சுற்று. எ-டு உம், அல்லது இல்லை, தவிர. இவை உட்பலனுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட இரும எண்களில் இருக்கும். இதனால் முடிவு வெளிப் பலனாகத் தெரியும். வேறுபெயர் முடிவு வாயில்.

decision instruction - An instruction capable of discriminating between the relative value of two specified operands. முடிவுக் கட்டளைக் குறிப்பு : குறிப்பிட்ட இரு செயலிடங்களுக்கிடையே உள்ள மதிப்பை வேறுபடுத்தி அறியும் குறிப்பு.

decision table - A table of contingencies to be considered in the definition of a problem together with the actions to be taken. முடிவு அட்டவணை : சில் லறை இனங்களின் அட்ட வணை. எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுடன் ஒரு சிக்கலை வரையறுப்பதில் கருதப்படுவது.

declaration time - In using the magnetic tape, the time required from the completion of a reading or writing operation to the moment the tape is stopped. எதிர்முடுக்க நேரம் : காந்த நாடாவைப் பயன்படுத்தும் பொழுது, படிக்கும் அல்லது எழுதும் செயல் முடிவடைவதிலிருந்து நாடா நிற்கும் வரையில் தேவைப்படும் நேரம்.

decode - to determine the meaning of a set of signals describing an operation to be carried out. பூட்டவிழ் : நிறைவேற்ற வேண்டிய ஒரு செயலை விளக்கும் குறிகைத் தொகுதிகளின் பொருளை உறுதிசெய்வது.

decoder - 1. A device translating a set of code signals. 2. decoder circuit. 3. matrix. 4. tree. பூட்டவிழ்ப்பி : 1) குறிமுறைக் குறிகைகளைப் பெயர்க்கும் கருவியமைப்பி, 2) பூட்ட விழ்ப்பு மின்சுற்று, 3) அணி, 4) மரம்.

decrement - To decrease a variable. தாழ்வு : ஒரு மாறியைக் குறைத்தல்.

decrement field - The part of an instruction word being used to modify the contents of a stoage location or register. தாழ்வுப்புலம் : கட்டளைக் குறிப்புச் சொல்லின் பகுதி; சேமிப்பு இடம் அல்லது பதிவகத்தின் அடக்கங்களை மாற்றியமைக்கப் பயன்படுத்தப்படுவது.

decryption - தகவல் விடுவிப்பு : குறிமுறையில் அமைக்கப் பட்ட செய்திகளை மீண்டும் எளிய செய்திகளாக மீட்டல். ஒ. encryption.

dedicated channel - A link used for communication between devices. Its function is soley devoted to serving these devices. ஒப்படைப்புச் செல்வழி : கருவியமைப்புகளுக்கிடையே தகவல் தொடர்புக்காகப் பயன்படும் இணைப்பு. இதன் வேலை முழுக்க முழுக்க இக்கருவியமைப்புகளை இயங்கச் செய்வதே.

deep magic - An awesomely arcane technique control to a programme. ஆழ் மாயக்கட்டு : ஒரு நிகழ் நிரலைக் கட்டுப்படுத்தும் ஒளி மறைவான நுணுக்கம், அச்சந் தருவது.

defect - A fault in hardware or software. It may cause processing failures in a computer system. குறை : வன்பொருள் அல்லது மென்பொருளிலுள்ள குறை. ஒரு கணிப்பொறித் தொகுதியில் இது முறையாக்குந் தவறுகளை உண்டாக்குவது.

definition list - வரையறைப் பட்டியல் : சொற்களை வரையறுக்கப்பயன்படுவது. பா. list, kinds of.

degauss - To erase information from a magnetic tape, disk, drum or core. அழித்தல் : காந்த நாடா, வட்டு, உருளை அல்லது உள்ளகத்திலிருந்து தகவலை நீக்கல்.

degausser - A device designed to demagnetise tape otherwise known as bulk eraser. அழிப்பி : ஒரு காந்த நாடாவைக் காந்த நீக்கம் செய்ய வடிவமைக்கப்பட்ட கருவியமைப்பு.

degradation - The operation of a computer system providing a lower level of service in case of failures. நிலை இறக்கம் : தவறுகின்ற பொழுது ஒரு கணிப்பொறித் தொகுதியின் செயல், தாழ்பணி நிலையில் இருக்கும்.

delay counter - A counter inserting a time delay in a sequence of events. தாமத எண்ணி : நிகழ்ச்சி வரிசையில் காலதாமதத்தை உண்டாக்கும் எண்ணி.

delay time - The amount of time by which the arrival of signal is retained after transmission thro physical equipment. தாமத நேரம் : கருவி வழியாகச் செலுத்துகை நடைபெற்ற பின் குறிகை வருவதற்குரிய நேர அளவு பின்னடைதல்.

deletion - Any operation to eliminate a record or group of records from a file or folder or to remove a programme from the memory of a computer. நீக்கல் : ஒரு கோவை அல்லது மடிப்பியிலிருந்து பதிவுருக்கள் தொகுதியை நீக்கும் செயல். அல்லது கணிப்பொறி நினைவகத்திலிருந்து நிகழ்நிரலை நீக்கல்.

deletion operator - The part of a data removing and replacing an existing record when it is added to file. நீக்கல் செயலி : தற்பொழுது இருக்கும் பதிவுரு, கோப்புடன் சேர்க்கப்படும் பொழுது, அதைநீக்கும் அல்லது மாற்றீடு செய்யும் தகவலின் பகுதி.

delimiter - A marker character used to limit the bounds of a group of related characters in a programme not considered a member of the group, a character, a return, a comma or slash may be inserted as a delimiter. வரையறைப்படுத்தி : ஒரு தொகுதியின் உறுப்பு இல்லை என்று கருதப்படும் தொடர்புடைய உருக்கள், தொகுதியின் எல்லைகளை வரம்புப்படுத்தும் குறிப்பி உரு. ஓர் உரு, திருப்பம், காற்புள்ளி, அல்லது ஒரு சாய்வுக் கோடு, வரையறைப்படுத்தியாகச் செருகப்படும்.

deltagram - A channel based message is conveyed within minutes and delivered by fax or e-mail. Nominal fee is Rs. 10. தொலை வழிவரையம் : தகவல்கள் சில நிமிக்குள் தெரிவிக்கப் பட்டுத் தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் ஒப்படை செய்யப்படுகிறது. குறைந்த கட்டணம் ரூ. 10.

demodulation - Coverting an analog signal back into a digital one. பண்பிறக்கம் : மீண்டும் ஒப்பு மைக்குறிகையை இலக்கக் குறியாக மாற்றுதல்.

dense list - The list where all the cells contain records of the file. செறிவுப் பட்டி : இதில் எல்லா நுண்ணறைகளும் கோப்பின் பதிவுருக்களைக் கொண் டிருக்கும்.

density - A measure of the compactness of recording for data storage. செறிவு : தகவல் சேமிப்பின் பதிவு நெருக்க அளவு.

deposit - To preserve the contens of an area of memory by writing to a backing store. வைப்பு : தாங்கு சேமிப்புக்கு எழுதுவதன் மூலம் நினைவகப் பகுதியின் அடக்கங்களைப் பாதுகாத்தல்.

DEQSOL, differential equation solver - டெக்கால், வேறுபடு சமன்பாடு தீர்ப்பி : ஜப்பானைச் சார்ந்த ஹிச்சாய் என்பவரால் உருவாக்கப்பட் டது. எண்சார் பகர்ப்பு மென்பொருள் உருவாக உதவுவது.

description - A significant element of data used to identify a record in which it appears. வண்ணனை : ஒரு தகவலின் சிறப்புக் கூறு. இது தானுள்ள பதிவுருவை அடையாளங் கண்டறியப் பயன்படுவது.

designation - An item of data forming part of a computer record. தகவல் பெயர் : ஒரு கணிப் பொறிப் பதிவுருவின் பகுதியாகவுள்ள தகவல் இனம்.

designation punch - A hole in a punched card showing the nature of the data. Otherwise known as control hole, control punch, designation hole, function hole.

தகவல் பெயர் பொத்தல் : துளையிட்ட அட்டையிலுள்ள துளை; தகவலின் இயல்பைக் காட்டுவது. வேறு பெயர்கள்: கட்டுப்பாட்டுத் துளை, கட்டுப்பாட்டுப் பொத்தல், தகவல் பெயர்த்துளை, வேலைத் துளை.

desktop computer-A unit with physical dimensions fitting conveniently on a desktop. மேசைக் கணிப்பொறி : மேசையில் வசதியாக அமையும் பரு மன்களைக் கொண்ட அலகு.

desk top publishing, DTP - மேசை வெளியிடல், டிடிபி: நுண்முறையாக்கிப் பயனுக்குரிய மென்பொருள். இம் முறையாக்கி பாடத்தைக் கையாள்வது. இதில் எழுத்தளவு, நுண்மையாக நெருக்கிச் செய் தல், பத்தியமைப்பு, வரை கலை முதலியவை கட்டுப்படுத் தப்படும். இதைச் செய்யச் சுட்டெலியும் விண்டோசும் உதவும். இதில் அலகிடும் உரு முறையாக்கி இருக்கும். இது பக்க வண்ணனை மொழிக்கு இணையானது. உண்டாகும் வெளிப்பலன் லேசர் அச்சியற்றியை இயக்கி அச்சுப்படியை அளிக்கும். இதை நன்கு திருத்தம் செய்து முடிவாக எடுக்கப்படும் அச்சுப்படி அச்சிட வேண்டிய செய்திகளுக்கு மூலமாக அமையும். இம்மூலம் படலத்தில் படிஎடுக்கப் பட்டு அச்சுக்கு அனுப்பப்படும்.

desktop publishing, benefits of - டிடிபியின் நன்மைகள்: 1)ஒரு புதிய தொழில்நுட்பம். வெறுபெயர் ஒளியச்சுக் கோவை. 2)கையால் அச்சுக் கோப்பதை விட மூன்று மடங்கு அதிக மாகத்தட்டச்சு செய்யலாம். 3)அச்சு மிகத் தெளிவாக இருக்கும். 4)முதலில் ஒரு புள்ளி எழுத்தில் தட்டச்சு செய்து பிறகு வேண்டிய புள்ளி எழுத்துகளுக்கு மாற்றலாம். 5)வேண்டியவாறு வடிவ மைப்பு செய்யலாம். 6)திருத்தம் செய்வது எளிது. 7)ஒருபக்கத்தில் இருக்கும் செய்தியை வேறு பக்கத்திற்குச் கொண்டு செல்வது எளிது. 8)புத்தக வேலைகளை மிக விரைவாக முடிக்கலாம். 9)தட்டச்சு செய்து படி எடுத்த செய்திகளை எதிர்காலப் பயனுக்கு சேமித்துவைத்துக் கொள்ளலாம். 10)திருத்தங்களைத் திரையிலேயே படித்துச் செய்யலாம். 11)அனைத்துச் சில்லறை வேலைகளையும் அழகாகச் செய்யலாம். 12)அச்சுத் தொழில்நுட்ப இயலில் ஒரு பெரும் புரட்சி ஏற்படுத்தி வருகிறது.

desk top publishing, definition of - டிடிபி இலக்கணம்: வசதியான மேசையில் கணிப்பொறியை வைத்து வேண்டிய தகவல்களைத் தட்டச்சு செய்து அச்சுப்படி எடுத்தல்.

Desktop short circuits -மேசைக் குறுக்கு வழிகள் : விண்டோசிலுள்ள ஆராய்வி மூலம் இவற்றை உருவாக் கலாம். -

Desktop, structure of -மேசை அமைப்பு : விண்டோஸ்-98-இல் அடிப்படை வேலை செய்யும் மேடை மேசையே. இதில் எல்லா நிகழ்நிரல்களும் உள்ளன. சுட்டெலியைப் பயன்படுத்தி வேண்டியவற்றைப் பெறலாம். இம்மேசையில் பல நுண்படங்கள் உள்ளன. இவை பயன்பாடு களைக் குறிப்பவை. ஒவ்வொரு படமும் ஒரு குறியத்தைக் கொண்டிருக்கும். இக்குறியம் பயன்பாட்டின் பெயரைக் குறிக்கும். எ-டு என் கணிப் பொறி, மீள்சுழற்சிக் குதிரகம், இணைய ஆராய்வி. தவிர இதிலுள்ள் பிற பகுதிகளாவன: 1) பணிச்சட்டம் 2) தொடங்கு பொத்தான் 3) தொடங்கு பட்டி 4) விரைவு பணிச்சட்டம் 5) அமைப்புத் தட்டு 6) பணி அட்டவண்ணப் படுத்தி.

Device - The computer component or computer itself. கருவியமைப்பு: கணிப் பொறிப் பகுதி அல்லது கணிப்ப்ொறி. DHTML - டிஎச்டிஎம்எல்:இது தனிச்சொல் ஒட்டுகளை அளித்து எழுதுமொழிகளைப் பயன்படுத்துவது.

Diagnosis -To locate errors in software or failures in hardWafe, குறையறிதல்:மென்பொருளில் பிழைகளையும் வன்பொருளில் தவறுகளையும் கண்டறிதல்.

Diagnostic test -The use of a special programme to identify and isolate failures in a computer-குறையறிஆய்வு :ஒரு கணிப் பொறியில் தவறுகளை அடையாளங்கண்டு பிரித்தறியத் தனி நிகழ்நிரலைப் பயன்படுத்தல்.

Dialect -Variations in the syntax of a particular computer language.-கிளை மொழி :ஒரு குறிப்பிட்ட கணிப்பொறி மொழியின் தொடரியலில் உள்ள வேறுபாடுகள்.

Dialog, box -உரையாடல் பெட்டி :இது விண்டோசில் பயன்படுகிறது. தகவலைத் திரையில் காட்டுகிறது. மற்றும் துலங்கலைத் தட்டச்சு செய் வது அல்லது தெரிவுப் பட்டியலிருந்து தேர்ந்தெடுப்பது. இப்பெட்டியிலுள்ள கட்டுப் பாடுகள் பின்வருமாறு: 1) பாடப்பெட்டி, 2) பட்டிப் பெட்டி, 3) கீழிறக்கும் பட்டிப் பெட்டி, 4) வானொலிப் பொத்தான், 5)சரிபார்ப்புப் பெட்டி, 6)பொத்தான், 7)தந்தி, 8)நழுவி.

Dibit -A pair of binary digits -ஒரிணை இரும எண்கள்.

Dictionary -A table establishing the correspondence between specific words and their code representation. அகராதி :இது ஓர் அட்ட வணை, குறிப்பிட்ட சொற்களுக்கும் அவற்றின் குறிமுறை குறிபாட்டிற்கும் இடையே தொடர்பை ஏற்படுத்துவது.

Digit -Any of the ten numbers 0 to 9.The binary number system uses the digits 1 and 0. இலக்கம் :0-9 வரை உள்ள எண்களில் ஒன்று. 1,0 என்னும் இலக்கங்களை இரும எண் முறை பயன்படுத்துகிறது.

Digital cash -இலக்கவழிůபணம் :பா. e-cash

Digital computer -A device using digital circuits (e.g. gates and computers to process data. இலக்கக் கணிப்பொறி:இலக்க மின்சுற்றுகளைத் (வாயில்கள், எண்ணிகள்) தகவலை முறையாக்கப் பயன்படுத்தும் கருவியமைப்பு.

Digital data -Data stored electromagnetically in the form of discrete digits. இலக்கத் தகவல்:தனித்தனி இலக்க வடிவில் மின்னணு முறையில் சேமிக்கப்படும் தகவல்.

Digital personality -இலக்க ஆளுமை

Digital recording -A technique used for recording information as discrete points on magnetic recovering media. eg. magnetic tape or disks. இலக்கவழிப் பதிவு : காந்தப்பதிவு ஊடகங்களில் தனித்தனிப் புள்ளிகளாகத் தகவலைப் பதிவு செய்யப் பயன்படும் நுட்பம்.

Digital signal -An electronic signal got by converting an analogue signal into a series of separate voltages representing binary ones and zeros. இலக்கக் குறிகை : மின்னணுக் குறிகை. ஒப்புமைக் குறிகையைத் தனித்தனித் தொடர் மின் னழுத்தங்களாக மாற்றிப் பெறுவது இது. இவ்வெழுத்துக்கள் இரும எண் 1, 0 யைக் குறிக்கும்.

Digital subscriber line, DSL -A modern technology achieving substantial speed increasing over conventional lines.The operation may be symmetric or asymmetric. இலக்க உறுப்பினர் வழி, டிஎஸ்எல் :பழைய முறை வழி களைவிடக் குறிப்பிடத்தக்க விரைவைப் பெறும் இக்காலத் தொழில்நுட்பம். இயக்கம் சமச்சீர் உள்ளதாகவோ சமச் சீர் அற்றதாகவோ இருக்கும்.

Digitizer-A device to convert analog measurement,such as drawing into digital form to be used for input into a digital computer.இலக்கமாக்கி: வரைபடம் முதலியவற்றை ஒப்புமை அளவீடுகளிலிருந்து இலக்க வடிவத்தில் மாற்றும் கருவியமைப்பு. இலக்கக் கணிப்பொறியில் இது உட்பலனை உண்டாக்கப் பயன்படுவது.

Digit time - The time interval corresponding to a specific digit signal in a series. இலக்க நேரம் :ஒரு வரிசையில் குறிப்பிட்ட இலக்கக் குறி கையோடு தொடர்புள்ள கால இடைவெளி.

Dimensioning variables -மாறிகளைப் பருமனாக்கல் :ஒரு நிகழ்நிரலில் ஒரு மாறியைப் பருமனாக்கும் கூற்றைப் பயன்படுத்த வேண்டும் ஒரு மாறியை அறுதியிடப் பயனாளி விரும்புகிறார் என்பதை இக்கூற்று கணிப்பொறிக்குத் தெரிவிக்கும். புதிய மாறியின் தகவல் வகை, பெயர் ஆகிய வற்றையும் இது சுட்டிக்காட்டும்.

Direct access-Fast method of finding data in a storage medium. eg. magnetic disk, RAM.நேர் அணுக்கம் :ஒரு சேமிப்பு ஊடகத்தில் தகவலைக் காணும் விரைவு முறை எ-டு காந்த வட்டு, RAM

Direct access memory - random access memory நேரடி அணுக்க நினைவகம்:வரம்பில் அணுக்க நினைவகம்.

Direct address -Any address specifying the location of an operand நேர்முகவரி :ஓர் செயலிடத்தைக் காணும் முகவரி.

Direct memory access, DMA-A facility of some computers allowing data to be transferred direct into memory without using a programme under the control of the microprocessor. This is of special value in high speed memory system. Eg. disk storage. நேர் நினைவக அணுக்கம், டிஎம்ஏ: சில கணிப் பொறிகளிலுள்ள வசதி. நுண்முறையாக்கியின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு நிகழ்நிரலைப் பயன்படுத் தாமல், தகவலை நேரடியாக நினைவகத்திற்கு அனுப்புதல். உயர்விரைவு நினைவக முறை யில் இது சிறப்புள்ளது. எ-டு வட்டுச் சேமிப்பு.

Director -An integral part of an operating system having direct control of internal resources of the computer.

இயக்கி: ஓர் இயக்கும் அமைப்பின் இன்றியமையாப் பகுதி. கணிப்பொறியின் உள் மூலங்களோடு நேரடி கட்டுப் பாடு உடையது.

Directory -List of files on a computer storage medium for user's easy reference. Also known as catalogue. கோப்படைவு :கணிப்பொறிச் சேமிப்பு ஊடகத்திலுள்ள கோப்புகளின் பட்டியல். வேறு பெயர் பட்டியல்.

Disk -A rotating circular plate having a magnetizable surface to store data. வட்டு :உருளும் வட்டத் தட்டு. தகவல்கலைச் சேமிக்கக் காந்த மேற்பரப்புண்டு.

Disk drive -A device to rotate magnetic disk and access its data by means of a read/write head. வட்டு இயக்கி : படிக்கும்/எழுதும் தலையினால் காந்த வட்டை உருட்டித்த தகவலை அணுக்கம் கொள்ளுமாறு செய்யும் கருவியமைப்பு.

Disk operating system,DOS -An operating system using disk for its secondary storage medium. வட்டு இயக்கு அமைப்பு, வஇஅ, டிஒஸ்: வட்டு தன் இரண்டாம் நிலைச் சேமிப்புக்காக வட்டைப் பயன்படுத்தும் இயக்கு அமைப்பு.

Disk storage -An external computer storage device. வட்டுச் சேமிப்பு: கணிப் பொறியின் புறத்தே உள்ள சேமிப்புக் கருவியமைப்பு.

Display -An output device: e.g SCreen. -காட்சிக் கருவி : வெளிப்பலன் கருவியமைப்பு. எ-டு திரை.

Displaying control -An interface unit used to connect a number of visual display units to a central processor. காட்சிக் கட்டுப்பாடு :இடை முக அலகு. மைய முறையாக்கியுடன் பல காட்சிக் கருவிகளையும் இணைக்கப் பயன் படுவது.

Distributed control system -A collection of modules each with its own specific function. பகிர்வுக் கட்டுப்பாடு அமைப்பு :அலகுத் தொகுப்பு. ஒவ்வொரு அலகும் அதற்குரிய குறிப்பிட்ட வேலையைச் செய்யும்.

Disturbance -An undesired common signal in a control system.அலைக்கழிவு : ஒரு கட்டுப் பாட்டுத் தொகுதியில் உள்ள தேவையற்ற பொதுக்குறிகை.

Dithering -நிறச்சேர்க்கை:அடுத்தடுத்துள்ள வேறுபட்ட நிறப்புள்ளிகளைச் சேர்த்துப்பயன்படுத்தல். இவை மீண்டும் வேறு ஒரு தனித்தோற்ற நிறத்தை உருவாக்கும். இது நிறக்காட்சித் திரையில் அமையும்.பா. colour usage.

Document -1) Any form containing details of some transcation 2) A writtern text and charts describing the purpose,nature,usage and operation of a programme. ஆவணம் :1) ஒரு நடவடிக்கையின் விவரங்களைக் கொண்டுள்ள படிவம். 2) எழுதிய பாடமும் படங்களும் ஒரு நிகழ்நிரலின் இயக்கம், பயன், இயல்பு, நோக்கம் ஆகிய வற்றை விளக்கல்.

Document,adding attraction to-ஆவணத்திற்குக் கவர்ச்சி யளித்தல் : 1) நிறம், 2) படம், 3) கரை.

Documentation -A set of instructions supplied with a computer explaining how to operate the computer. ஆவணமாக்கல் : ஒரு கணிப் பொறிக்கு அளிக்கப்பட்ட கட்டளைக் குறிப்புகள் தொகுதி. இது கணிப்பொறியை இயக்குவது எவ்வாறு என்பதை விளக்குவது.

Document, features of -ஆவணச் சிறப்பியல்புகள்:1) வண்ணமிடல், 2) படம் சேர்த்தல், 3) பாடஇயைபு, 4 ஆவணங்களை இணைத்தல்.

Document file -ஆவண்க்கோப்பு:பயன்பாட்டு அடிப்படையில் பயனாளியால் உருவாக்கப்படுவது.

Domain name -புலப்பெயர்: இது ஒரு குறிசீட்டு. இணையத்தில் ஒரு கணிப்பொறியை இனங்காண உருவாக்கப்பட்டது.

Domain name system -புலப்பெயர்முறை: கணிப்பொறிகளைப் பெயரிடும் சீட்டுகளை ஐபி எண்களோடு இயைபு படுத்த அமைந்த படிநிலை வரிசையே இப்பெயர்.

Domain-tip memory, DOT -The computer memory in which presence or absence of a magnetic domain in a localised region of a thin magnetic film designates 1 or 0.Otherwise known as magnetic domain memory. புலமுனை நினைவகம், டிஓடி: இது கணிப்பொறி நினைவகம். இதில் ஒரு மெல்லிய காந்தப் படலத்தின் பகுதியில் காந்தப்புலம் இருப்பதும் இல்லாததும் 1, 0 என்பவற்றைச் குறிக்கும். வேறுபெயர் காந்தப்புல நினைவகம்.

Dot matrix printer -A printer using a printhead. This head forms the shape of characters as a matrix of small dots. புள்ளி அணி அச்சியற்றி: அச்சுத்தலையைப் பயன் படுத்தும் அச்சியற்றி. சிறு புள்ளிகள் கொண்ட ஓர் அணியாக் இத்தலை உருக்கள் வடிவங்களைத் தோற்றுவிக்கும்

Dot matrix printer,description of -புள்ளி அணி அச்சியற்றி விளக்கம்: இதில் அச்சிடப்படவேண்டிய குறியுரு திட்டமான புள்ளிகளாக இருக்கும். அச்சுத்தலையில் பல வரிசை நுண் ஊசிகள் இருக்கும். அச்சிடப்பட வேண்டிய உருக்கள் நினைவகத்திலிருந்து ஒரு சமயம் ஓர் உரு நினை வகத்திலிருந்து அச்சியற்றிக்கு அனுப்பப்படும். அச்சியற்றி மின்னணுப் பகுதிகளால் உருக்குறிமுறை விளக்கப்பட்டு, அவை ஓர் அச்சுத் தலையிலுள்ள உரிய ஊசிகளால் இயக்கப்படும். இவ்வச்சியற்றிகளில் பல இரு திசையுள்ளவை. இட வலமாகவும் வலம் இடமாகவும் அச்சி யற்றுபவை. இச்செயல் அச்சு விரைவை உயர்த்தும். ஒரு வினாடிக்கு 300 உருக்கள் வரை அச்சியற்றப்படும். அச்சியற்றிகளில் சிறந்தது லேசர் அச்சியற்றி ஆகும். ஓ. Inkjet printer,Laser printer.

Download -To transfer programmes or data files from a computer to another computer. சுமை இறக்கல் : ஒரு கணிப் பொறியிலிருந்து மற்றொரு கணிப்பொறிக்கு நிகழ்நிரல்கள் அல்லது தகவல் கோப்புகளை மாற்றுதல். இணையத்தில் பயன்படுவது.

Down time -The time during which a computer is not functioning due to mechanical failUre. இறக்க நேரம் :எந்திரத் தவறினால் ஒரு கணிப்பொறி இயங்காமல் இருக்கும் நேரம்.

DRAM,Dynamic Random Access Memory- இயக்க வரம்பில் அணுக்க நினைவகம், இவஅதி : திட்ட மாண கணிப்பொறி நினைவகம், பிரிட்டிஷ் அறிவியலார் உருவாக்கியுள்ளது. இது ஒவ்வொரு இருமித் (0, 1) தகவ லையும் ஒரு சேம நுண்ணறையில் சேமிப்பது. மின் தேக்கி, படிகப்பெருக்கி ஆகிய இரண்டால் ஆனது. 5ஆம் தலைமுறைக் கணிப்பொறிகளில் அமைவதற்குத் தகுதி பெற்றது. பெருங் கண்டுபிடிப்பு (1999) ஓ. PLEDM.

Drive-Any device transporting some recording medium:eg.disk drive.-இயக்கி: ஒரு பதிவு ஊடகத்தைச் செலுத்தும் கருவி யமைப்பு. எ-டு வட்டு இயக்கி.

Drop -A remote terminal located within a terminal. வீழ்வி :தொலை முனை; முனைய வலையமைவில் அமைந்திருப்பது. Drop-down combo box -A kind of combo box.We can create it by adding a combo box to the form. கீழிறங்கு கூடுகைப் பெட்டி : ஒருவகைக் கூடுகைப் பெட்டி இப்பெட்டியைப் படிவத்தில் சேர்த்து இதை நாம் உரு வாக்கலாம்.

Drop-down list -combo box A kind of combo box. We can not add entries to the list We can create it by adding a combo box to the form. கீழிறங்கு பட்டி கூடுகைப் பெட்டி :ஒருவகைக் கூடுகைப் பெட்டி. பட்டியுடன் பதிவு களைச் சேர்க்க முடியாது நாம் படிவத்துடன் கூடுகைப் பெட்டியைக் சேர்த்து உருவாக்கலாம்.

Dróp-in -The accidental generation of unwanted bits during reading from or writing to a magnetic storage device. வீழ்தல் :ஒரு காந்தச் சேமிப் புக் கருவியமைப்பை எழுதும் பொழுது அல்லது படிக்கும் பொழுது தேவையில்லா இருமிகள் (பிட்டுகள்) தற்செயலாக உண்டாதல்.

Drop-out-A failure during reading or writing to a magnetic storage device. A loss of digits takes place. நீங்கல் : இது ஒரு தவறு. இது ஒரு காந்தச் சேமிப்புக் கருவியமைப்பைப் படிக்கும் பொழுது அல்லது எழுதும் பொழுது உண்டாவது, இதில் இரும எண்கள் இழப்பு ஏற்படும்.

Drop-out error -Loss of a recorded list due to some reason.நீங்கு பிழை: ஏதோ ஒருகாரணம் பற்றிப் பதிவானஇருமி இல்லாமல் போதல்.

Drum - A computer storage deVice.உருளை: கணிப்பொறிச் சேமிப்புக் கருவியமைப்பு.

Dry running -The checking, the logic and coding of a programme from a flow-chart and Written instructions, வெற்றோட்டம்: விதிமுறைப் படம், எழுதிய ஆணைக்குறிப்புகள் ஆகியவற்றிலிருந்து ஒரு நிகழ்நிரலைச் சரிபார்த்தலும் முறைமையாக்கலும் குறிமைப்படுத்தலும்.

DSL, Digital Subscriber Line - இலக்க உறுப்பினர்வழி, இஉவ: இக்காலத் தொழில்நுட்பம். குறிப்பிடத்தக்க விரைவு உண்டு. இலக்கத் தக வல்களை வசதியான தொகுதிகளாக மாற்றி இதைப் பெறலாம். இதற்கு இருபண்பி நுட்பம் (Modem Technology) பயன்படுகிறது.

DSL, kinds of -டிஎஸ்எல் லின் வகைகள்: இருவகை; 1) சமச்சீரற்ற இலக்க உறுப்பினர்

வழி (asymmetric DSL) ; இது ஒரு திசையில் மட்டும் விரைவாகச் செல்லக் கூடியது. 2 சமச்சீருள்ள இலக்க உறுப்பினர் வழி (symmetric DSL)இது இருதிசையில் எ-டு HDSL. இதற்கு ஈரிணைக் கம்பி வடங்கள் தேவை.

Dual disk drive -A floppy disk system with two drive mechanisms for increased capacity. இரட்டை வட்டு இயக்கி: அதிக கொள்திறனுக்காக இரு இயக்கு பொறி நுட்பங்களைக் கொண்ட நெகிழ்வட்டுத் தொகுதி.

Dummy -A device kept readyfor use. மாற்று : பயன்படுவதற்கு ஆயத் தமாக உள்ள கருவியமைப்பு.

Dummy instruction -An artificial instruction included in a list to serve some purpose other than execution as an instruction. மாற்று ஆணைக் கட்டளைக் குறிப்பு : ஒரு பட்டியில் சேர்க்கப்படும் செயற்கைக் கட்ட ளைக் குறிப்பு. நிறை வேற்றும் செயலாக இல்லாமல் வேறு ஒரு நோக்கத்திற்காகப் பயன் படுவது.

Dump -To display,print or store the contents of the computer's memory. திணி : கணிப்பொறி நினைவகத்தில் சேமித்தல், அச்சியற்றல், காட்டுதல் ஆகிய செயல்கள் இதில் அடங்கும்.

Duplex-A method of communicating between two devices which permit data transfer in both directions simultaneously. இருபகுதிச்செயற்பாடு : இரு கருவியமைப்புகளுக்கிடையே தகவல் தொடர்பு கொள்ளும் முறை. இதனால் தகவல் மாறுகை ஒரே சமயம் இருதிசைகளிலும் நடைபெறும்.

Duplicate field -A series of 12 punches in a programme card. இரட்டிப்புப்புலம் : ஒரு நிகழ் நிரல் அட்டையில் 12 பொத்தல்கள் வரிசையாக இருத்தல்.

Dynamic error -An error incurred in an analog device.It results from an inadequate frequency response of the equipment. இயக்கப் பிழை: ஓர் ஒப்புமைக் கருவியமைப்பில் ஏற்படும் பிழை. கருவித் தொகுதியின் நிகழ்வு போதாத் தூண்டலினால் ஏற்படுவது.

Dynamic storage -computer storage having capacitively charged circuit elements.The elements should be continually refreshed or recharged at regular intervals.இயக்கச் சேமிப்பு: கொள்திறன் மின்சுற்றுக் கூறுகள் கொண்ட கணிப்பொறிச் சேமிப்பு. இக்கூறுகள் தொடர்ச்சியாக ஒழுங்கான இடைவேளைகளில் மீள் மின்னேற்றம் செய்யப்பட வேண்டும்.

dynaturtle - The dynamic cursor used to produce graphics. இயக்க ஆமை : வரைகலையை உண்டாக்கப் பயன்படும் இயக்கக் குறிப்பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணிப்பொறி_அகராதி/D&oldid=1047042" இலிருந்து மீள்விக்கப்பட்டது