கணிப்பொறி அகராதி/J
jam - A machine fault- பழுது : எந்திரப் பிழை.
JAVA - ஜாவா : உயர்நிலை மொழி.
JAVA Bug - ஜாவா பிழை : ஜாவா மொழியில் ஏற்படும் குறை. நிகழ்நிரல்களைச் சிதைப்பது.
JVM, Java virtual machine - ஜேவிஎம், ஜாவா மாய ஏந்திரம்.
job - A programme and data to be processed by a computer. வேலை : நிகழ்நிரலும் தகவலும், கணிப்பொறியினால் முறையாக்கப்பட வேண்டியது.
job control language, JCL - வேலைக் கட்டுப்பாட்டு மொழி, வேகமொ : ஓர் இயங்கு தொகுதியோடு தொடர்புள்ள மொழி.
job control programme - The instructions to the operating system stating the conditions necessary to run a job, eg. input | output requirements. வேலைக் கட்டுப்பாட்டு நிகழ் நிரல் : இயங்கு தொகுதிக்குரிய கட்டளைகள் வேலையைச் செய்வதற்குத் தேவையான நிபந்தனைகளைக் கூறுவது எடுத்துக்காட்டு : உட்பலன் / வெளிப்பலன் தேவைகள்.
Joss - A time sharing language. ஜாஸ் : நேரப்பகிர்வு மொழி.
JOVIAL - A programming language based on international algebraic language, ஜோவியல் : நிகழ்நிரலாக்கும் மொழி, அனைத்துலக இயற் கணித மொழியின் அடிப்படையில் அமைந்தது.
journal - A file containing messages within an operating system.
தாள்குறிப்பு : ஓர் இயங்கு தொகுதியிலுள்ள கோப்பு: செய்திகளைக் கொண்டது. joystick - A vertical lever moving the cursor vertically or horizontally. கட்டுப்பாட்டுக்கோல் : செங் குத்துக்கோல் குறிப்பியைச் செங்குத்தாக அல்லது கிடைமட்டமாக நகர்த்துவது.
jump - An instruction in machine code causing a computer to stop executing a programme to move to another part of the programme. தாவல்: எந்திரக் குறிமுறையிலுள்ள கட்டளை ஒரு நிகழ் நிரல் நிறைவேறுவதை நிறுத்தி, அதை மற்றொரு நிகழ்நிரலின் ஒரு பகுதிக்குச் செல்லுமாறு கணிப்பொறியைச் செய்வது.
junk- Garbled data, eg, signals accumulating in communications. கூளம் : குழம்பிய தகவல் எடு செய்தித் தொடர்பில் குவியும் குறிகைகள்.
justification- Spacing of text or graphics to produce an even vertically aligned right or left hand margin. நெருக்கிச் செய்தல் : பாடம் அல்லது வரைகலைக்கு இடைவெளிவிட்டுச் செங்குத்தாகவும் சமமாகவும் வரிசையாகவும் உள்ளதுமான விளிம்பு அல்லது ஓரத்தை இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் அமைத்தல்.ஒ.indentation.