உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



24 ‘துன்னருந் துப்பின் வென்வேல் வானவன் இகலிருங் கானத்துக் கொல்லி போல', (அகம். 338 ) எனவும், ‘மறமிகு தானைப் பசும்பூட் பொறையன் கொல்லி' (அகம். 303) எனவும், 'வெல்போர் வானவன் கொல்லிக் குடவரை' (அகம். 213) எனவும் போதரும் நல்லிசைப் புலவர்களது பாடல்களால் உணர்க. இரவலர்கட்கீந்து அதனால் இசைபட வாழ்ந்த நமது வள்ளலது பெருவாழ்வும் நல்லறிஞர் பலரும் இரங்கி வருந்துமாறு இங்ஙனம் முடிவெய்தியது. ஊழின் வலியை இந்நிலவுலகத்து யாவர்தாம் கடத்தல் கூடும்? இனி, இவனது கொல்லிமலையில் அமைக்கப்பெற்றிருந்த கொல்லிப் பாவையைப்பற்றிய செய்திகளையும் ஈண்டுக் குறிப்பிடுதல் பொருத்தமுடையதேயாகும். செந்தமிழ்ப் புலவர்கள் அழகிற் சிறந்த பெண்டிர்களுக்கு இப்பாவையை உவமானமாகக் கொண்டு 'கொல்லியம்பாவையன்னாய்' என்று குறிப்பிடுதல் பெருவழக் காவுள்ளமையின், இது பேரழகு வாய்ந்ததொரு பாவையாயிருத்தல் வேண்டும். இது கண்டார் உள்ளமும் விழியும் கவர்ந்து காமவேட்டைவருவித்து இறுதியிற் கொல்லத்தக்கதாகக் கடவுளாலேயே அமைக்கப்பெற்ற ஒரு மோகினிப்படிமம் என்று கூறுகின்றனர். இப்பாவை, கடவுளால் காக்கப்படுவதென்பதும், காற்று, மழை, இடி முதலிய இடையூறுகளால் தன் உருக்கெடாமல் என்றும் தன் இயல்பு குன்றாதிருப்பது என்பதும், ‘கொல்லித் . தெய்வங் காக்குந் தீதுதீர் நெடுங்கோட் டவ்வெள் ளருவிக் குடவரை யகத்துக் கால்பொரு திடிப்பினுங் கதழுறை கடுகினு - முருமுடன் றெறியினு மூறுபல தோன்றினும் பெருநிலங் கிளரினுத் திருநல வுருவின் மாயா வியற்கைப் பாவை' (நற்றிணை 201) என்ற பாடலால் நன்கு புலப்படுகின்றன. அன்றியும், கொல்லி நிலைபெறு கடவுளாக்கிய பலர்புகழ் பாவை' என்னும் அகப்பாட்டானும் (அகம். 209) 'பெரும்பூட் பொறையன் பேஎ முதிர் கொல்லிக்-கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய - நல்லி யற்பாவை' என்னுங் குறுந்தொகைப்