உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



18 பொய்கையார் போலவும், கோப்பெருஞ்சோழற்குப் பிசிராந்தையார் பொத்தியார் போலவும், அதியமான் நெடுமானஞ்சிக்கு ஔவையாரே பெரிதும் நட்புரிமைபூண்டவராவர். இவன் றன்பால் என்னைக்கும் ஒருபடியான பேரன்பே பூண்டிருந்தனனென்பதை, ஒருநாட் செல்லலமிரு நாட்செல்லலம் பலநாட் பயின்று பலரொடு செல்லினுந் தலைநாட் போன்ற விருப்பினன்மாதோ வணிபூணணிந்தயானையியறே ரதியமான் (புறம். 101) என்னும் செய்யுளடிகளில் நன்குவிளக்கி ஔவையார் பெரிதும் புகழ்ந்திருக்கின்றனர். இவ்வள்ளலது முன்னோர்களே தேவர்களைப் போற்றி வழிபட்டும் அவர்கட்கு வேள்விக்கண் ஆவுதியையருந்துவித்தும் விண்ணுலகிலிருந்து பெறற்கரிய கரும்பை இவ்வுலகிற் கொணர்ந்தனரென்பது, "அமரர்ப்பேணியு மாவுதியருத்தியு மரும்பெறன் மரபிற்கரும்பிவட்டந்து நீரகவிருக்கையாழிசூட்டிய தொன்னிலை மரபினின் முன்னோர்போல" என்னும் புறப்பாட்டினடிகளால் அறியப்படுகின்றது. இம்மழவர்பெருமான் யுத்தத்திற் பேர்பெற்றவீரன். இவன் பரணர்' என்னும் நல்லிசைப் புலவர்புகழ்ந்து பாடும்படி கோவலூரை வென்றானென்று 99-ம் புறப்பாடல் அறிவிக்கின்றது. அன்றியும், இவன் றனக்குப்பகைவர்களாய ஏழரசருடன் செய்துவாகை மிலைந்தனன்... இதனை , "...அமையாய்செருவேட் டிமிழ்குரன்முரசினெழுவ ரொடுமுரணிச் சென்ற மர்கடந்து நின்னாற்ற றோன்றிய வன்றும்பாடுநர்க்கரியை 3. அதிகமான் வீரமுங் கொடையும் பற்றிப் பரணராற் புகழ்ந்துபாடப்பட்டுள்ளான் என்பது கீழ்க்குறித்த அகநானூற்றுச்செய்யுட்களால் விளங்கும்: நெடுநெறிக்குதிரைக்கூர்வேலஞ்சி கடுமுனையலைத்தகொடுவிலாடவராகொள் பூசலிற்பாடுசிறந்தெரியும் பெருந்தொடி" (அகம். 372) "..... வாய்மொழி நல்லிசைபிழைப்பறியக்கழறொடியதியன்" (அகம். 162) 4. அவர்களது நாடுகளையும் கைப்பற்றிக்கொண்டனன் என்பர் புறநானூற்றுரையாசிரியர்.