பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

முதற் குலோத்துங்க சோழன்

படிமமும் இவன் பட்டத்தரசி வானவன் மாதேவி படிமமும் தஞ்சாவூரிலுள்ள இராசராசேச்சுரத்தில் இவனது மகளாகிய குந்தவையால் எழுந்தருளுவிக்கப்பெற்றுப் பூசனைக்கு நிபந்தங்களும் விடப்பட்டுள்ளன.[1] இவ்வேந்தனது ஆட்சிக்காலத்திறுதியில் இவன் முதல் மகன் ஆதித்த கரிகாலன் இளவரசுப்பட்டங் கட்டப்பெற்றான். இவன் பெருவீரன்; பாண்டியனைப் போரில் வென்றமை பற்றி 'வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி வர்மன்' எனப் பாராட்டப்பெற்றனன். சில ஆண்டுகளுக்குள் இவன் பகைவரது சூழ்ச்சியாற் கொல்லப்பட்டனன்.

பின்னர், கண்டராதித்தரது திருமகனாகிய உத்தம சோழன் கி. பி. 970-ல் பட்டத்திற்கு வந்தான். இவனுக்கு மதுராந்தகன் என்ற பெயரும் உண்டு. கி.பி. 985-ல் உத்தம சோழன் இறக்கவே, இரண்டாம் பராந்தகசோழனது இரண்டாவது மகனாகிய முதலாம் இராசராசசோழன் அரியணை ஏறினான்.

சோழமன்னருள் பல்வகையானும் பெருமையுற்றுப் பெருவீரனாய் விளங்கியவன் இவ்வேந்தனே என்று கூறுவது சிறிதும் புனைந்துரையாகாது. இவனது ஆளுகையில் சோழமண்டலம் மிக உயரிய நிலைமை! எய்திற்று. திருநாரையூரில் வாழ்ந்த ஆதிசைவராகிய நம்பியாண்டார் நம்பி என்னும் பெரியாரைக் கொண்டு சைவ சமய குரவர்களது திருப்பதிகங்களைத் திருமுறைளாகத் தொகுப்பித்தவன் இம்மன்னனே யென்பர். இவனுக்கு அக்காலத்தில் இட்டு வழங்கிய சிவபாத-


  1. 11. South Indian Inscrptions Vol. II No. 6.