சமயநிலை
59
கைக்கொண்டொழுகும் தம் நாட்டு மக்களை வெறுத்துப் பல்லாற்றானும் துன்புறுத்தும் அரசர் சிலர்போல இம் மன்னர் பெருமான் புறச்சமயங்களில் சிறிதும் வெறுப்புக் காட்டியவன் அல்லன். இதற்குச் சில சான்றுகள் எடுத்துக்காட்டிச் சிறிது விளக்குவாம்.
சோழ இராச்சியத்திலுள்ள பல வைணவ சமண பௌத்தக் கோயில்கள்தோறும் இவனுடைய கல்வெட் டுக்கள் காணப்படுகின்றன. தஞ்சாவூர் ஜில்லாவைச் சார்ந்த மன்னார்குடியிலுள்ளதும் இப்போது இராச கோபாலசாமி கோயில் என்று வழங்கப்பெறுவதுமாகிய திருமால்கோட்டம் இவன் பெயரால் எடுப்பிக்கப்பெற்ற தொன்றாம். ' குலோத்துங்க சோழ விண்ணகரம்' என்பது; அதற்குரிய பழைய பெயர். அன்றியும் நாகப்பட்டினத்தின்கண் கடார [1]த்தரசனாகிய சூடாமணிவர்மனால் கட்டத் தொடங்கப்பெற்று அவனது மகனாகியமாற விசயோத்துங்கவர்மனால் முடிக்கப்பெற்ற இராசராசப் பெரும்பள்ளி என்னும் புத்தவிகாரத்திற்கு நம் குலோத்துங்கன் விளைநிலங்களை நிபந்தமாகவிட்டிருக்கிறான். கி. பி. 1090-ல் இக்கோயிலுக்கு இவ்வேந்தன் விட்ட நிபந்தங்களை யுணர்த்தும் செப்பேடுகள்'[2]ஹாலண்டு ' தேயத்திலுள்ள ' லெய்டன்' நகரத்துப் பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டிருத்தலை இன்றுங்காணலாம். இத்தகைய செய்திகளை யாராய்ந்து உண்மை காணுமிடத்து, இவன் தன் காலத்து வழங்கிய எல்லாச் சமயங்களிடத்தும் பொது நோக்குடையவனாய் அவற்றை