பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல்

89

இவை முறையே கி. பி. 1001, கி. பி. 1086, கி. பி. 1216ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தவையாகும்.

நிலம் அளந்தகோலை 'உலகளந்தகோல்' என்று வழங்குவர். இக்கோல் பதினாறுசாண் நீளமுடையது. நிலங்களை நீர்நிலம், கொல்லை, காடு என்று வகுத்துள்ளனர். இவற்றுள், நீர் நிலம் கொல்லை என்பன முறையே நன்செய் புன்செய்களாகும். நிலங்கள் நூறுகுழிகொண்டது ஒருமா ஆகவும் இருபதுமா கொண்டது ஒரு வேலியாகவும் அளக்கப்பெற்றன. வேலி ஒன்றுக்கு நூற்றுக்கல விளைவுள்ளதும் அதற்குக் கீழ்ப்பட்டதுமென நிலங்கள் இருதரமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அந்நாளில் நிலத்தின் எத்துணைச் சிறுபகுதியும் விடாமல் நுட்பமாக அளக்கப்பெற்றுள்ளது என்பது - 'இறையிலி நீங்கு நிலம் முக்காலை இரண்டுமாக்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழ் அரையே இரண்டுமா முக்காணிக்கீழ் முக்காலே நான்குமா அரைக்காணி முந்திரிகைக்கீழ் நான்குமாவினால் இறைகட்டின காணிக்கடன்' என்பதனால் நன்கு விளங்கும். நிலத்தையளந்து எல்லையறிந்து அங்குப் புள்ளடிக்கல் நடுவது வழக்கம் என்பதும் பல கல்வெட் டுக்களால் அறியப்படுகின்றது.

7. இறையிலி :--நம் குலோத்துங்கனது ஆட்சிக் காலத்தில் வரி விதிக்கப்பெறாமல் ஒதுக்கப்பெற்ற நிலங்கள் யாவை என்பது முன்னரே விளக்கப்பட்டது. சைவ வைணவ திருக்கோயில்களுக்கு இறையிலியாக அளிக்கப்பட்ட நிலங்கள் தேவதானம் எனவும், சைன பௌத்த கோயில்களுக்கு அளிக்கப்பெற்றவை பள்ளிச் சந்தம் எனவும் பார்ப்பனர்க்கு விடப்பெற்றவை பிரம -