பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போர்ச்செயல்கள்

49

டிற்கு முன்னர் நடைபெற்ற போராகும் [1];" வடகலிங்க வேந்தனாகிய அனந்தவன்மன் என்பானோடு குலோத்துங்கன் நடாத்தியது." [2]வடகலிங்கத்திற்கு நேரிற்சென்று இப்போரை வெற்றியுற நடாத்தித் திரும்பியவன் குலோத்துங்கனது படைத்தலைவர்களுள் முதல்வனாகிய கருணாகரத் தொண்டைமானே யாவன். இவனோடு வாணகோவரையன், முடிகொண்ட சோழன் என்ற இரண்டு படைத்தலைவர்களும் அங்குச் சென்றிருந்தனர்.[3] குலோத்துங்கனது ஆட்சியில் நடந்த போர்களுள் இதுவே இறுதியில் நடந்தது. வடகலிங்கத்தில் நடந்த இப்போர் நிகழ்ச்சியை விரித்துக்கூறும் நூல் கலிங்கத்துப் பரணி என்பது. அந்நூல் இப்போரைப்பற்றியுணர்த்தும் செய்திகளை அடியிற் காண்க.

ஒருநாள் நம் குலோத்துங்கன் காஞ்சிமாநகரிலுள்ள அரண்மனையில் ஓவியமண்டபத்து வீற்றிருந்தபோது, வாயில்காப்போரில் ஒருவன் ஓடிவந்து அரசனது அடிகளை முடியுறவணங்கி, ' எம்பெருமானே, வேந்தர் பல்லோர் திறைப்பொருள் கொணர்ந்து கடைவாயிலின் கண் காத்துக்கொண்டிருக்கின்றனர்' என்றனன். அதனைக் கேட்ட அரசன் 'அன்னாரை விடுக' என,

'தென்னவர் வில்லவர் கூவகர் சாவகர் சேதிபர் யாதவரே கன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே கங்கர் கடாரர் கவிந்தர் துமிந்தர் கடம்பர் நுளும்பர்களே

வங்கர் இலாடர் மராடர் விராடர் மயிந்தர் சயிந்தர்களே


  1. S. I. I. Vol. IV, page 136
  2. Epi. Ind, Vol. III. page 337.Indin Antiquary Vol. 18. Pages 162 & 166.
  3. க. பரணி--தா. 352,மு. கு. 4