பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதின்மூன்றாம் அதிகாரம்



குலோத்துங்கனது அரசியல்


ம் குலோத்துங்கனது அரசியல் முறைகளை இனி விளக்குவாம். பொதுவாக நோக்குமிடத்துப் பழைய தமிழ் நூல்களாலும் கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் அறியப்படும் அரசாங்க முறைகள் எல்லாம் நம் மன்னர் பெருமானாகிய குலோத்துங்கனுக்கும் உரியவையென்றே கூறலாம். அவற்றை எல்லாம் ஆராய்ந்து ஒன்றையும் விடாது எழுதப்புகின் அவை ஒரு தனி நூலாக விரியும் என்பது திண்ணம். ஆதலால், அவ்வரசியல் முறைகளை மிகச் சுருக்கமாக எழுதி விளங்க வைத்தலே எமது நோக்கமாகும்.

1. இராச்சியத்தின் உட்பிரிவுகள் :-- நமது வேந்தர் பெருமானது ஆணையின் கீழ் அடங்கியிருந்த சோழ இராச்சியம் அக்காலத்தில் பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றுள், சோழமண்டலம், சயங் கொண்ட சோழமண்டலம், இராசராசப் பாண்டிமண் டலம், மும்முடி சோழமண்டலம், வேங்கைமண்டலம், மலைமண்டலம், அதிராசராசமண்டலம் என்பன சிறந்தவை. இவற்றுள், சோழமண்டலம் என்பது தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி ஜில்லாக்களையும் தென்னார்க்காடு ஜில்லாவின் தென்பகுதியையும் தன்னகத்துக்கொண்டுள்ள நிலப்பரப்பாகும் ; சயங்கொண்ட சோழமண்டலம் என்பது தென்னார்க்காடு ஜில்லாவின் பெரும்பகுதியையும்