பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல்

81

செங்கற்பட்டு, வடவார்க்காடு, சித்தூர் ஜில்லாக்களையும் தன்னகத்துக்கொண்டது ; இராசராசப் பாண்டி மண் டலம் என்பது மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்களைத் தன்னகத்துக்கொண்டது : மும்முடி சோழமண்டலம் என்பது ஈழமாகிய இலங்கையாகும் ; வேங்கைமண்டலம் என்பது கீழைச்சளுக்கிய நாடாகும்; மலைமண்டலம் என்பது சேர நாடாகும் ; இது திருவாங் கூர் இராச்சியத்தையும் மலையாளம் ஜில்லாவையும் சேலம் ஜில்லாவின் ஒரு பகுதியையும் தன்னகத்துக் கொண்டது ; அதிராசராசமண்டலம் என்பது கொங்கு நாடாகும் ; இது கோயம்புத்தூர் ஜில்லாவையும் சேலம் ஜில்லாவின் ஒரு பகுதியையும் தன்னகத்துக் கொண்டது.

இனி, ஒவ்வொரு மண்டலமும் பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. முதல் இராசராச சோழன் காலத் தில் சோழ்மண்டலம், இராசேந்திர சிங்கவளநாடு, இராசாசிரயவளநாடு, நித்தவிநோதவளநாடு, கூத்திரிய சிகாமணி வளநாடு, உய்யக்கொண்டார் வளநாடு, அருமொழிதேவ வளநாடு, கேரளாந்தக வளநாடு, இராசராச வளநாடு, பாண்டிய குலாசனி வளநாடு என்னும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.[1] பெரும்பான்மையாக நோக்குமிடத்து, ஒவ்வொரு வளநாடும் இரண்டிரண்டு பேராறுகளுக்கு இடையில் அமைந்திருந்த நிலப்பரப்பாகும். உதாரணமாக, உய்யக்கொண்டார் வளநாட்டை எடுத்துக்கொள்வோம். அஃது அரிசிலாந் றுக்கும் காவிரியாற்றுக்கும் இடையிலுள்ள நிலப்பரப்பு


1. S. I. I. Vol. II. Introduction pages from 1 to 27

மு. கு. 6

  1. 1. S. I. I. Vol. II. Introduction pages from 1 to 27 மு. கு. 6